நமக்கு வரும் நோய்களில் பெரும்பாலானவற்றை தீர்க்க இயற்கையிலேயே பல வழிமுறைகள் இருக்கின்றன.
மூலிகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்வதன் மூலம் மனிதனுக்கு மரணத்தைத் தரும் நோய்களைக் கூட விரட்டிக்க முடியும்.
அந்த வகையில் மனிதனுக்கு மரணவாயிலை திறக்கும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோயும் இருக்கிறது. சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க இயற்கையான வழிமுறைகள் சில இருக்கின்றன.
மருந்துகளை சாப்பிடுவது முக்கியமானதாக இருந்தாலும், இயற்கை வழிமுறைகளில் சர்க்கரை நோயை விலக்கி வைத்திருப்பது எளிதான செயல்.
உங்களுடைய உடலின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் கவனத்துடன் இருக்கணும்.
ஏனெனில், அது தொடர்பான வேறு சில பிரச்சனைகளுக்கும் ஆளாகிட நேரிடும். சாப்பிடும் உணவு மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சி ஆகியவை இரண்டும் நீரிழிவு நோயாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நம்ப வேண்டிய இரண்டு வழிமுறை.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாகத் தவிர்த்து விட்டு, இயற்கையான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டியதும் முக்கியம்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் உணவில் சீத்தாப்பழம் முதலிடம் பிடிக்கும். உண்மையில், சீத்தாப்பழத்திற்கு பல்வேறு ஆரோக்கிய பலன்கள் இருக்கின்றன. எண்ணற்ற விதைகளை கொண்டுள்ள இந்த ஆப்பிளுக்கு இணையான பலன்கள் வேறெங்கும் இல்லையென்றும் சொல்லலாம்.
சர்க்கரை நோய்க்கு எதிரான குணங்கள்
- சீத்தாப்பழத்தில் சர்க்கரை நோய்க்கு எதிரான குணங்கள் இருக்கின்றன. இந்த குறிப்பிட்ட குணம் குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தி, தசைகளுக்கு குளுக்கோஸ் சென்றடையும் வழிகளை மேம்படுத்தும்.
- உடலில் குளுக்கோஸ் பயன்படும் செயல்பாட்டை இந்த குணம் தான் கட்டுப்படுத்த உதவி செய்யும். எனவே, சீத்தாப்பழத்தை தினமும் சிறிய அளவுகளில் சாப்பிடும் போது, அது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவி செய்யும்.
மக்னீசியம்
- உடலுக்குத் தேவையான மிக முக்கியமான தாதுக்களில் மூன்றாவது இடத்தை மக்னீசியம் பிடிக்கும். குறைவான அளவு மக்னீயம் உடலில் இருந்தால், நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் அறிவிக்கின்றன.
- இது உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகமாக வைத்திருக்கவும், குளுக்கோஸை கட்டுப்படுத்தவும் உதவி செய்யும். எனவே, மக்னீசியம் நிறைந்திருக்கும் சீத்தாப்பழத்தை சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து என்றால் அது தவறு கிடையாது.
இரும்பு
- மிகவும் அதிகமான இரும்புச்சத்தை கொண்டிருப்பதும் சீத்தாப்பழத்தின் ஆரோக்கிய பலன்களில் ஒன்று.
- இரத்த சோகைக்கு எதிராகப் போராடவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் இந்த சத்து உதவி புரியும். எனினும், சர்க்கரை நோயாளியின் உடலில் அளவுக்கு அதிகமாக இரும்புச்சத்து இருந்தால், அது வேறு சில பிரச்சனைகளை வரவழைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.
- எனவே, மிதமான அளவிற்கு சீத்தாப்பழத்தை சாப்பிட்டு சர்க்கரையை கட்டுப்படுத்தவும். இரும்புச்சத்து இருந்தால் இதயத்திற்கு பலனளிக்கும் வகையில் இரத்தத்தை உற்பத்தி செய்யலாம்.