suriya
Other News

17 ஆண்டுகால ரகசியத்தை உடைத்த இயக்குனர்..! சூர்யாவை இப்படித்தான் உயரமாகக் காட்டினோம்

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் காக்க காக்க.சூர்யா, ஜோதிகா கெரியரில் மிகவும் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று.

இந்நிலையில் 16 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க நினைக்கிறாராம் கவுதம் மேனன். சூர்யா படுபிசியாக இருப்பதால் அவருக்கு பதில் அன்புச் செல்வன் ஐபிஎஸ் அதிகாரியாக விஷாலை நடிக்க வைக்கலாமா என்ற யோசனையில் உள்ளாராம் கவுதம்.

அன்புச் செல்வன் என்றாலே சூர்யா என ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டது. அப்படி இருக்கும்போது அந்த கதாபாத்திரத்தில் விஷாலை நடிக்க வைப்பது எந்த அளவுக்கு ஒர்க்அவுட் ஆகும் என்று தெரியவில்லை.

இந்நிலையில், இயக்குனர் கௌதம் மேனன் காக்க காக்க படத்தில் சூர்யாவை எப்படி உயரமான ஆள் போல படம்பிடித்தோம் என்ற ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் கட்டுக்கோப்பாக உடலை வைத்துள்ள ஒரு சில நடிகர்களில் சூர்யாவும் ஒருவர்.

ஆனால் அவர் மற்ற கதாநாயகர்களை விட உயரம் குறைவு. அதனால் அவரை போலிஸ் அதிகாரியாக நடிக்கும் படங்களில் உயரமாக காட்ட சில ட்ரிக்ஸ்களை இயக்குனர் பயன்படுத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில் காக்க காக்க என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை சூர்யாவுக்குக் கொடுத்த கௌதம் மேனன் அந்த படத்தில் சூர்யாவை எப்படி உயரமாகக் காட்டினோம் என்ற தகவலை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அந்த படத்தின் 17 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி அளித்த பேட்டி ஒன்றில் ’சூர்யாவை உயரமானவராக காண்பிக்க பல ஷாட்களை லோ ஆங்கிளில் படம்பிடித்தோம். ’ என சொல்லியுள்ளார்.

Related posts

மது வாங்க வந்தவர்களை அடித்து விரட்டிய விஷால்

nathan

ரூ.1 கோடி வருவாய் ஈட்டும் நாகர்கோவில் டெக்னாலஜி ஸ்டார்ட்-அப்

nathan

அதிகாரம் கொண்ட பதவியை ஈர்க்கும் ராசியினர்… யார் யார்ன்னு தெரியுமா?

nathan

உங்க ராசிப்படி உங்களிடம் இருக்கும் மோசமான குணம் என்ன தெரியுமா?

nathan

புளி: செரிமான பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வு

nathan

“அவன் என்ன எனக்கு மாமனா ” வாய்க்கு வந்தபடி வசைபாடிய மாயா ………

nathan

ஏஎல் விஜய் மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

நடிகை பத்மினியின் ஒரே மகனை பாத்துருக்கீங்களா?

nathan

ரட்சிதா மஹாலக்ஷ்மியின் கலக்கலான லேட்டஸ்ட் புகைப்படங்கள்

nathan