25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.0.560.370.180.700.770.800.668.16 2
அசைவ வகைகள்

மொறு மொறு என கோபி மஞ்சூரியனை ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செய்வது எப்படி தெரியுமா?..

கோபி மஞ்சூரியன் என்றால் என்ன என்றே, தெரியாதவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். காலிபிளவரில் செய்றது தான் கோபி மஞ்சூரியனா? என்று முதல் முறையாக சாப்பிடும் பொழுது நாமும் கேள்வி கேட்டு தெரிந்து கொண்டிருப்போம்.

அசைவ சுவையைத் தரும் மிக அற்புதமான ஒரு வகை சைவ உணவு தான் கோபி மஞ்சூரியன். இதை காலிபிளவர் கொண்டு செய்யப்படுகிறது.

பெரும்பாலும் கடைகளில் வாங்கி உண்ணும் இந்த உணவு வகையை மிக சுலபமாக வீட்டிலேயே மொறு மொறுவென்று எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் காண்போம்..

காலிஃப்ளவரில் நுண்ணிய புழுக்கள் இருக்கும். அதனால் காலிஃப்ளவர் செய்வதற்கு முன் அதை கவனமாக பார்த்து வாங்க வேண்டியது அவசியம்.

அதை சிறு சிறு துண்டுகளாக பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து காலிஃப்ளவரை போட்டு கொதிக்க விடுங்கள். நான்கிலிருந்து ஐந்து நிமிடம் கொதித்தால் போதுமானது.

அதன் பின் அதை தனியே வடிகட்டி அதன் மேல் ஐஸ் தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். இல்லை என்றால் காலிபிளவர் அந்த சூட்டிலேயே அதிகமாக வெந்துவிடும். ஒரு ஐந்து நிமிடம் நன்கு ஆறவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

காலிபிளவர் ஆறியதும் அதில் சிறிதளவு உப்பு தூவி கொள்ளுங்கள். பின்னர் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டேபிள்ஸ்பூன் கான்பிளவர் மாவு சேர்த்து பிரட்டிக் கொள்ளுங்கள்.

ஒரு ஐந்து நிமிடம் அப்படியே ஊற விடுங்கள். ஒரு பாத்திரத்தில் அரை கப் மைதா மாவு, கால் கப் கான்பிளவர் மாவு, அரை கப் அரிசி மாவு சேர்த்து சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு இட்லி மாவு பதத்திற்கு தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளுங்கள்.

அதிகம் தண்ணீராகவும் இருக்கக்கூடாது, அதே சமயத்தில் கெட்டியாகவும் இருக்கக் கூடாது. இடையில் சரியாக இருக்க வேண்டும்.

பின்னர் இதனுடன் எடுத்து வைத்த காலிஃப்ளவரை சேர்த்து நன்கு கிளறி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு 10 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைலில் மொறுமொறுவென்று கோபிமஞ்சூரியன் வேண்டுமென்றால் நீங்கள் இதை இரண்டு முறை ‘டீப் ஃப்ரை’ செய்து எடுக்க வேண்டும்.

பின்னர் எடுத்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து ஒரு பத்து நிமிடம் வரை நன்கு கொதிக்க விடவும் அவ்வளவுதான். அதன் மேல் வெங்காயத் தாள்களை தூவி பரிமாறலாம். இது நாம் ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடும் கோபி மஞ்சூரியன் போலவே மிகவும் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

தேவையான அளவிற்கு எண்ணெயை கடாயில் ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு மீடியம் ஃபிளேமில் காலிபிளவர்களைப் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி பகுதி பகுதியாக போட்டு எடுத்ததும் மறுபடியும் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு மெத்தென்று இல்லாமல் மொறுவென்று கோபிமஞ்சூரியன் கிடைக்கும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சை சாறு சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் கான்பிளவர் மாவு, இரண்டு டீஸ்பூன் டொமேட்டோ சாஸ், ஒரு டீஸ்பூன் சோயா சாஸ், 2 டீஸ்பூன் சில்லி சாஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இப்போது கோபி மஞ்சூரியன் செய்ய ஒரு வாணலியை எடுத்துக் கொள்ளுங்கள். சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் மிகவும் பொடிப் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு பெரிய வெங்காயம் மற்றும் வெங்காயத்தாள் அதிலிருக்கும் வெங்காயத்தையும் சேர்த்து நறுக்கிக் கொள்ளுங்கள். குடைமிளகாய்களை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

இவற்றை எல்லாம் சேர்த்து வதக்கி தனியே வைத்த சாஸ் கலவையை சேர்க்கவும். ஒரு அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.

அவ்வளவுதான். அதன் மேல் வெங்காயத் தாள்களை தூவி பரிமாறலாம். இது நாம் ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடும் கோபி மஞ்சூரியன் போலவே மிகவும் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Related posts

வறுத்த கோழி குழம்பு

nathan

ஆஹா என்ன சுவை! காரைக்குடி நண்டு மசாலா

nathan

சூப்பரான ஸ்பைசி முட்டை மசாலா

nathan

சன்டே ஸ்பெஷல் மட்டன் கீமா புட்டு

nathan

சுவையான மஸ்ரூம் பெப்பர் ப்ரை

nathan

ஓவனில் வறுக்கப்பட்ட சிக்கன்

nathan

மட்டன் சுக்கா செய்வது எப்படி?

nathan

சத்து நிறைந்த மேத்தி ஆம்லெட்

nathan

சூப்பரான பசலைக்கீரை பக்கோடா

nathan