24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
06 ca
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிக்க சில மகத்தான வழிகள்!!!

முன்பெல்லாம் புற்றுநோய் என்றாலே அனைவருக்கும் பயமும் பீதியும் ஏற்படும். ஆனால் இப்போது அது சர்வ சாதாரணமாகி விட்டது. பல்வேறு வகையான புற்றுநோய்கள் இருந்தாலும், மார்பக புற்றுநோயின் தாக்கம் தான் தற்போது அதிக அளவில் உள்ளது.

பெண்களுக்கு வரும் இந்த மார்பக புற்றுநோய் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். சமீபத்திய ஆய்வின் படி, இந்தியாவின் பெரிய நகரங்களில் 28 பெண்களில் ஒருவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. கிராமப் பகுதிகளில் 60-க்கு ஒரு பெண் இந்நோயால் பாதிக்கப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

பரம்பரை மற்றும் இக்கால வாழ்க்கை முறையும் தான் மார்பகப் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன. பெரும் உயிர்க்கொல்லி நோயான இந்த மார்பக புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கான சில வழிகளைப் பார்ப்போம்.

தொடர் உடற்பயிற்சி

ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் என்ற கணக்கில் தொடர்ந்து முறையான உடற்பயிற்சிகளைச் செய்து வந்தாலே மார்பகப் புற்றுநோயைத் தவிர்க்க முடியும். உடலை வளைத்து வீட்டு வேலைகளைச் செய்தாலும் போதும்தான். இதனால் உடம்பிலுள்ள கொழுப்புச் சத்துக்கள் குறைவதால், மார்பகப் புற்றுநோயின் தாக்கமும் குறைவே!

போதைக்கு குட்-பை

மார்பகப் புற்றுநோய்க்கு மதுப் பழக்கமும் ஒரு முக்கியக் காரணம் என்று பல ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. ‘தண்ணி’ அடித்தால்தான் வாழ்க்கையா? ஆகையால் மதுப் பழக்கத்தை அறவே கைவிட்டு, பழச்சாறுகள் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மார்பகப் புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைக்கலாம்.

தாய்ப்பால் கொடுப்பது நன்று

இந்த நவீன உலகில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்தாலே அழகு போய்விடும் என நினைக்கும் தாய்மார்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்குத் தான் அதிக அளவில் மார்பகப் புற்றுநோய் தாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் தாய்ப்பால் கொடுக்கும் போது ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் அளவு குறைவதால், மார்பகப் புற்றுநோயின் தாக்கமும் குறைவு தான்.

உடல் எடை கூடுகிறதா? உஷார்!

பெண்கள் தங்கள் உடல் எடை அதிகரிக்காத அளவுக்கு கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, மாதவிலக்கு அறவே நின்ற பிறகு பெண்களின் எடை தாறுமாறாக எகிற நிறைய வாய்ப்புள்ளது. இதனால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்களும் அதிகம்.

நல்லா சாப்பிடணும்

பழங்களையும், காய்கறிகளையும் மட்டுமே உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் மிகுந்த உணவுகள் அதிகமாகச் சேர்த்தால் மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்புக்கள் அதிகம்.

நல்லதையே சாப்பிடணும்

டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களில் ரசாயனங்கள் கலந்திருப்பதால், அவற்றை பெண்கள் அறவே தவிர்ப்பது நல்லது. உணவுகளை அதிகமான வெப்பநிலையில் சமைப்பதும் புற்றுநோய்க்கான வாய்ப்புக்களை அதிகரிக்கிறது.

சூரிய நமஸ்காரம் செய்யுங்கோ!

புற்றுநோய்க்கு எதிரான ஹார்மோன்கள் சுரப்பதில் வைட்டமின்-டிக்குப் பெரும் பங்கு உண்டு. சூரிய ஒளியிலிருந்து இலவசமாகவே வைட்டமின் டி கிடைப்பதால், ஹாயாக வெயிலில் நடங்கள். ஆனால் அளவோடு நடங்கள், ஏனென்றால் தோல் புற்றுநோய் தாக்கும் ஆபத்து உள்ளது. குறிப்பாக அதிகாலை வெயிலில் நடப்பது மிகவும் நல்லது.

Related posts

கையில் உள்ள திருமண ரேகை உங்கள் திருமணத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

மாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா?.. பக்க விளைவுகள் ஏற்படும்..!

nathan

ஆயுர்வேத எண்ணெய் சிகிச்சையால் இவ்வளவு பலன்களா..!?

nathan

இவை தொடர்ந்து சாப்பிட்டு வர கெட்ட கொழுப்பினை கரைக்கும் வேலையை செய்திடும்!…

sangika

உங்கள் கோபம் குறைய வேண்டுமா? தயங்காமல் வெட்டுங்கள்!

nathan

கருப்பை நீர்கர்ட்டி, மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும் பத்த கோணாசனம்

nathan

காலம் மாறுகிறது: அம்மா வேலைக்கு செல்கிறார்.. அப்பா குழந்தைகளை கவனிக்கிறார்..

nathan

இளம் பெண்களை தாக்கும் சிறுநீரகத் தொற்று

nathan

இரட்டைக் குழந்தை பிறக்க வேண்டுமா? இதை முயன்று பாருங்கள்

nathan