29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300 1
எடை குறைய

பெண்களே…. குனிந்து பார்க்க முடியாதவாறு தொப்பை வந்துவிட்டதா? கட கடனு குறைக்க இவற்றை எல்லாம் இனி விடாமல் சாப்பிடுங்க…!

இன்று ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் நிறைய உணவுகள் வந்துள்ளன. இவை அனைத்தும், பசியின் உணர்வை அடிக்கடி தூண்டுபவை.

ஆகவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைந்து, தொப்பை இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

இவ்வாறு தொப்பை இருப்பவர்களுக்கு, நோய்கள் மிகவும் விரைவில் தாக்கும். மேலும் சிலருக்கு அவர்களது உடலையே சுமந்து நடக்க முடியாத நிலை ஏற்படும்.

இதனால் அத்தகைய தொப்பையைக் குறைப்பதற்கு பலர் ஜிம், உடற்பயிற்சி, உணவுகளில் டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.

தொப்பையையும் குறைக்கப் பின்பற்றும் டயட்டில், ஒருசில உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுகளை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.

அவற்றில் சில உணவுகள் இது…
ஓட்ஸ்

ஓட்ஸ் சுவையானது மட்டுமல்லாமல், வயிற்றை நிரப்பக்கூடியதும் ஆகும். குறிப்பாக இதனை குறைவாக சாப்பிட்டாலே, வயிறு நிறைந்துவிடும்.

மேலும் இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, சீராக வைக்கும்.

முட்டை

முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்களுடன், குறைவான கலோரியும் உள்ளது.

எனவே உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், முட்டையை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் அதகரித்து, கெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்கும்.

மிளகாய்

மிளகாயில் உள்ள காப்சைசின், உடலின் மெட்பாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகளை கரைத்துவிடும்

பூண்டு

பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால், அவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, கொலஸ்ட்ராலை சீராக வைக்க உதவியாக இருக்கும்.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளிலும் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆனால் அவற்றில் அமினோ ஆசிட்டுகள் அதிகம் இருப்பதால், இவை உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவியாக உள்ளது. எனவே எப்போது பருப்புகளை கொண்டு செய்யப்படும் சூப் மற்றும் கிரேவி போன்றவற்றை சாப்பிடும் போது, இதில் கொழுப்புக்கள் அதிகம் இருக்கிறதோ என்று பயந்து சாப்பிட தேவையில்லை.

மீன்

மீனில் செரிவூட்டப்படாத கொழுப்பு மற்றும் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், நிச்சயம் தொப்பை அதிகரிக்காது. அதிலும் சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களை சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

தேன்

தினமும் தேனை சுடு நீரில் கலந்து, காலையில் குடித்து வந்தால், தொப்பை குறைந்து விடும் என்பது நமது பண்டைய கால மக்களின் நம்பிக்கை. உண்மையில் இது நம்பிக்கை மட்டுமல்ல, இது ஒரு இயற்கை வைத்தியமும் கூட.

குளிர்ச்சியான நீர்

தினமும் குறைந்தது 2 லிட்டர் குளிர்ச்சியான நீரை பருக வேண்டும். ஏனெனில் அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

அன்னாசிப்பழம்

ஸ்நாக்ஸ் நேரத்தில், அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதும், உடல் எடை குறைவுக்கு உதவியாக இருக்கும்.

முக்கிய குறிப்பு

ஆரோக்கியமான சில உணவுகளை எடுப்பதுடன், உடற்பயிற்சியும் இருந்தால் தான் நிச்சயம் உடல் எடையை குறைக்க முடியும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…திருமணத்திற்கு பின் பெண்கள் உடல் எடை அதிகரிப்பது ஏன் தெரியுமா?

nathan

உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்

nathan

நீங்கள் உடல் எடையை குறைக்கனும் இல்லையென்றால் உடலை நல்ல கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா?

sangika

உடல் பருமன் குறைத்திட உதவும் உணவு முறைகள்….

nathan

உங்களுக்கு ஒரே மாதத்தில் உடலை எடையை குறைக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

தினமும் 200 கலோரிகளை குறைக்க வேண்டுமா..?எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

உங்களுக்கு தெரியுமா 20 நாட்கள் தொடர்ந்து சீரக தண்ணீர் குடித்தால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்!

nathan

எப்படி 500 கலோரிகளை ஒரு நாளில் எரிக்க முடியும்

nathan

உங்களுக்கு தெரியுமா யோகர்ட்டை 7 நாட்களும் இப்படி சாப்பிடுங்க? விரும்பும் அளவிற்கு எடை கிடு கிடுனு குறையும்….!

nathan