23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
13 1515823
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை எப்படி ஆரம்பிப்பது என குழப்பமா?

நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு மாறி உள்ளீர்களா. இருப்பினும் என்ன சாப்பிடுவது எப்படி உணவுப் பழக்கத்தை மேற்கொள்வது என்ற குழப்பம் உங்களுக்கு இருந்தால் அதற்கு நாங்கள் உதவப் போகிறோம்.

முதலில் இந்த உணவு முறையை உங்கள் உடல் ஏத்துக்க கஷ்டப்படுமா என்ற எண்ணற்ற கேள்விகள் உங்களிடம் இருந்தால் அதற்கும் விடை தருகிறோம். ஆரோக்கியமான உணவு முறை என்பது உடலை வருத்தி கஷ்டப்படுத்துவது கிடையாது. உடலுக்கு தேவையான ஊட்டத்துக்கள், ஆற்றல் எல்லாம் கிடைத்து அதன் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவது.

நாங்கள் கூறும் இந்த முறையை பின்பற்றினால் கண்டிப்பாக உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைப்பதோடு உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

அதற்காக உங்களுக்கு நாங்க 10 டிப்ஸ்களை கூற உள்ளோம். சரி வாங்க பார்க்கலாம்.

வெவ்வேறு வகையான உணவை எடுத்தல்

ஆரோக்கியமான உணவு முறை என்பது எல்லா நோய் களையும் எதிர்த்து போராடும் ஒரு அரும் மருந்து. ஆமாங்க நீங்கள் வெவ்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. மேலும் உணவுகளை நன்றாக சுத்தம் செய்து எந்த வித நச்சுக்களும் இல்லாமல் எடுத்து கொள்வதும் முக்கியம்.

கலோரிகளின் அளவின் படி சாப்பிடுதல்

உங்களுக்கு அதிகமாக பசிக்கும் போது எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ன சாப்பிட வேண்டும் என்ற வரைமுறை இல்லாமல் சாப்பிட்டு விடுவீர்கள். இது கண்டிப்பாக உங்கள் உடல் நலத்திற்கு நல்லது இல்லை. அதற்கு பதிலாக நீங்கள் உண்ணும் உணவின் கலோரிகளின் பட்டியலை படித்து தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல் சாப்பிடுவது நல்லது. இதனால் அதிக கொழுப்புகள் உங்கள் உடலில் தங்குவதை தவிர்க்கலாம்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்

நல்ல ப்ரஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளுங்கள். இவற்றில் உடல்க்கு தேவையான நார்ச்சத்து மற்றும் எல்லா சத்துக்களும் அடங்கியுள்ளன. இவைகள் நம்மை புற்று நோய் மற்றும் உயிரை குடிக்கும் நோய் களிலிருந்து காக்கும். பயிறு வகைகள், பீன்ஸ் போன்றவற்றை சேர்க்கவும். டப்பாக்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் வேண்டாம்.

முழுதானிய உணவுகள்

முழுதானிய வடிவில் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். முழுதானிய கோதுமை, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்றவை நம் உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. மேலும் இவைகள் உடல் எடை களை குறைக்க பயன்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட கோதுமை உணவுகளை தவிர்த்திடுங்கள்.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்தல்

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளான பிரட், பாஸ்தா, நொறுக்கு தீனிகள் போன்றவற்றைபல செயல்முறைக்கு உட்படுத்தி எல்லா சத்துக்களையும் உறிஞ்சி விடுகின்றன. அவற்றில் எந்த நார்ச்சத்தும் ஏன் எந்த வித சத்துக்களும் கிடைப்பதில்லை. எனவே இந்த உணவுகளை எடுக்காதீர்கள். சோடா போன்ற பானங்களில் அதிகமான சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இவை நமக்கு டயாபெட்டீஸ் நோய்க்கு வழி வகுக்கிறது. எனவே இந்த மாதிரியான செயல்முறைபடுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மீன் மற்றும் நட்ஸ் எடுத்து கொள்ளுங்கள்

மீனில் உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நட்ஸ் யிலும் நிறைய ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை நமக்கு எந்த விதத்திலும் உடல் எடையை அதிகரிப்பதில்லை.

சிவப்பு இறைச்சியை தவிருங்கள்

சிவப்பு இறைச்சியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்ட்ரால்கள் அதிகமாக உள்ளன. இவற்றை நாம் உண்ணும் போது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு கூடி இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது. எனவே சிக்கனின் மார்பு இறைச்சி, இறால் போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள். இவற்றில் நிறைய புரோட்டீன் சத்து உள்ளது.

செயற்கை கொழுப்பு சத்துக்களை தவிர்க்கவும்

செயற்கை கொழுப்புச் சத்துக்கள் பொதுவாக ஹைட்ரோ ஜெனரேட்டர் எண்ணெய்யில் காணப்படுகிறது. இந்த எண்ணெய்கள் பொதுவாக நாம் திண்ணும் நொறுக்கு தீனிகள், பேக்கிங் உணவுகள், பாஸ்ட் புட் போன்றவற்றில் பயன்படுகிறது. இவற்றை உண்ணும் போது இந்த செயற்கை கொழுப்பு சத்து நமது உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகரித்து நல்ல கொலஸ்ட்ராலை குறைத்து விடுகிறது. எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

பொட்டாசியம் அளவை அதிகரித்தல்

பொட்டாசியம் உடலுக்கு தேவையான முக்கியமான சத்தாகும். அதிக பொட்டாசியம் அடங்கிய பழங்களை சாப்பிடும் போது நம் உடலில் அதிகப்படியான உப்பால் ஏற்படும் இரத்த அழுத்த குறைவிற்கு உதவுகிறது. நம் உடல் நன்றாக செயல்பட பொட்டாசியம் முக்கியமான ஒன்றாகும்.

கால்சியம் மற்றும் விட்டமின் டி அளவை அறிதல்

கால்சியம் மற்றும் விட்டமின் டி நமது உடல் எலும்புகளுக்கு மிகவும் முக்கியம். இவற்றை பால் பொருட்கள் மூலம் பெறலாம். அல்லது கால்சிய மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுவதன் மூலமும் பெறலாம். நம் உடலில் கால்சியத்தை உறிஞ்ச விட்டமின் டி கண்டிப்பாக தேவை. எனவே விட்டமின் டியை சூரிய ஒளியின் மூலம் பெறலாம்.

அளவான ஆல்கஹால்

ஆல்கஹால் குறைவாக எடுத்தால் அதிகமான பாதிப்புகள் ஏற்படாது. ஆனால் அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் எடுக்கும் போது நமது உடலில் ஏராளமான பிரச்சினைகள் வந்து சேரும். எனவே குறைந்த அளவு ரெட் வொயின் எடுத்து கொள்ளுங்கள். ஆல்கஹாலை தவிர்த்து விட்டால் இன்னும் நல்லது. உடலில் எந்த வித பாதிப்புகளும் ஏற்படாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

Related posts

உருளைக் கிழங்கின் மருத்துவப் பயன்கள்

nathan

தெரிந்துகொள்வோமா? குழந்தை வளர்ப்பில் அம்மா முக்கியமா? அப்பா முக்கியமா?

nathan

உங்களுக்கு மூலநோய் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்

nathan

சித்த மருத்துவத்தில் சில முக்கிய நோய்களுக்கு மருந்துகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்திற்கு பின் பெண்கள் உடல் எடையை குறைக்க… என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

nathan

சர்க்கரை நோய் வராமல் தடுக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இளம் பருவத்தினரைப் பாதிக்கும் மன அழுத்தம்

nathan

கார்சினோஜென்கள் எப்படி புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பது தெரியுமா?

nathan

ஆண் குழந்தை வேண்டுமா?… ஆதிகாலத்தின் ரகசியம் இதோ…

nathan