27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
18 spiced peas r
சமையல் குறிப்புகள்

சுவையான காரமான பட்டாணி ரெசிபி

இதுவரை எத்தனையோ பட்டாணி ரெசிபிக்களைப் பார்த்திருப்போம். ஆனால் இங்கு பட்டாணி ரெசிபியானது வித்தியாசமாக இருப்பதுடன், மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டிருக்கும். மேலும் பட்டாணியில் கலோரிகள் குறைவாகவும், வைட்டமின் ஏ மற்றும் கே அதிக அளவிலும் உள்ளது.

எனவே பட்டாணி சீசன் முடிவதற்குள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள். இது மதிய உணவிற்கு ஒரு சிறந்த சைடு டிஷ்ஷாக இருக்கும். சரி, இப்போது அந்த காரமான பட்டாணி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்:

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 2 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

மல்லி – 1/2 டீஸ்பூன்

ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் – 1 (நறுக்கியது)

பட்டாணி – 500 கிராம்

இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 3-4 பற்கள் (நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

மிளகு தூள் – தேவையான அளவு

எலுமிச்சை – 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)

கொத்தமல்லி – சிறிது (அலங்கரிக்க)

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கடுகு சேர்த்து 1-2 நிமிடம் தாளித்து, பின் அதில் மல்லி, ஏலக்காய் பொடி, மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

பின்னர் அதில் பட்டாணி, இஞ்சி, பூண்டு, உப்பு மற்றும் மிளகு சேர்த்து, தீயை அதிகரித்து, 5 நிமிடம் தொடர்ந்து வதக்கி விட வேண்டும்.

பட்டாணியானது நன்கு வெந்துவிட்டால், இறுதியில் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கி, கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்தால், காரமான பட்டாணி ரெசிபி ரெடி!

Related posts

சுவையான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்

nathan

அரிசி மாவில் காய்கறிரொட்டி செய்முறை…..

sangika

கேரளா ஸ்டைல் வெங்காய புளிக்குழம்பு

nathan

இறால் கிரேவி

nathan

மெதுவடை செலவே இல்லாமல் வேண்டுமா?உளுந்து இல்லாமல் செய்வது எப்படி?

nathan

சுவையான மசாலா வடை குழம்பு

nathan

ஓவன் இல்லாமல் பிட்சா செய்வது எப்படி?

nathan

சுவையான காளான் மற்றும் பேபி கார்ன் மசாலா

nathan

புதினா தொக்கு

nathan