27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
sl1363
சைவம்

ருசியான… மாங்காய் குழம்பு

தற்போது மார்கெட்டுகளில் மாங்காய் அதிக அளவில் கிடைக்கிறது. இந்த மாங்காயைப் பார்த்தாலே பலருக்கும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். ஆனால் அதை பச்சையாக சாப்பிட்டால், பற்கள் கூச ஆரம்பிக்கும். ஆகவே அதனை குழம்பு போன்று செய்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

இங்கு அந்த மாங்காய் குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

பெரிய மாங்காய் – 1
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தேங்காய் – 1/2 மூடி (துண்டுகளாக்கப்பட்டது)
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மல்லி – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 6
பூண்டு – 6 பற்கள்
இஞ்சி – 1 இன்ச்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1 கப்

செய்முறை:

முதலில் மாங்காயை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் தேங்காய், வரமிளகாய், பூண்டு, இஞ்சி, சீரகம் மற்றும் மல்லி ஆகியவற்றைப் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

பிறகு அதில் மாங்காய் துண்டுகள் மற்றும் வெல்லத்தைப் போட்டு நன்கு கிளறி, பின் அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறிவிட்டு, மிதமான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், ருசியான மாங்காய் குழம்பு ரெடி!!!sl1363

Related posts

பேபிகார்ன் கிரிஸ்பி ஃப்ரை

nathan

சோளம் மசாலா ரைஸ்

nathan

பனீர் பிரியாணி

nathan

ராகி பூரி

nathan

குழந்தைகளுக்கு சத்து நிறைந்த கேரட் சப்பாத்தி

nathan

தொண்டக்காய பாப்புல பொடி வேப்புடு

nathan

சுவையான தக்காளி குருமா

nathan

அப்பளக் கறி

nathan

பனீர் 65

nathan