பொதுவாக நம்மில் சிலர் மாதவிடாய் நேரத்தை சரியாக சந்தித்தாலும் உதிரபோக்கு என்பது உரிய முறையில் இருக்காது.
மாதவிடாய் நேரத்தில் உதிரபோக்கு குறைவாக வருவதும் ஆரோக்கியமானதல்ல.
ஏனெனில் ஒவ்வொரு மாதமும் உதிரபோக்கு வெளிவராமல் கர்ப்பப்பையில் தங்கும் போது நாளடைவில் பிரச்சனையை உண்டாக்க வாய்ப்புண்டு.
இதனை போக்க கண்ட கண்ட மருந்துகளை தான் வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை.
வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கூட எளிய முறையில் இதற்கு தீர்வு வழங்க முடியும்.
அந்தவகையில் தற்போது அவை என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
- நெருஞ்சி முள் ஒரு டீஸ்பூன் இரண்டையும் சேர்த்து ஒரு அரை டம்ளர் நீரில் 8 மணி நேரம் ஊறவிடவும். மாதவிடாய்க்கு முன்பு ஒரு வாரத்திலிருந்து வெறும் வயிற்றில் காலை நேரத்த்தில் குடித்து வர வேண்டும். மாதவிடாய் வரும் நாள் வரை இதை குடித்து வர வேண்டும்.
- மாதவிடாய் வருவதற்கு முன்பு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் மோரில் பிரண்டை உப்பு அரை டீஸ்பூன் அளவு சேர்த்து குடிக்க வேண்டும். இவை உதிரபோக்கை கட்டுப்படுத்துவதோடு சூதகத்தால் உண்டாகும் வயிற்று வலியையும் குறைக்கும்.
- கிராம்பு, வெற்றிலை, கலாக்காய் , அன்னாசி, ஏலக்காய் ,அன்னாசிப்பழத்தை தோல் நீக்கி, மிக்ஸியில் மசித்து வெற்றிலையுடன் கிராம்பு, ஏலக்காய், கலாக்காய் மூன்றையும் இடித்து சேர்க்க வேண்டும். மாதவிடாய் வந்த பிறகு ஐந்தாம் நாளிலிருந்து தொடர்ந்து இதை மூன்று நாட்கள் குடிக்க வேண்டும். பிறகு 15 நாட்கள் கழித்து அடுத்து மூன்று நாட்கள் இதே போன்று குடிக்க வேண்டும்.
- உளுந்தையும் வெல்லத்தையும் சேர்த்து பொடித்து நல்லெண்ணெய் சேர்த்த உருண்டை தினம் இரண்டு சாப்பிட வேண்டும். எள்ளை வறுத்து பொடித்து வெல்லம் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி உருண்டையாக்கி சாப்பிடலாம்.