அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

உடல் அழகைப் பேணும் அற்புதமான 5 இயற்கை குறிப்புகள்

body

1. வீட்டில் இருந்தபடியே உடல் அழகைப் பேணும் எலுமிச்சை, பேதியுப்பு (எப்சம் உப்பு) மற்றும் ஆலிவ் எண்ணெய்
எலுமிச்சை சாறு, எப்சம் உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் இவை எல்லாம் வீட்டிலேயே கிடைக்கும் உடல் தேய்ப்பதற்கு கிடைக்கும் ஒரு பெரிய இயற்கை நிவாரணிகள். எப்சம் உப்பு இயற்கையாகவே தோலை மென்மையாக மாற்றும் மற்றும் இறந்த சரும செல்கள் அகற்ற‌ உதவுகிறது, வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை சாறு, உங்கள் தோலை மென்மையாகவும், அழகாகவும் செய்யும் ஒரு இயற்கை பொருள், மற்றும் ஆலிவ் எண்ணெய் நம் சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிற‌து. ஆலிவ் எண்ணெய் மற்றும் எப்சம் உப்பு தலா ஒரு தேக்கரண்டி கலந்து சிறிது எலுமிச்சை சாறு (நீங்கள் விரும்பும் அளவு) சேர்க்கவும். இதை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை நம் உடல் முழுதும் தேய்த்து குளிக்க, நம் தோல் பளிச்சென்றும், மென்மையாகவும் மாறுவதை கண்கூடாக காணலாம்.


2. வீட்டில் இருந்தபடியே உடல் அழகைப் பேணும் பாதாம் மற்றும் தேன்
ஒரு கைப்பிடி அளவு பாதாமை அரைத்துக் கொண்டு, இதனுடன் 1 அல்லது 2 ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும், இதனுடன் தேவையான அளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து, தேவையான பதத்திற்கு கலக்கிக் கொள்ளவும். இறந்த செல்களை நீக்கவும், புத்துணர்ச்சியோடு இருக்கவும் இது ஒரு நல்ல இயற்கயான ஸ்கரப். இதை முகத்திற்கும், உடலிற்கும் பயன்படுத்தலாம். தேன் பாக்டீரியாவையும், கருந்திட்டுக்களையும் அழிப்பதற்கும் உத‌வுகிறது.
3. வீட்டில் இருந்தபடியே உடல் அழகைப் பேணும்  ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஸ்கரப்
ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஸ்கரப்ஸ் வீட்டிலேயே உள்ள மிகவும் பிரபலமான ஒன்று. இது இரண்டையும் கலந்து தேய்ப்பதால், அனைத்து இறந்த செல்கள் அழிவதோடு, தோலும் மென்மையாக மாறுகிறது. இதை முகத்திற்கும், உடலிற்கும் பயன்படுத்தலாம். ஆனால் இதை மசாஜ் செய்யும் போது மிகவும் மென்மையான செய்ய வேண்டும். உங்கள் தோல் சென்சிடிவ் என்றால், முகத்தில் ப‌யன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
4. வீட்டில் இருந்தபடியே உடல் அழகைப் பேணும்  சர்க்கரை ஸ்கரப்.
நீங்கள் வெளியே போய்தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருக்கும் வெறும் சர்க்கரை மற்றும் தண்ணீர் இருந்தால் போதும். கொஞ்சம் பழுப்பு சர்க்கரை, நீர்  கலந்து கொண்டு இதை தேய்த்துதான் பாருங்களேன். அதிசயதகக் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
5. வீட்டில் இருந்தபடியே உடல் அழகைப் பேணும் முட்டை மற்றும் புளிப்பு கிரீம் ஸ்கரப்
ஒரு முட்டை ஓட்டை அரைத்துக்கொண்டு இதனுடன், ஒரு முட்டையின் மஞ்சள் கரு மற்றும் சில புளிப்பு கிரீம் கலந்து தேய்க்கவும். உலர்ந்த சருமம் உள்ளவர்களுக்கான அருமையான ஸ்கரப். இதை 5-10 நிமிடங்கள் தடவி விட்டு க‌ழுவினால் உங்கள் தோல் புத்துணர்ச்சியோடு ஒளிர்வதை காண்பீர்கள்.

Related posts

இனி முதுகை மறைக்க வேண்டாம்

nathan

சூர்யா ஜோதிகாவின் ரீல் மகளா இது? நம்ப முடியலையே…

nathan

மார்பு பகுதியை அழகுடன் வைத்து கொள்ள வழிகள்!…..

nathan

நள்ளிரவில் மர்மான முறையில் இறந்துகிடந்த இளம் நடிகை -வெளிவந்த தகவல் !

nathan

குளிக்கும் முன் 10 நிமிஷம் இதை மட்டும் செய்து பாருங்க! சூப்பர் டிப்ஸ்…

nathan

வீட்டை விட்டு வெளியேறிய ஆலியா பட்…!!! திருமணம் முடிந்த பிறகு…

nathan

அக்காவிற்கு ஆதரவாக சவுந்தர்யா டுவிட் – ‘எங்களுக்கு எங்க அப்பா இருக்காரு..’

nathan

சருமப் பராமரிப்பு

nathan

கசிந்த ரகசியம் இதோ! சனம் ஷெட்டி 3வது காதல் வயப்பட்டது எப்படி தெரியுமா?

nathan