சுட்டெரிக்கும் கோடைக்காலத்தில் நமது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தின் அளவு அதிகமாக இருக்கும். குறைவான தண்ணீரும் மற்றும் ஈரப்பதமும் இருப்பதால் தான் நமக்கு உடலில் தேவையான தண்ணீரின் அளவு குறைந்து விடுகிறது. குறிப்பாக கடுமையாக வறண்டு கிடக்கும் கோடைக்காலங்களில் தோல் அடுக்குகளின் கீழுள்ள தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து விடும். உடலின் நீர்ச்சத்து குறைந்து விடுவது ஒன்றும் நல்ல விஷயம் அல்ல.
போதுமான அளவு தண்ணீரைக் குடித்து, உடலை பராமரித்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய கடமையாகும். கோடைக்காலத்தின் காரணமாக வழக்கமாக உங்களுடைய உடலுக்குத் தேவையான தண்ணீரை விட அதிகமான அளவு தண்ணீர் தேவைப்படும். எனவே தான், கோடைக்காலத்தில் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது.
உடலிலிருந்து நீராவியாக தண்ணீர் வெளியேறுவதால், நம் உடலின் தண்ணீர் குறைகிறது. மேலும் வியர்வை மற்றும் சிறுநீர் வழியாகவும் தண்ணீர் வெளியேறுகிறது. வியர்வை வெளியேறும் போது, நமது உடலில் உள்ள உப்பில் கணிசமான அளவும் குறைந்துவிடுகிறது. எனவே, இவ்வாறு இழக்கப்படும் உப்புக்கு ஈடாக, தண்ணீரைக் குடிக்க வேண்டியது அவசியமாகிறது. உடலின் தண்ணீர் அளவைப் பராமரிக்க நாம் செய்ய வேண்டியவைகளைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
உப்பு மற்றும் சர்க்கரைத் தண்ணீர்
உப்பு மற்றும் சர்க்கரைக் கரைசலைப் பல காலமாகவே உடலின் நீர்ச்சத்தைப் பராமரிக்கும் வழிமுறையாக பயன்படுத்தி வருகிறது. இந்த கரைசலை தயாரிக்கும் வழிமுறையை அறிவோமா? ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி, அதில் அரை தேக்கரண்டி உப்பையும், ஒரு தேக்கரண்டி சர்க்கரையையும் போட்டு நன்றாகக் கலக்கவும். சர்க்கரை கரைய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும், எனவே ஒரு சர்க்கரைத் துணுக்கு கூட இல்லாதவாறு சர்க்கரை கரையும் வரையிலும் கலக்கவும்.
பழச்சாறுகள்
இப்பொழுது கடைகளில் பல்வேறு விதமான பழச்சாறுகள் கிடைப்பதை நீங்கள் அறிவீர்கள். ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழச்சாறு தயாரிக்க உதவும் பழங்கள் சிலவற்றையே நீங்கள் வாங்க வேண்டும். ஒரே பழத்தைப் போட்டு எளிமையான பழச்சாற்றையோ அல்லது ஒன்றிரண்டு பழங்களைப் போட்டு ஃபுரூட் மிக்ஸ் பழச்சாறாகவோ கூட நீங்கள் தயாரிக்கலாம். இந்த பழச்சாறுகளில் சிறிதளவு உப்பைப் போடுவதன் மூலம், அவற்றின் சுவையை மேலும் கூட்ட முடியும்.
குடை
சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு நீங்கள் செல்கிறீர்கள் என்றால், சூரியக் கதிர்கள் நேரடியாக உங்களுடைய தோலில் படாதவாறு இருக்க ஒரு குடையை உடன் கொண்டு செல்வது உத்தமம். நேரடியாக உடலில் விழும் சூரியக் கதிர்கள் உங்களுடைய தோலை கருமையடையச் செய்வதுடன், களைப்படையவம் செய்யும். சூரிய ஒளியில் வைட்டமின் டி இருந்தாலும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, குடையின் கீழ் நடந்து வெய்யிலை சமாளிக்க முயற்சி செய்யுங்கள்.
தண்ணீர்
தொடர்ச்சியாக தண்ணீரைக் குடித்து வருவதும், நீர்மச்சத்து குறைவதைத் தடுக்கும் வழிமுறையாகும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 டம்ளர் தண்ணீரையாவது நீங்கள் குடித்திருந்தால், கோடைக்காலத்தின் வெப்பம் உங்களை முழுமையாக வறட்சி அடையச் செய்வதிலிருந்து தப்ப முடியும்.
எலுமிச்சை ஜூஸ்
உடலின் நீர்மச்சத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உங்களை புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும் வேலையை எலுமிச்சைப் பழத்தின் இயற்கையான சத்துக்கள் சிறப்பாக செய்கின்றன. ஆகவே ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எலுமிச்சை ஜூஸைக் குடித்து உடலின் நீர்மச்சத்துக்கள் குறையாதவாறு காத்துக் கொள்ளுங்கள்.
boldsky