27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
625.500.560.350.160.300.053 3
மருத்துவ குறிப்பு

தலையணையை வைத்து தூங்குபவரா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கோ..!!

தலையணையை தலைக்கு வைத்து தூங்குவது என்பது பலரும் கடைபிடிக்கும் ஒரு முறையாகும்.

இது சுகமான தூக்கத்தை வழங்கக்கூடும். ஆனால் ஆரோக்கியமான தூக்கத்தை வழங்குமா என்றால் அது கேள்விக்குறிதான். ஏனெனில் தலையணை வைக்காமல் தூங்கும்போது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது

முகப்பரு
தலையணை இல்லாமல் தூங்குவது முகப்பரு வராமல் தடுக்க உதவும். தலையணை வைத்து தூங்கும்போது உங்கள் முகம் தலையணைக்கு உட்புறமாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் முகத்தில் பாக்டீரியாக்கள் பரவ மற்றும் அழுக்கு பரவ வாய்ப்புள்ளது. இது உங்கள் சருமத்தில் பருக்களை ஏற்படுத்தும்.

அலர்ஜி
தூசி அலர்ஜியால் அவதிப்படுபவர்கள் பலர் உள்ளனர்.மாற்றப்படாத தலையணை மற்றும் தலையணை உறைகள் இந்த பிரச்சினையை அதிகரிக்கும்.

மேலும் தலையணையில் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும் என்பதால் அலர்ஜி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

முதுகில் வலி
முதுகு வலியால் அவதிப்படுபவராக நீங்கள் இருந்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது தலையணை வைத்து தூங்குவதை தவிர்ப்பதுதான். ஏனெனில் உங்களுக்கு முதுகுவலி ஏற்பட முக்கிய காரணம் உங்களின் தலையணைதான். தலையணை இல்லாமல் தூங்கும்போது உங்கள் முதுகெலும்பு ஓய்வெடுக்க முடியும்.

மன அழுத்தம்
தவறான நிலையில் தூங்குவது கூட மனஅழுத்தத்தை அதிகரிக்கும். ஏன் சரியாக தூங்க முடியவில்லை என்ற எண்ணத்திலேயே நீங்கள் தூக்கத்தை இழக்க தொடுங்குவீர்கள். இதன் காரணமாக உங்கள் மனஅழுத்தம் அதிகரிக்கும். எனவே தலையணை இல்லாமல் தூங்கும்போது உங்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தின் அளவு குறைய அதிக வாய்ப்புள்ளது.

Related posts

நீங்க வெஜிடேரியனா? அப்ப நீங்க ரொம்ப நாள் உயிர் வாழ்வீங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்! தும்மல் தொடர்ச்சியா வருதா? அதிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் சில வழிகள்!

nathan

முதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ஆலோசனைகள்

nathan

இதுக்கு அர்த்தம் தெரிஞ்சா பீதியில உறைஞ்சிடுவீங்க…இது வெறும் அழற்சி இல்லங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்! வாதக்கோளாறுகளை விரட்ட… முடக்கத்தான் சாப்பிடுங்க!

nathan

ஒரு ஆய்வு தெரி விக்கிறது … முத்த மருத்துவம் (THE KISS TREATMENT)

nathan

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை

nathan

ஏலக்காயில் இவ்ளோ இருக்கா?

nathan

உங்களுக்கு தெரியுமா கெமிக்கல் இல்லாமல் உடல் ஆரோக்கியத்தை காக்கும் கருப்பட்டி

nathan