முந்தைய காலகட்டத்தில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குதான் கண் குறைபாடு ஏற்படும்.தற்போதைய காலத்தில் சிறு வயதிலேயே கண் பிரச்சனைகள்,கண் பார்வை மங்குதல் உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படுகின்றன.
இதற்கு காரணம் தற்போதைய உணவுப்பழக்கம், தூக்கமின்மை போன்றவைகளே ஆகும்.இந்த குறையை போக்க நாம் மருத்துவரை அணுகி கண்ணாடி அணிந்துகொள்கிறோம்.
இதனால் கண் குறைபாடு நிரந்தரமாக சரி ஆகுமா என்றால் சரி ஆகாது.இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
வழிமுறை 1
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வல்லாரை கீரை பொடி வாங்கிக்கொள்ளுங்கள்.
- வல்லாரை கீரை பொடி – 1 தேக்கரண்டி
- தேன் – 1 தேக்கரண்டி
- மோர் அல்லது பால் – 1 டம்ளர்
வல்லாரை கீரை பொடி மற்றும் தேன் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.பின் 1 டம்ளர் மிதமான சூடு உள்ள பால் அல்லது 1 டம்ளர் மோரில் இந்த கலவையை கலந்து தினமும் 1 முறை 10 நாட்கள் தொடர்ந்து குடிக்கவேண்டும்.
10 நாட்கள் கழித்து மாதம் 2 முறை குடித்து வர கண் பார்வையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
வழிமுறை 2
கொழுந்து கொய்யா இலைகளை ஒரு மாதம் தினமும் காலை 3 இலைகளை சாப்பிட்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்காது.
இந்த இரண்டு வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து மேற்கொண்டு பலன் அடையுங்கள்.