22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
08 06 treat wart
Other News

இதோ எளிய நிவாரணம்! மருக்களை போக்கும் சில எளிய கை வைத்தியங்கள்!

மருக்கள், பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சந்தித்து வரும் பொதுவான பிரச்சினையாக உள்ளது. மருக்கள், கேடு விளைவிக்காத மனித பாபில்லோமா வைரஸ்கள் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், இவை உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவக்கூடியவை. சருமம், வாய், பிறப்புறுப்பு, ஆசன வாய் பகுதி போன்ற உடலின் பல்வேறு பாகங்களிலும் இவை உண்டாகலாம்.

சருமக் கட்டிகள் என்றும் அழைக்கப்படும் இவற்றை சாதாரண மருக்கள், பாதத்தில் வரும் மருக்கள், தட்டையான மருக்கள் மற்றும் பிறப்புறுப்பு மருக்கள் என்று பல்வகைப்படுத்தலாம். சருமத்தின் மீது கடினமான வீக்கங்கள் போல் தோன்றும் இவை, பொதுவாக விரல்கள், முழங்கைகள், முழங்கால்கள், முகம் மற்றும் உச்சந்தலை போன்ற உடல் பாகங்களில் ஏற்படுகின்றன.

பெரும்பாலும் வைரஸ் தொற்றினால் உண்டாவதாக சொல்லப்படும் இம்மருக்கள், சரும மேல்பாக வளர்ச்சியின் போது குறிப்பிட்ட சில பகுதிகளில் ஏற்படக்கூடிய சில குறைபாடுகளினாலும் உண்டாகலாம். மருக்களை சில கை வைத்தியங்கள் மூலம் குணமாக்கலாம். இவற்றுள் சில வைத்தியங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆளி விதை

ஆளி விதை என்ற ஆயிர்வேத பொருளை பேஸ்ட் போல் தயாரித்து, பாத்திக்கப்பட்ட பகுதியில் பத்து போட்டால், மருக்களை குணப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனை தயார் செய்ய, ஆளி விதையை அரைத்து, அதனுடன் ஆளி விதை எண்ணெய் மற்றும் சுத்தமான தேன் சிறிதளவு சேர்த்து கலக்கவும். இந்த பத்தை மருவின் மீது தடவி, அதன் மேல் பான்டேஜ் ஒட்டவும். இந்த பத்தை தினமும் புதிதாக தயாரித்து உபயோகிப்பது நல்லது.

பூண்டு

பூண்டு பல் ஒன்றை நசுக்கி, பாதிக்கப்பட்ட பாகத்தின் மேல் தடவுவது மற்றுமொரு மிகச்சிறந்த வைத்தியமாகும். அவ்வாறு தடவி, அதன் மேல் பான்டேஜ் ஒன்றை ஒட்டி விடுங்கள்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தை அவ்வப்போது வெட்டி, பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவி வருவது மருக்களை குணமாக்குவதற்கான சக்தி வாய்ந்த மருத்துவ முறையாகும்.

அத்திப்பழம்

அத்திப்பழத் தண்டுகளில் இருந்து சாறு எடுத்து, அதனை ஒரு நாளில் பலமுறை, பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவி வருவது மருக்களைப் போக்குவதற்கான சிறந்த மருத்துவ முறைகளுள் ஒன்றாகும்.

வெங்காயம்

நறுக்கிய வெங்காயத் துண்டை ஒரு இரவு முழுவதும் வினிகரில் ஊற வைக்கவும். காலையில், இந்த ஊறிய வெங்காயத் துண்டை மருவிருக்கும் பகுதியின் மீது வைத்து, அதன் மீது பான்டேஜ் ஒட்டவும்.

கற்பூர எண்ணெய்

கற்பூர எண்ணெய், மருக்களை போக்குவதில் தன் ஆற்றலை பலமுறை நிரூபித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதியின் மீது கற்பூர எண்ணெயை ஒரு நாளில் பலமுறை தடவி வர வேண்டும்.

உருளைக்கிழங்கு/சுண்ணக்கட்டி

சுண்ணக்கட்டி அல்லது பச்சை உருளைக்கிழங்குத் துண்டு போன்றவற்றை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வந்தால், மருக்கள் நீங்கப் பெறும்.

விளக்கெண்ணெய்

நாளொன்றுக்கு இருமுறை, பாதிக்கப்பட்ட பகுதியின் மீது விளக்கெண்ணெய் தடவி வருவது, அப்பகுதியை மிருதுவாக்குவதுடன், மருக்களையும் அகற்றும் வல்லமை வாய்ந்தது.

டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயில் அல்லது தேயிலை மர எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவுவது மருக்களை அகற்றும் என்பது ஏற்கெனவே நிரூபணம் ஆகியுள்ளது.

வினிகர்

பாதிக்கப்பட்ட பகுதியை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் அமிழ்த்தி வையுங்கள். அதன் பின், சீடர் வினிகரை பஞ்சில் தோய்த்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, நன்றாக காய விடுங்கள். பின்னர், இப்பகுதியை சாதாரண நீரில் கழுவி, நன்றாக துடைத்து விடுங்கள்.

வாழைப்பழம்

வாழைப்பழம் ஒன்றை தோலுரித்து, அத்தோலின் உட்பக்கம் மருவின் மேல்பகுதியில் படுமாறு சுற்றிக் கட்டுங்கள். 12 முதல் 24 மணி நேரத்துக்கு ஒருமுறை, இத்தோலை அகற்றி விட்டு புதிதாக உரித்த தோலை கட்டுங்கள்.

boldsky

Related posts

விவசாயி ஆகி காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் பேராசிரியர்

nathan

செல்லப்பிராணியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் அருண் விஜய்

nathan

ஐஏஎஸ் தேர்வில் சாதனை படைத்த தென்காசி மாணவி!

nathan

இந்த 5 ராசிக்காரங்க உலகின் மிகச்சிறந்த கணவராக இருப்பார்களாம்…

nathan

ஜோவர் பலன்கள்: jowar benefits in tamil

nathan

மாணவரை பலமுறை சீரழித்த 74 வயது ஆசிரியர்

nathan

அதிதி ஷங்கருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. முன்னணி நடிகருடன் இணைகிறாரா

nathan

12 வயது மாணவி கர்ப்பம்… அதிர்ந்துபோன பெற்றோர்..

nathan

பிரபல நடிகருடன் தனிமையில் நடிகை

nathan