28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
625.500.560.350.160.300.053.80 16
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா காலை எழுந்ததும் இந்த பானத்தை குடித்தால் நாள் முழுதும் ஆரோக்கியமாக இருக்கலாம்!

காலையில் எழுந்தவுடன் உற்சாகமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

இதற்கு காலை உணவில் புரோட்டீன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

ஏனெனில் புரோட்டீன் உணவுகள் மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதோடு, பசியையும் கட்டுப்படுத்த உதவி செய்யும்.

அதாவது புரோட்டீன் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்குமாம்.

அந்தவகையில் நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாக இருக்க கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பானத்தை அருந்தினாலே போதுமானது.

இந்த அற்புத பானத்தை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • பாதாம் – 2 டேபிள் ஸ்பூன்
  • வால்நட்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்
  • ஆளி விதை – 1 டீஸ்பூன்
  • தேன் – 1 டீஸ்பூன்
  • குங்குமப்பூ – சிறிது
  • பால் – 250 மிலி

செய்முறை

  • மிக்ஸியில் பாதாம், வால்நட்ஸ் மற்றும் ஆளி விதை போன்றவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அத்துடன் குளிர்ந்த பால், தேன் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்கு ஒருமுறை அடித்துக் கொள்ளணும்.
  • மேலே கொடுக்கப்பட்டுள்ள புரோட்டீன் அதிகம் நிறைந்த பானத்தை காலை வேளையில் குடிப்பதுடன், சிறிது உடற்பயிற்சியையும் தவறாமல் மேற்கொண்டு வந்தால், விரைவில் உடல் எடை குறைவதோடு, உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் இருக்குமாம்.

Related posts

பொது வை-பை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை

nathan

அலுவலக வேலையை திட்டமிட்டு செய்யுங்க

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பால் கொடுப்பதால் இருதய பிரச்சனைகளுக்கான அபாயம் குறையுமா?

nathan

உங்களுக்கு இப்படி வர்ற கால் ஆணிய ஆரம்பத்துலயே எப்படி சரி பண்ணலாம்?

nathan

படிக்கத் தவறாதீர்கள்!..பெண்களுக்கு வயதிற்கேற்ப பரிசோதனை அவசியம்

nathan

பெண்களே சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமா? இந்த உணவுகளை டயட்டில் சேத்துக்கோங்க…

nathan

ஜிகா வைரஸ் ஓர் எச்சரிக்கை!

nathan

உடல் சோர்வைப் போக்கும் மூலிகை குளியல்!

nathan

பப்பாளி

nathan