25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.500.560.350.160.300.053.80 25
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…தாங்க முடியாத தலைவலியா? இதனை எப்படி இயற்கை முறையில் போக்கலாம்?

தலைவலி என்பது இயல்பாகவே அதிகளவு பணிசுமையின் காரணமாக அனைவருக்கும் வர கூடியதாகும்.

இதன் காரணமாக நமக்கு காய்ச்சல், குமட்டல் மற்றும் பிற உடல் உபாதைகள், மன உளைச்சல்கள் போன்றவை ஏற்படுகிறது.

இதனால் எந்த வேலையையும் செய்ய முடியாது. எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும்.

இதனை எளிய முறையில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டு எளிய முறையில் போக்க முடியும்.

அந்தவகையில் தற்போது அந்த பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

 

 

 

 

 

  • இஞ்சி டீ போட்டுக் குடிப்பதால் தலைவலியால் உண்டாகும் குமட்டல் போன்ற பிரச்னைகளும் இருக்காது. எனவே தண்ணீர் கொதிக்க வைத்து டீ தூள், இஞ்சி சாறு , தேன் கலந்து சூடாக குடியுங்கள். தலைவலி குறையும்.

 

  • புதினா இலைகளும் தலைவலிக்கு நல்லது, பெப்பர் மிண்ட் எண்ணெயுடன் பாதாம் எண்ணெய் 3 சொட்டு கலந்து நெற்றியில் தேய்த்துக்கொள்வதால் வலி குறையும். அல்லது தண்ணீரில் இலைகளை கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்கலாம்.

 

  • இலவங்கப்பட்டையை அரைத்து பொடியாக்கி அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ளுங்கள். அதை உங்கள் நெற்றில் பத்து போடுவதுபோல் போட்டுக்கொண்டு ஓய்வு எடுத்தால் தலைவலி குணமாகும்.

 

  • உங்கள் கழுத்தின் பின்புறத்தில் ஐஸ் கட்டி வைப்பதால் தலைவலி நீங்கும். அதிலிருந்து வரும் குளிர் தலைவலியை ஏற்படுத்தும் வீக்கத்தைக் குறைக்க உதவும் அல்லது உங்கள் கால்களை சூடான நீரில் மூழ்க வைத்து அமர்வதாலும் தலைவலியிலிருந்து விடுபட உதவும்.

 

  • சில கிராம்புகளை பொடியாக்கி வைத்துக்கொண்டால் உங்களுக்கு தலைவலி ஏற்படும் போதெல்லாம், அதன் வாசனையை உள்ளிழுக்கவும். இதனால் தலைவலியைக் குறைக்கலாம் அல்லது 2 தேக்கரண்டி கிராம்பு எண்ணெயை ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்துகொண்டு நெற்றியில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள்.

 

  • துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் கொஞ்சம் டீ தூள் சேர்த்து தேன் கலந்து குடிப்பதால் தலைவலி நீங்கும்.

 

  • நிம்மதியான தூக்கம் உங்கள் தலைவலியைப் போக்க போதுமானது. இவை அனைத்தும் உடனடியான நிவாரணிகள் மட்டுமே. தொடர்ச்சியான நாட்பட்ட தலைவலிக்கு முறையாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்

Related posts

பரிட்சையில் தோல்வியடையும் மாணவர்கள் கவனிக்க வேண்டியவை

nathan

புற்று நோய் எதிர்ப்பு சக்தி – மங்குஸ்தான் பழம்

nathan

பெண்களை தொடரும் பாலியல் தொல்லைகள்

nathan

இதயநோய் வராமல் தடுக்கும் சீதாப்பழம்

nathan

இதோ எளிய நிவாரணம்! பிரசவத்திற்கு பின் தொங்கும் தொப்பையைக் குறைக்க உதவும் சில வழிகள்!

nathan

சூப்பர் டிப்ஸ்! தினமும் காலையில தண்ணீர் குடிச்சா இத்தனை நன்மைகளா?

nathan

இன்சுலின் சுரக்க உதவுகிறது ஆப்பிள்!

nathan

கண்டிப்பாக வாசியுங்க…. நீங்கள் போதுமான நீர் குடிக்காவிட்டால் உண்டாகும் பின்விளைவுகள் தெரியுமா?

nathan

உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan