24.6 C
Chennai
Tuesday, Dec 24, 2024
th
Other News

சூப்பர் டிப்ஸ்! இஞ்சி ஜூஸில் மஞ்சள் தூள் கலந்து குடிச்சுப் பாருங்க? எந்த நோய்யும் உங்களை அண்டாது!

பொதுவாக உடலில் ஏதேனும் பிரச்சனை என்றால் மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம்.

ஆனால் நமக்கு ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு இயற்கை பானங்கள் உதவி புரியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்கள் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

நம் முன்னோர்கள் கூட தங்களது உடல்நல பிரச்சனைகளுக்கு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான் தீர்வு கண்டார்கள்.

அதில் அதிகம் பயன்படுத்திய பொருட்கள் தான் இஞ்சி மற்றும் மஞ்சள். இந்த இரண்டையும் கொண்டு ஓர் பானம் தயாரித்துக் குடித்தால், நம் உடலில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விடும்.

தேவையான பொருட்கள்:

  • இஞ்சி – சிறிது
  • மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
  • தண்ணீர் – 1 கப்
  • தேன் – சிறிது

தயாரிக்கும் முறை

  • மிக்ஸியில் இஞ்சி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி சிறிது தேன் கலக்கவும். இந்த பானத்தை அவ்வப்போது காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
  • இந்த பானம் உடலின் மூலை முடுக்குகளில் இருக்கும் மற்றும் இரத்தத்தில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கும். .
  • மஞ்சள் கலந்த இஞ்சி ஜூஸில் அழற்சி எதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளது. இதனைக் குடித்தால், அடிக்கடி வரும் தலைவலியைத் தடுப்பதோடு, ஒற்றைத் தலைவலியில் இருந்தும் விடுவித்துவிடும்.
  • வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவைக் குறைத்து, குமட்டல் உணர்வைக் குறைக்குமாம். மேலும் கர்ப்பிணிகள் இதைக் குடித்தால், காலையில் ஏற்படும் சோர்வு தடுக்கும். இருந்தாலும் இதை கர்ப்பிணிகள் பருகும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளலாம்.
  • உடலினுள் உள்ள உட்காயங்கள் மற்றும் உடல் வலியை, இந்த பானம் குடிப்பதன் மூலம் தடுக்கலாம். குறிப்பாக உடற்பயிற்சிக்கு பின் இந்த பானத்தைக் குடிப்பது சிறந்தது.
  • இந்த இயற்கை பானம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகப் பராமரித்து, சர்க்கரை நோய் வராமல் தடுக்குமாம்.
  • மஞ்சள் கலந்த இஞ்சி சாற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புகள் மற்றும் வலியைக் குறைக்குமாம்.

Related posts

வீட்டில் என் மாமனார் செய்த வேலை.. ரகசியம் உடைத்த ஜோதிகா..!

nathan

இந்த ராசிக்காரங்க ரொம்ப சக்தி வாய்ந்தவங்களாம்…தெரிந்துகொள்வோமா?

nathan

இந்த ராசிக்காரர்களுக்கு காதல் அதிஷ்டம் இல்லையாம்…

nathan

மாற்றம் கொடுத்த தங்க விலை: 12.10.2023 தங்க நிலவரம் என்ன?

nathan

ஆணவக் கொலை செய்த தந்தை; காதலன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

nathan

ரச்சித்தாவால் நாங்கள் பட்ட வேதனை போதும்… அவள் தேவையே இல்லை…

nathan

அருணாச்சலம் படத்தில் ரம்பாவிடம் இப்படி நடந்து கொண்டாரா ரஜினி?

nathan

இடியாப்பத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்… ரூ.20 லட்சம் அபராதம்

nathan

கிளாமர் விருந்து.. டைட்டான டாப்ஸில் மூச்சு முட்ட வைக்கும் சினேகா..!

nathan