பல நன்மைகளை வழங்கும் இளநீரை சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடிக்கலாமா? கூடாதா? என்பது விவாதத்திற்கு உரிய ஒரு கேள்வியாகும்.
ஏனெனில் இனிப்பு சுவை கொண்ட இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அதேசமயம் கலோரிகள் குறைவாக இருப்பதால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவும் என்று கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக இளநீர் குடிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சர்க்கரை நோய்க்கான ஆய்வில் இளநீர் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான உணவா என்னும் சோதனையை வெற்றிகரமாக 2015ல் கடந்தது.
சர்க்கரை உள்ளவர்கள் மட்டுமல்ல சர்க்கரை நோய் இல்லாதவர்கள் கூட தாங்கள் தினமும் குடிக்கும் இளநீரின் அளவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். ஏனெனில், ஆரோக்கியமான பானமாக இருந்தாலும் தேங்காய் நீரில் பிரக்டோஸ் உள்ளது, இதன் அளவு குறைவாக இருந்தாலும் (சுமார் 15%), பிரக்டோஸ் உங்கள் இரத்த சர்க்கரை அளவில் தலையிடக்கூடும்.
எவ்வளவு குடிக்க வேண்டும்?
ஒரு நாளைக்கு சராசரியாக 8 அவுன்ஸ் அதாவது இரண்டு முறை 250மிலி வரை தேங்காய் நீர் குடிக்கலாம்.
இந்த அளவு அதிகரிக்கும் போது அது உங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
குறிப்பாக இளநீரை வேறு பொருட்களுடன் சேர்க்காமல் அதன் இயற்கை வடிவத்திலேயே குடிப்பதுதான் நல்லது.
அது மாத்திரம் அல்ல, தேங்காய் நீர் வளர்சிதை மாற்றத்தைத் தூண்ட உதவுகிறது. இது உடலில் கொழுப்பை எரிக்கும் அளவையும் மற்றும் சர்க்கரையை எரியும் செயல்முறையை மேம்படுத்துகிறது.
நம் உடலுக்குள் தேங்காய் நீரின் இந்த செயல்பாடு நோயாளிகளுக்கு அதிக ஆற்றலையும், வீரியத்தையும் அளிக்க உதவுகிறது.