இந்த காலத்தில் எல்லா பெண்களும் தாங்கள் அழகாக மாறுவதற்கு நிறைய முயற்சிகளையும் நிறைய மேக்கப் முறைகளையும் பின்பற்றுகின்றன. இதனுடன் தங்கள் மேனியை கச்சென்று வைப்பதற்கு உடற்பயிற்சியையும் செய்ய அவர்கள் தவறுவதில்லை. அந்த வழிகளில் தங்கள் கூந்தலை கலரிங் செய்து அழகாக்கவும் சலூன் சென்று நிறைய முறைகளை பயன்படுத்துகின்றன. நீங்கள் இதற்காக அதிகமாக மெனக்கிடாமல் வீட்டிலேயே சலூன் போன்ற ப்ளாண்ட் ஹேர் கலரிங் கை பெறலாம்
நீங்கள் ஹோலிவுட் ஹீரோயின் மர்லின் மண்ட்ரோவின் மிகப்பெரிய ரசிகை என்றால் கண்டிப்பாக உங்களுக்கு இந்த டைப் ஹேர் பிடிக்கும். இந்த ஹேரை பெறுவதற்கு முன்னாடி சில விஷயங்களான போதுமான அளவில் கூந்தல் மற்றும் உங்கள் பிளவுபட்ட முடி நுனிகளை நீக்கி கொள்ள வேண்டும்.
இந்த ஹேர் ஸ்டைல்லை பெற சலூன் சென்றால் நிறைய பணம் மற்றும் நல்ல எக்ஸ்பட்டிடம் செல்ல வேண்டியது இருக்கும். ஆனால் இது வீட்டிலேயே சாத்தியமாக எந்த வித செலவில்லாமல் செய்யக் கூடியது. நிறைய பணங்களும் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. சரி வாங்க ப்ளாண்ட் ஹேர் கலரிங் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்
தேவையான பொருட்கள் 3% ஹைட்ரஜன் பெராக்சைடு(3% க்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் முடி பாதிப்பு மற்றும் உதிர்தல் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தலாம்) கிராம்பு ஹேர் க்ளிப்ஸ் சீப்பு ஸ்பீரே பாட்டில் துண்டு ஸ்ஷவர் கேப் டோனர் 20 டெவலப்பர் (வழிமுறைகளை பியூட்டி எக்ஸ்பட்டிடம் அறிந்து கொள்ளவும்)
செய்முறை (9 படிகள்) முதலில் இதைச் செய்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை ஒரு முடியை எடுத்து ஹைட்ரஜன் பெராக்சைடை அப்ளே பண்ணி நேரத்தை கணக்கிட்டு கொள்ளவும். இதற்கு ஸ்ட்ரேண்ட் டெஸ்ட் என்று பெயர். ஸ்பிரே பாட்டிலில் தண்ணீரை ஊற்றி லேசாக முடியிகளில் அடித்து கொள்ளவும். ஏனெனில் சற்று ஈரமான கூந்தலில் ஹைட்ரஜன் பெராக்சைடு நன்றாக வேலை செய்யும்.
முடியை பகுதி பகுதியாக பிரித்து க்ளிப் போட்டு கொள்ளவும். இது ஹைட்ரஜன் பெராக்சைடு சமமாக முடிகளில் பரப்புவதற்கு உதவுகிறது. மேலும் ஒரு சலூன் போன்ற ஸ்டைலை கொடுக்கும் இப்பொழுது தலைமுடியை டவல் கொண்டு மூடிக் கொண்டு அடுத்த படிக்கு செல்லவும்
அடுத்து ஸ்பிரே பாட்டிலில் ஹைட்ரஜன் பெராக்சைடை ஊற்றி ஒவ்வொரு முடிப்பகுதியாக அப்ளே செய்ய வேண்டும். தலைமுடியை அவ்வப்போது வாரி விட்டு அதை சமமாக பரப்ப வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு பகுதியை மட்டும் கவனித்தால் எல்லா பகுதிகளிலும் ஹைட்ரஜன் பெராக்சைடு சமமாக பரவி இருக்கும். முடியை ஸ்ஷவர் கேப் கொண்டு மூடிக் கொண்டு ஸ்ட்ரேண்ட் டெஸ்ட் படி கணக்கிட்ட நேரம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். 45 நிமிடங்களுக்கு குறைவாக ரீமுவ் பண்ண கூடாது. பிறகு கேப்பை எடுத்து விட்டு முடியை நன்றாக குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்பொழுது உங்கள் முடி வெளிரிய மஞ்சள் அல்லது ஆரஞ்சு கலரில் இருக்கும். டோனர் பயன்படுத்தினால் உங்களுக்கு பிளாட்டினம் ப்ளாண்ட் கிடைக்கும். இந்த பிளாட்டினம் கலர் விரும்பினால் 7,8மற்றும் 9 வது வழிகளை செய்யவும். இதற்கு அப்புறம் முடியை நன்றாக காய வைத்து சமமான அளவில் டோனர் மற்றும் 20 டெவலப்பர் எடுத்து கலந்து கொள்ள வேண்டும். டோனர் ஒரு பாதி நிலையான கலரை தர உதவுகிறது. நன்றாக முடியை ப்ளீச் செய்து பிளாட்டினம் ஸ்டைல் லுக்கை கொடுக்கும்.
இந்த கலவையை அப்ளே பண்ணி 25 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் அலசவும் கடைசியாக நல்ல பட்டு போன்று மென்மையான கூந்தல் கிடைக்க நினைத்தால் கேரோட்டின் சிகச்சைக்கு செல்ல வேண்டும். இதனால் உங்களுக்கு ஆரோக்கியமான அழகான பட்டு போன்ற கூந்தல் கிடைக்கும்.