பொதுவாக நம்மில் பலர் உடல் எடையை குறைக்க பல முயற்சிகள் பின்பற்றி வருகின்றார்கள்
ஆண்களும் சரி பெண்களும் ஜூஸ்கள், டயட்டுகள், உடற்பயிற்சிகள் போன்றவற்றை தினமும் செய்து கடுமையாக முயற்சி செய்து உடல் எடையை குறைத்து கொண்டே வருகின்றார்கள்.
அதுமட்டுமின்றி ஒருவரது உடல் எடையைக் குறைப்பதற்கு குறுக்குவழிகள் எதுவும் கிடையாதா என யோசிப்பதுண்டு.
அந்தவகையில் உடல் எடையைக் குறைக்கும் செயல்முறையை வேகப்படுத்துவதற்கு ஒரு சில பொருட்கள் உதவிபுரிகின்றது.
அதில் எலுமிச்சையும், வெந்தையும் ஒன்று. இவற்றில் எது மிகவும் சிறந்தது என்ற கேள்வியை பலருக்கு சந்தேகம் உண்டு.
தற்போது இதில் எது சிறந்தது என்றும் இதனை எடுத்து கொள்வதனால் என்ன நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம்.
எலுமிச்சை நீர்
எலுமிச்சை நீரைத் தயாரிக்கும் போது, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் பாதி நற்பதமான எலுமிச்சையைப் பிழிந்து கலந்து குடிக்க வேண்டும்.
வேண்டுமானால், சுவைக்காக அத்துடன் சிறிது புதினா இலைகள் மற்றும் தேனை சேர்த்து கலந்தும் குடிக்கலாம்.
எலுமிச்சை நீர் அல்லது எலுமிச்சை ஜூஸ் மிகவும் பிரபலமான பானம். இதை சூடாகவோ அல்லது குளிர்ச்சியுடனோ குடிக்கலாம்.
நன்மை என்ன?
எலுமிச்சையில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. ஆகவே எலுமிச்சை நீரைக் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதுடன், உடலுக்குத் தேவையான சத்துக்களும் கிடைக்கின்றன.
எலுமிச்சை நீர் முழுமையை ஊக்குவிக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இவை இரண்டுமே ஒருவரது உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது மிகவும் முக்கியமானதாகும்.
பல ஆய்வுகள் அதிகளவு நீரைக் குடிப்பது ஒருவரது உடல் எடையைக் குறைக்கும் செயல்முறையை விரைவுபடுத்த உதவுவதாக கூறுகிறது.
ஆகவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், நாள் முழுவதும் வெற்று நீரைக் குடிப்பதற்கு பதிலாக, எலுமிச்சை நீரைக் குடிப்பது நல்லது
வெந்தய நீர்
இரவு தூங்கும் முன் 10 கிராம் வெந்தய விதைகளை 2 கப் சுடுநீரில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
மறுநாய் காலையில் நீரை வடிகட்டி, அந்நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, வெந்தய விதைகளை வாயில் போட்டுமென்று சாப்பிட வேண்டும்.
நன்மை என்ன?
வெந்தய நீர் உடல் எடையைக் குறைக்க உதவும் சிறப்பான பானங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சிறிய விதையில் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இது பசியைக் கட்டுப்படுத்தவும், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கவும் உதவுகிறது.
வெந்தய விதைகளை மென்று சாப்பிடுவதன் மூலம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படுகிறது.
மேலும் வெந்தய விதைகளில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பண்புகள் நிறைந்துள்ளதால், இது உடல் எடையைக் குறைக்கும் செயல்முறையை வேகப்படுத்தும். அதோடு அதில் உள்ள குறிப்பிட்ட பொருள், வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
இவற்றில் எது சிறந்தது?
எலுமிச்சை நீர் மற்றும் வெந்தய நீர், இரண்டுமே உடல் எடையைக் குறைக்க சிறந்த பானங்கள் ஆகும்.
ஆகவே இரண்டையுமே எடுப்பது தான். அதற்கு வெந்தய நீரை காலையில் எழுந்ததும் குடிக்கலாம் மற்றும் எலுமிச்சை நீரை நாள் முழுவதும் வெறும் தண்ணீரை குடிப்பதற்கு பதிலாக குடிக்கலாம்