29.7 C
Chennai
Wednesday, Jul 16, 2025
201610251028538133 Do not do these things definitely have a menstrual period SECVPF
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிந்துகொள்ளுங்கள்! கருக்கலைப்பிற்கு பின் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

கருக்கலைப்பு செய்த பின்னர் உடலில் ஒருசில மாற்றங்கள் ஏற்படும் என்பது தெரியுமா? பொதுவாக கருக்கலைப்பு செய்தால், பெண்களின் மனநிலை மட்டுமின்றி, உடல் நிலையும் சற்று பாதிக்கப்படும். தற்போது உலகில் உள்ள 15 மில்லியன் பெண்கள் ஒருசில காரணங்களால் கருக்கலைப்பு செய்கின்றனர். இப்படி கருக்கலைப்பு செய்வதால், அதனை பெண்களால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடியாது.

எவ்வளவு தான் முடிவு எடுத்து கருக்கலைப்பு செய்தாலும், அதனை பெண்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இங்கு தமிழ் போல்ட் ஸ்கை கருக்கலைப்பு செய்த பின்னர் உடலில் ஏற்படும் ஒருசில பிரச்சனைகள் மற்றும் மாற்றங்களை பட்டியலிட்டுள்ளது. பெரும்பாலானோருக்கு கரு கலைந்தால், இரத்தப்போக்கு தொடர்ச்சியாகவும், அதிகமாகவும் இருக்கும் என்பது தெரியும். ஆனால் இன்னும் நிறைய பிரச்சனைகள் மற்றும் மாற்றங்களை பெண்கள் சந்திப்பார்கள். சரி, அதைப் பார்ப்போமா!!!

மார்பகங்கள் வீங்குதல்

கருக்கலைப்பு செய்தால், மார்பகங்கள் வீங்கவோ அல்லது தளர்ந்தோ இருக்கும். எனவே சிறிது நாட்களுக்கு தளர்வான பிரா அணிய வேண்டும்.

பிடிப்புக்கள்

கருக்கலைப்பு செய்த பின்னர், தொடர்ந்து 1-2 வாரங்களுக்கு இரத்தப்போக்கு அதிகம் இருக்கும். அதுமட்டுமின்றி, இரத்த உறைவு ஏற்பட்டிருப்பது வெளியேற்றப்படுவதால், அவை கடுமையான வயிற்றுப் பிடிப்புக்களை ஏற்படுத்தும்.

இரத்தப்போக்கு

கருக்கலைப்பிற்கு பின், அவ்வப்போது லேசான இரத்தப்போக்கு ஏற்படும். அத்துடன் கடுமையான வயிற்று வலியையும் சந்திக்கக்கூடும்.

எடை அதிகரிப்பு

சில பெண்களுக்கு கருக்கலைப்பிற்கு பின் உடல் பருமனடையும். இருப்பினும் சில பெண்களுக்கு மன இறுக்கத்தினால், சரியாக சாப்பிட முடியாமல், உடல் எடை குறைய ஆரம்பிக்கும். இவை அனைத்தும் பெண்களின் மனநிலையைப் பொறுத்தது.

முதுகு வலி

கருக்கலைப்பிற்கு பின் பெண்கள் கடுமையான முதுகு வலியை சந்திப்பார்கள். மேலும் நீண்ட நேரம் உட்கார்ந்தால், வலியானது இன்னும் அதிகரித்து, நிலைமையை மோசமாக்கிவிடும்.

வலியுடன் கூடிய செக்ஸ்

கருக்கலைப்பினால் கருப்பை வாயானது புண்ணாக இருப்பதால், அப்போது உடலுறவில் ஈடுபட்டால், கடுமையான வலியை சந்திக்கக்கூடும். எனவே கருக்கலைப்பிற்கு பின் 3 வாரத்திற்கு உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

மலச்சிக்கல்

கருக்கலைப்பிற்கு பின் உடலில் இரும்புச்சத்தின் அளவு குறைவாக இருப்பதால், மருத்துவர்கள் இரும்புச்சத்துள்ள மாத்திரைகளை எடுத்துக் கொள்ள பரிந்துரைப்பார்கள். இப்படி இரும்புச்சத்துள்ள மாத்திரைகளை எடுக்கும் போது, அவை மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

ப்ரௌன் நிற கசிவுகள் வெளியேறும்

கருக்கலைப்பிற்கு பின்பு ப்ரௌன் நிற கசிவுகள் பிறப்புறுப்பின் வழியாக அதிகம் வெளியேறும். இதற்கு முக்கிய காரணம், கருக்கலைப்பிற்கு பின் உடலானது தானாக சுத்தம் செய்ய ஆரம்பிக்கும். அப்படி ஆரம்பிப்பதால் வெளியேறுவதாகும். ஆனால் இந்த கசிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசும் போது, கடுமையான காய்ச்சலால் அவஸ்தைப்படக்கூடும்.

வயிற்று உப்புசம்

கருக்கலைப்பு செய்த பின்னர், அடிவயிறானது உப்புசத்துடன் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் இரத்தப்போக்கு மட்டுமின்றி, ஹார்மோன் மாற்றங்களும் தான்.

மாதவிடாய் சுழற்சி

கருக்கலைப்பை தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் ஓவுலேசன் சுழற்சியானது ஆரம்பித்துவிடும். சிலருக்கு 4-8 வாரங்களுக்குள் மாதவிடாய் சுழற்சியானது ஆரம்பமாகிவிடும்.

Related posts

முழங்கால் வலி தாங்க முடியலையா? சூப்பர் டிப்ஸ்……

nathan

திருமணத்திற்கு பின்பும் காதலிக்கலாம்

nathan

யாருக்கெல்லாம் மார்பக புற்றுநோய் அதிகம் தாக்க சந்தர்ப்பங்கள் இருக்கிறது?

nathan

ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

nathan

கர்ப்பிணிகள் அவசியம் செய்ய வேண்டிய 4 மூச்சுப் பயிற்சிகள்!!

nathan

இதமான, இனிமையான குட்டித் தூக்கம்… பலன்கள், பக்கவிளைவுகள்!

nathan

அசிடிட்டி பிரச்சனைக்கு உடனடி தீர்வளிக்கும் சீரகம்!!!

nathan

தேவையான முதலுதவி பற்றி அறிந்து வைத்திருப்போம்!படிக்கத் தவறாதீர்கள்

nathan

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கூந்தல் உதிர்வு

nathan