28.1 C
Chennai
Saturday, Aug 16, 2025
10 capsicum
​பொதுவானவை

சுவையான குஜராத்தி ஸ்டைல் குடைமிளகாய் பொரியல் !

குடைமிளகாயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருப்பதுடன், சமைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாகவும் இருக்கும். அத்தகைய குடைமிளகாயை குஜராத்தி ஸ்டைலில் பொரியல் செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள படி செய்து சாப்பிடுங்கள்.

மேலும் இந்த ரெசிபியானது மிகவும் வண்ணமயமாக இருக்கும். பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். இப்போது அந்த குஜராத்தி ஸ்டைல் குடைமிளகாய் பொரியல் ரெசிபியைப் பார்ப்போமா!!!

 

தேவையான பொருட்கள்:

சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிற குடைமிளகாய் – 2 கப் (நறுக்கியது)

கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

மல்லி தூள் – 1 டீஸ்பூன்

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

கடுகு – 1/4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் கடலை மாவு, மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒரு பௌலில் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள கடலை மாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து, தனியாக ஒரு பௌலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பிறகு குடைமிளகாய் சேர்த்து பாதியாக வேகும் வரை வதக்கி விட வேண்டும்.

பின் அதில் வறுத்து வைத்துள்ள மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, சிறிது நேரம் அனைத்து பொருட்களும் ஒன்று சேரும் வரை வேக வைத்து இறக்கினால், சுவையான குஜராத்தி ஸ்டைல் குடைமிளகாய் பொரியல் ரெடி!!!

Related posts

tamil name | தமிழ் பெயர்

nathan

சீனி சம்பல்

nathan

சளி, இருமலுக்கு மருந்தாகும் திப்பிலி ஸ்பெஷல் ரசம்

nathan

மனைவியின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்

nathan

தனியா ரசம்

nathan

கருப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

nathan

சமைக்கும் போது இவற்றை மறந்திடாதீர்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்த கூடியவை….

sangika

இந்திய பெண்கள் திருமணத்தைக் கண்டு அஞ்ச காரணம்

nathan

மட்டன் கீமா நோன்பு கஞ்சி : செய்முறைகளுடன்…!

nathan