தமிழில் பிரபல காமெடி நடிகை என்றால் நம் நினைவிற்கு வருவது மனோரமா,கவுண்டமணி, செந்தில், வடிவேலு தான். ஆனால் பெண் காமெடியன்கள் என்று விரல்விட்டு எண்ணி பார்த்தால் குறைவுதான்.
அத்தவகையில் திரைப்படங்களில் மிக சிறந்தமுறையில் தனது நடிப்பால் மக்களின் மனதில் நீங்கா மனோரமாவுக்கு பின்பு இருப்பவர் நடிகை இடம்பிடித்தவா் கோவை சரளா மட்டும்தான்.
காமெடி நாயகியாகயாலும் கமல் உள்ளிட்ட மாபெரும் நடிகருக்கு ஹீரோயின்னகா நடிக்க முடியும் என நிரூபித்தவர் நடிகை கோவை சரளா. 1983ல் பாக்கியராஜின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் முதல்முறையாக திரையுலகுக்கு அறிமுகமானார் கோவை சரளா.
இவா் இதுவரை 750க்கும் அதிகமான படங்களில் நடித்தும் இருக்கிறார். 2008க்கு பின்பு அவருக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. இதையடுத்து 2013ல் காஞ்சனா திரைபடம் மூலம் வாய்ப்பை பெற்று மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார் கோவை சரளா. இதற்கு காரணம் என்ன என்று யாரிடமும் கூறாமல் இருந்து வருகிறார்.