28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
02 home remedie
முகப் பராமரிப்பு

பெண்களே உங்க முகத்தில் அசிங்கமாக தோல் உரிய ஆரம்பிக்கிறதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

எப்படி எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனரோ, அதேப் போல் வறட்சியான சருமம் உள்ளவர்களும் ஒருசில பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதில் குறிப்பாக தோல் உரிவது, எண்ணெய் பசையின்றி சருமம் சுருக்கங்களுடன் அசிங்கமாக காணப்படுவது போன்றவை முக்கியமானவை. எனவே இத்தகைய சரும வகையினர், தங்களது சருமத்தை எண்ணெய் பசையுடன் வைத்துக் கொண்டால், எவ்வித பிரச்சனையும் ஏற்படாது.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை, வறட்சியான சருமம் உள்ளவர்களின் முகத்தில் தோல் உரியாமல் எப்போதும் எண்ணெய் பசையுடன் வைத்துக் கொள்ள ஒருசில டிப்ஸ்களை கொடுத்துள்ளது. அவற்றை படித்து, அதன்படி செய்து வந்தால், சருமத்தில் அசிங்கமாக தோல் உரிவதைத் தடுக்கலாம்.

தயிர்

பால் பொருட்களில் ஒன்றான தயிரில் இயற்கையாகவே எண்ணெய் பசையானது இருப்பதுடன், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அதனை தினமும் சருமத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், தோல் உரிதலுக்கு காரணமான நுண்ணுயிரிகளை அழித்து, தோல் உரிதலைத் தடுக்கும். மேலும் தயிர் சருமத்தின் அழகை அதிகரித்து வெளிக்காட்டும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் வறட்சியான சருமத்தினருக்கு ஒரு அருமையான சரும பராமரிப்பு பொருள். அதற்கு வெறும் ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் போது முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யலாம் அல்லது வாரம் 2-3 முறை ஆலிவ் ஆயிலில், ரோஸ் வாட்டர், சிறு துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து முகத்தில் மாஸ்க் போடலாம்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லை வறட்சியான சருமத்தினர் தங்கள் சருமத்தில் பயன்படுத்தினால், அவை வறட்சியை போக்குவதுடன், சருமத்தில் எண்ணெய் பசையை தங்க வைப்பதுடன், இரத்த ஓட்டம் சீராக செல்லவும் உதவி புரியும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் கூட தோல் உரிதலை தடுக்கும். அதிலும் இரவில் படுக்கும் போது தேங்காய் எண்ணெயைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து உறங்கினால், தோல் உரிவது குறைந்து, சரும வறட்சியும் நீங்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தை மசித்து, அதில் தயிர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி நன்கு 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், சருமத்தில் உள்ள வறட்சி நீங்குவதுடன், சருமம் மென்மையாக இருக்கும்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும், தோல் உரிவது நின்றுவிடும். மேலும் இதனைக் கொண்டு வாரம் ஒருமுறை உடல் முழுவமும் இந்த எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து நன்கு ஊற வைத்து குளித்தால், அவை சரும வறட்சியை போக்குவதுடன், தோல் உரிவதையும் தடுக்கும்.

தேன்

தேனை தோல் உரியும் இடத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், அவை விரைவில் குணமாகிவிடும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயில் எண்ணெய் பசை அதிகம் இருப்பதால், இதனை சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால், அவை பாதிப்படைந்த சரும செல்களை சரிசெய்து, வறட்சியை நீக்கி, தோல் செதில்செதிலாக வருவதைத் தடுக்கும்.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இல்லை என்று சொல்வார்கள். அதேப் போல் ஆப்பிளை அரைத்து கூழாக்கி, அதனை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சரும வறட்சி நீங்கும்.

பாதாம் எண்ணெய்

வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு பாதாம் எண்ணெயும் மிகவும் சிறந்தது. அதற்கு பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரவில் படுக்கும் போது மசாஜ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பாதாம் இலையினை அரைத்து, அதனை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவினால், வறட்சியினால் ஏற்பட்ட காயங்களையும், வலியையும் உடனே போக்கலாம்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

Related posts

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை போக்க உதவும் கஸ்தூரி மஞ்சள்

nathan

எப்போதும் முகம் ப்ரெஷாக இருக்க சூப்பர் டிப்ஸ்…

nathan

உங்களுக்கு தெரியுமா முகம் பளபளன்னு இருக்க இந்த ரெண்டு பொருள் போதும்…

nathan

அழகு தரும் கஸ்தூரி மஞ்சள்

nathan

முகத்தில் இருக்கும் கருமையைப் போக்க மஞ்சளை எப்படி பயன்படுத்துவது?

nathan

கிளிசரினை இவ்வாறு பயன்படுத்தி முக அழகை பேணுங்கள்!…

sangika

சூப்பர் டிப்ஸ்! உங்கள் முகம் பளபளக்க வேண்டுமா? இதோ பத்து பயனுள்ள அழகு குறிப்புகள்

nathan

மூக்கில் வரும் கரும்புள்ளியை போக்கும் ஃபேஸ் பேக்

nathan

கன்னம் அழகாக சில குறிப்புகள்

nathan