25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
325b038f dfda 4904 9840 873bbd56d630 S secvpf
பழரச வகைகள்

மாம்பழ பிர்னி

தேவையான பொருட்கள்:

நன்கு கனிந்த புளிப்பில்லாத மாம்பழம் – 2
அரிசி – 2 டே.ஸ்பூன்,
கெட்டியான பால் – 3 கப்,
சர்க்கரை – சுவைக்கு
ஏலப்பொடி சிறிதளவு,
சன்னமாக சீவிய பாதாம், பிஸ்தா, சாரைப்பருப்பு அலங்கரிக்க

செய்முறை :

• மாம்பழங்களை தோல்சீவி சன்னமாக நறுக்கி வைக்கவும்.

• அரிசியை 30 நிமிடம் ஊறவைத்து மை போல் அரைத்து கொள்ளவும்.

• அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

• அதில் அரைத்து வைத்துள்ள அரிசி விழுதைச் சேர்த்து கட்டியில்லாமல் கலந்துவிடவும். விழுது நன்கு வெந்து பளப்பளப்பான நிறம் வந்ததும் தேன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

• தேன் நன்றாக சேர்ந்து கொதிக்கத் தொடங்கியதும் இறக்கி சிறிது ஆறியதும், நறுக்கி வைத்துள்ள மாம்பழங்களை அலங்கரிக்கப்பதற்கு சிறிதளவு தனியாக வைத்துக்கொண்டு, மீதமுள்ளதை லேசாகப் பிசைந்து கூழ்போல் செய்து இறக்கி வைத்துள்ள பாலோடு கலந்து விட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும்.

• 2 நிமிடம் கழித்து நறுக்கிய மாம்பழம், பருப்புகளைத் தூவி அலங்கரிக்கவும்.

• குளிர்சாதனப் பெட்டியில் 1/2 மணி நேரம் வைத்திருந்து சில்லென்று பரிமாறவும். குளிர்ச்சி விரும்பாதவர்கள் அப்படியே அருந்தினாலும் நன்றாக இருக்கும்.325b038f dfda 4904 9840 873bbd56d630 S secvpf

Related posts

உடல் எடையை அதிகரிக்க உதவும் அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி

nathan

மேங்கோ பைனாபிள் லஸ்ஸி

nathan

சுவையான சீத்தாப்பழம் மில்க் ஷேக்

nathan

கோல்ட் காஃபீ

nathan

இஞ்சி கற்றாழை ஜூஸ்

nathan

கேரட் லஸ்ஸி

nathan

கோல்ட் (Cold) காபி

nathan

இளநீர் காக்டெயில்

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் லெமன் – புதினா ஜூஸ்

nathan