24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
New Project 2020 02
Other News

அடேங்கப்பா! வைரலாகும் விஜய்யின் கல்லூரி கால புகைப்படம்!

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தளபதி விஜய்க்கு ரசிகர்களின் எண்ணிக்கை கடல் போன்றது. இவரின் படமோ, அல்லது அது சம்பந்தமான அப்டேட் வெளியாகும்போது அதனை இணையத்தில் மாஸாக ட்ரெண்ட் செய்வார்கள். இதற்கிடையே தற்போது ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதோடு மாளவிகா மோகனன்,  ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் விஜய்யின் நண்பர்களான சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்திற்கு இசை அனிருத்.


இதன் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதற்கிடையே கொரோனா வைரஸ் தாக்கத்தால் ’மாஸ்டர்’ படத்தின் வெளியீடு தள்ளிப் போயிருக்கிறது.  முன்னதாக ஏப்ரல் 9-ஆம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், விஜய்யின் சில பழைய புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகின. அதில் குறிப்பாக லயோலா கல்லூரியில் விஜய், எடுத்துக்கொண்ட குரூப் ஃபோட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

இதனை நடிகர் சஞ்சீவ் வெளியிட்டிருந்தார். கல்லூரி நாட்களையும்,  நண்பர்களையும் நினைவு கூறுவதாக அந்த படத்துடன் குறிப்பிட்டிருந்தார் சஞ்சீவ். படத்தில் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, வித்தியாசமாக உடை அணிந்து ஸ்டைலிஷாக, காட்சியளிக்கிறார் விஜய். ரசிகர்கள் இந்த படத்தை வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Related posts

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரம்

nathan

Dora Bujji BREAKUP !! டோரா கூறிய அதிர்ச்சி தகவல்!!

nathan

சுவையான குடைமிளகாய் சாம்பார்

nathan

சிவராத்திரியில் நடக்கும் கிரக பெயர்ச்சி

nathan

அயோத்தி ராமர் கோவில் செல்லும் முன் ரஜினி சொல்லிவிட்டு சென்ற விஷயம்

nathan

அந்தரங்கப் பகுதியில் எண்ணெயை ஊற்றிய மனைவி…!

nathan

கேரள அருகே கிறிஸ்தவ வழிபாடு கூடத்தில் வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு..!

nathan

அடேங்கப்பா! இதுவரை இல்லாத அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சியில் இறங்கும் கொழுக் மொழுக் நடிகை..!

nathan

வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் தல தோனி

nathan