இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் சாதாரணமாகத் தான் இருக்கும். ஏனெனில் அந்த அறிகுறிகள் அனைத்தும் ஒவ்வொருவரும் சாதாரணமாக அனுபவிப்பவையாக இருக்கும். இருப்பினும் ஒருவர் குறைவான இரத்த அழுத்தத்தில் இருந்தால், அவர்கள் மன அளவிலும், உடலளவிலும் வலுவிழந்தவர்களாக இருப்பார்கள். இந்த குறை இரத்த அழுத்தத்தை ஹைப்போ டென்சன் என்றும் அழைப்பார்கள்.
பொதுவாக குறைவான இரத்த அழுத்தத்தை சிறு வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம் சீராக்க முடியும். ஏனெனில் இரத்த அழுத்தமானது மன அழுத்தம், தவறான உணவு முறை, ஊட்டச்சத்துக் குறைபாடு, உடலில் இரத்தம் குறைவாக இருப்பதால் ஏற்படுபவையாகும்.
ஆனால் இந்த இரத்த அழுத்தமானது மிகவும் குறைவாக இருந்தால், அது இரத்த ஓட்டத்தின் அளவை குறைத்து, இதயம் மற்றும் மூளையின் செயல்பாட்டினை பாதித்து, மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும். எனவே இரத்த அழுத்தம் குறைவாக ஆரம்பித்தால், அதனை உடனே கவனித்து விட வேண்டும். இல்லாவிட்டால், மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாகக்கூடும்.
இங்கு உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, உஷாராக இருங்கள்.
தலைச்சுற்றல்
உங்களுக்கு அடிக்கடி தலைச்சுற்றல் போல் இருந்தால், உடனே கவனமாக இருங்கள். ஏனெனில் உடலில் இரத்த அழுத்தமானது குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளில் முதன்மையானது தான் தலைச்சுற்றல் வர ஆரம்பிப்பது.
மறதி
இரத்த அழுத்தமானது குறைவாக இருந்தால், ஞாபக மறதி ஆரம்பமாகும். அதிலும் ஒரு நிமிடத்திற்கு முன்பு ஒரு இடத்தில் வைத்த பொருளை எங்கு வைத்தோம் என்பதையே மறக்கக்கூடும்.
பார்வை மங்குதல்
திடீரென்று அவ்வப்போது பார்வையானது மங்க ஆரம்பிக்கும். இந்த அறிகுறியும் குறைவான இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளுள் ஒன்று.
உடல் பலவீனம்
எதையும் தூக்க முடியாத அளவில் உடலானது மிகவும் பலவீனமாக இருந்தாலும், குறைவான இரத்த அழுத்தம் உள்ளது என்று அர்த்தம்.
சோர்வு
இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளில் ஒன்று தான் சோர்வு. உடல் பலவீனத்தை தொடர்ந்து, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாத அளவில் உடல் சோர்வாக இருக்கும். இப்போது சிட்ரஸ் பழங்களை உட்கொண்டால், சோர்வு நீங்க ஆரம்பிக்கும்.
குமட்டல்
அவ்வப்போது குமட்டல் ஏற்பட ஆரம்பித்தால், அது கூட குறைவான இரத்த அழுத்தத்திற்கான அறிகுறியே. இப்போது சிறிது எலுமிச்சை ஜூஸை குடித்தால், குமட்டல் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
குளிர்ச்சியான சருமம்
எப்போது காரணமே இல்லாமல், சருமமானது குளிர்ச்சியடைந்து, உடல் நடுங்க ஆரம்பிக்கிறதோ, அப்போது உடலில் போதிய இரத்தம் இல்லை என்று அர்த்தம். இப்படி இரத்தம் இல்லாவிட்டால், குறை இரத்த அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும்.
மயக்கம்
தலைச்சுற்றலைத் தொடர்ந்து, அவ்வப்போது மயக்கம் ஏற்பட ஆரம்பித்தாலும், இரத்த அழுத்தம் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
வெளிர் சருமம்
உடலில் போதிய இரத்தம் இல்லாமல், குறைவான இரத்த அழுத்தம் இருந்தால், சருமமானது வெளிர் நிறத்தில் இருக்கும். இக்கட்டத்தில் இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுத்து வர வேண்டும்.
boldsky