தசைகளையும். தசை நார்களையும் தாக்கும் காயங்களின் வகை தான் சுளுக்கும். இறுக்கமும். ஆற்றல் அளிக்கும் திறனை முழுவதுமாக பயன்படுத்திவிட்டால், தசைகளில் வலியும் ஏற்படுவதுண்டு. அதனால் தசைகளில் தேவையற்ற பொருட்கள் தேங்கிவிடும்.
தசை வலியால் உங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாட முடியாமல் போகலாம் அல்லது முக்கியமான அலுவலக சந்திப்புகளில் பங்கு கொள்ள முடியாமல் போகலாம். வலியில் இருந்து வேகமான நிவாரணியை பெற, வலிக்கான காரணத்தை முதலில் கண்டறிவது முக்கியமானது. தசை வலியில் இருந்து மீண்டு, இயல்பு நிலைக்கு வர சில முக்கியமான தீர்வுகளை நாங்கள் விளக்கியுள்ளோம்.
காரணத்தை கண்டறியுங்கள்
தசை வலிக்கான தீர்வை கண்டுபிடிப்பதற்கு முன், முதலில் அதற்கான காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியமானது. வலியில் இருந்து முழுமையான நிவாரணத்தை பெற, தசை வலிக்கான மூல காரணத்திலிருந்து விலகியே இருங்கள்.
போதுமான ஓய்வு
போதுமான ஓய்வு என்பது தசை வலிக்கான முக்கிய சிகிச்சைகளில் ஒன்றாக விளங்குகிறது. இதனால் உங்கள் தசைகள் ஓய்வெடுக்கும். மிதமான வலி நிலவும் போது, உங்கள் உடலுக்கு தேவையானது எல்லாம், ஒரு இரவு முழுவதுமான ஓய்வு. தசை வலியை அதிகரிக்கும் அசைவுகளில் ஈடுபடாதீர்கள்.
மசாஜ்
தசை வலியை போக்க மற்றொரு சிறந்த வழியாக மசாஜ் திகழ்கிறது. இப்படி செய்வதால் உங்கள் இரத்த ஓட்டம் அதிகரித்து, வழிக்கு உடனடி நிவாரணம் அளிக்கும். வலி ஏற்படும் பகுதியில், ஒரு திசையை நோக்கி, மிதமான அழுத்தம் தந்து, மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
ஐஸ் பேக்
தசைகள் விறைப்பாக இருக்கும் பட்சத்தில், ஐஸ் பேக் உதவியை கொண்டு தசை வலியை நீக்கலாம். தசை வலியோடு சேர்த்து வீக்கமும் இருந்தால், ஐஸ் பேக்கை கொண்டு குறைந்தது 20 நிமிடங்களுக்காவது ஒத்தனம் கொடுங்கள். தசை வலியை நீக்கும் சிறந்த சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.
ஈரமான வெப்பம்
தசை வலியில் இருந்து சிறந்த நிவாரணத்தை பெற ஈரமான வெப்பமும் உதவி செய்யும். அதற்கு எப்சம் உப்பை சூடான நீரில் போட்டு குளியல் அல்லது சவுனா சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் இப்படி ஈரமான வெப்பத்தில் வெளிப்படும் போது நரம்புகள் அனைத்தும் தளர்வு பெறும்.
நறுமண எண்ணெய்
தசை வலிக்கு சிறந்த முறையில் நிவாரணம் அளிக்க பல நறுமண எண்ணெய்கள் கிடைக்கின்றன. ஒன்று அல்லது இரண்டு சொட்டு நறுமண எண்ணெயுடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெயை கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்க்கவும்.
சூடான குளியல்
நரம்புகளின் வாயிலாக வலி குறிகளை வலுவிழக்கச் செய்யும் தன்மையை கொண்டுள்ளது வெப்பம். அதனால், உங்களுக்கு தசை வலி இருக்கும் பட்சத்தில், சூடான நீரில் குளியுங்கள். இது சுலபமான சிகிச்சையாக மட்டுமல்லாது, சிறந்த சிகிச்சையாகவும் திகழ்கிறது. இதனால் தசை வலி வேகமாக நீங்கும்.
அசைவு
விறைப்பான தசைகளினால் தான் வலி ஏற்பட்டுள்ளது என்றால், அவ்வலியை நீக்க தசைகளுக்கு மிதமான அசைவுகளை கொடுக்க வேண்டும். மிதமான உடற்பயிற்சிகள் உங்கள் பிரச்சனையை தீர்க்க உதவும். தசை சுளுக்குக்கு பல விதமான மறுசீரமைப்பு உடற்பயிற்சிகள் இருக்கிறது.
ஒத்தனம்
கடுமையான தசை வலி ஏற்படும் போது, இதுவே அதற்கான சிறந்த நிவாரணியாக விளங்கும். குளிர்ந்த மற்றும் சூடான ஒத்தனம் கொடுத்தால், தசை வலி நீங்க உதவியாக இருக்கும். தசை வலியின் காரணத்தை பொறுத்து, குளிர்ந்த ஒத்தனமா அல்லது சூடான ஒத்தனமா என்று முடிவு செய்யுங்கள்.
நீட்சி (Stretching)
தசை வலிக்கு வேகமான தீர்வை அளிக்கும் வழிகளில் ஒன்றான நீட்சி முறை, வெகுவாக பரிந்துரைக்கப்படுகிறது. தசைகளை நன்றாக இழுத்து நீட்டுங்கள். இவ்வகை உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன், எந்த ஒரு மருத்துவ ரீதியான பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மருத்துவ ஆலோசனையை பெற்றிடுங்கள்.