25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
16 kerala prawn pepper
அசைவ வகைகள்

சுவையான கேரளா ஸ்டைல்: இறால் பெப்பர் ப்ரை

இந்த வாரம் வீட்டில் என்ன சமைப்பது என்று யோசிக்கிறீங்களா? அப்படியானால் கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் ப்ரை ரெசிபியை முயற்சி செய்யுங்கள். இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸி. அதிலும் இறால் பிரியர்களுக்கு இந்த ரெசிபி ஒரு விருப்பமான ரெசிபியாக இருக்கும்.

இப்போது அந்த கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் ப்ரை ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

 

தேவையான பொருட்கள்:

இறால் – 250 கிராம் (சுத்தமாக கழுவியது)

பச்சை மிளகாய் – 4

இஞ்சி – 25 கிராம்

பூண்டு – 25 கிராம்

வெங்காயம் – 1

கறிவேப்பிலை – சிறிது

கொப்பரை தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்

மிளகு தூள் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள இறாலைப் போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஊற வைக்க வேண்டும்.

பின் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை ஓரளவு அரைத்து, அதனை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

பின்னர் அதில் இஞ்சி கலவையை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, வேண்டுமானால் தேவையான அளவு உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை 2-3 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும்.

குறிப்பாக, இறால் அளவுக்கு அதிகமாக வெந்துவிடக்கூடாது. இறுதியில் அதில் கொப்பரை தேங்காய் சேர்த்து பிரட்டினால், கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் ப்ரை ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Related posts

சுவையான நெத்திலி மாங்காய் குழம்பு

nathan

நெத்திலி மீன் அவியல்

nathan

சுவையான கல்மி கபாப்

nathan

மொச்சை நெத்திலி கருவாட்டு குழம்பு

nathan

கருவாட்டு ப்ரை(Karuvadu Fry)

nathan

இஞ்சி பெப்பர் சிக்கன்

nathan

சண்டே மட்டன் செய்யலாமா? இதோ உங்களுக்கான ஸ்பெஷல் கிச்சன் மட்டன் ரெசிப்பி. செய்து அசத்துங்கள்.

nathan

சிக்கன் பிரியாணி செய்முறை..

nathan

முட்டை – சிக்கன் சப்பாத்தி ரோல்

nathan