25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
images
மருத்துவ குறிப்பு

இதோ அற்புதமான எளிய தீர்வு! மாதவிலக்கு பிரச்சனைகள் தீர இயற்கை முறையில் தீர்வு!

மாதவிலக்கு பிரச்சனைகள் தீர இயற்கை முறையில் தீர்வு!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு அதிகமான ஒரு பிரச்சினையாக மாதவிலக்கு பார்க்கப்படுகிறது. மாதவிடாய் பிரச்சனை பெண்களுக்கு பல ரீதியான நோய்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.கர்ப்பப்பை கட்டிகள், கர்ப்பப்பை புற்று நோய் என பல்வேறு நோய்கள் மாதவிலக்கின் காரணமாகவே ஏற்படுகிறது.

இவற்றை தீர்ப்பதற்கு இயற்கையான முறையில் பல்வேறு தீர்வுகள் உள்ளன அதை பற்றி இங்கு காண்போம்.

1.100 கிராம் அச்சு வெல்லத்துடன் 10 கிராம் எள் சேர்த்து இடித்து காலையில் வெறும் வயிற்றில் உண்டு வர மாதவிலக்கு பிரச்சனை தீரும்.

2.புதினாக் கீரையை எடுத்து வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்தபின் அதை உரலில் இடித்து சலித்து வைத்துக் கொண்டு மூன்று வேளையும் அரை ஸ்பூன் புதினா இலை பொடியுடன் சம அளவு தேன் கலந்து உண்டு வர மாதவிலக்கு சரியான காலக் கணக்கின்படி சரியான நாட்களில் வெளியேறும்.

3. 20 கிராம் கருஞ்சீரகத்தைப் எடுத்துக் கொண்டு 40 கிராம் பனை வெல்லத்துடன் சேர்த்து எடுத்து வைத்துக் கொண்ட நான்கு வேளைகள் காலையிலும் மாலையிலும் பாலுடன் கலந்து குடித்துவர மாதவிலக்கு சிக்கல் உடனடியாக தீரும்.

4. சிலருக்கு மாதவிலக்கு சரியாக ஆகாமல் விட்டுவிட்டு வந்தால் அவர்கள் காலையில் செம்பருத்திப் பூவுடன் சிறிதளவு அருகம்புல் சேர்த்து அரைத்து கொட்டைப்பாக்கு அளவு போல உண்டு காலையில் மோர் சாதமும் இரவு தயிர் சாதமும் சாப்பிட்டு வந்தால் அந்த பிரச்சனை நீங்கும்.

5. சிவப்பு நிறம் கொண்ட துளசியை நன்றாக சுத்தம் செய்து மாதவிலக்கின் போது நான்கு நாட்கள் உண்டு வர மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும்.

6. மாங்காயின் தோலை வெயிலில் உலர்த்தி பொடிசெய்து உண்டு வந்தாலும் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும்.

7. கோதுமை கஞ்சியை மாதவிடாய் காலங்களில் சாப்பிட்டு வர மாதவிலக்கு ஒழுங்காக நடைபெறும்.

8. மாதவிலக்கு சரியாக ஏற்படாமல் ,மாதவிலக்கு வரும் ஒரு வாரத்திற்கு முன்பே அன்னாசிப் பழம் பப்பாளி பழம் ஆகியவற்றை சாப்பிட்டால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

9. மேலும் பெரிய நெல்லிக்காயை சீவி வெயிலில் உலர்த்தி காப்பி பொடி போல அரைத்து வைத்துக்கொண்டு உண்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை தீரும்.

10. வல்லாரைக் கீரையை பறித்து அதன் இலைகளை நன்றாக வெயிலில் உலர்த்தி பொடி செய்து எடுத்துக்கொள்ள வேண்டும் அதனுடன் சுக்கு 5 கிராம் சோம்பு 5 கிராம் தட்டிப் போட்டு 200 மில்லே தண்ணீரில் கொதிக்க வைத்து காலையில் மாலையில் வடிகட்டி குடித்து வர மாதவிடாய் பிரச்சினைகள் தீரும்.

இவ்வாறு மாதவிடாய் பிரச்சனைகளுக்கு பலதரப்பட்ட தீர்வுகள் உள்ளன. இதனை பயன்படுத்தி உங்களுக்கு இருக்கும் பிரச்சனையை உடனடியாக தீர்த்துக் கொள்ளுங்கள்.

Related posts

நீரிழிவு நோயாளிகளே தெரிஞ்சிக்கங்க…! மாதம் ஒருமுறை இதை கட்டாயம் செய்திடுங்க

nathan

தெரிந்துகொள்வோமா? கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் சந்திக்கும் உடல் நல பாதிப்புகள் என்னென்ன?

nathan

இதை பின்பற்றுங்கள்! மூளையின் ஆரோக்கியத்தை பாதுக்காக்க வேண்டுமா?..

nathan

இப்படி ஒரு அபார சக்தியா.?இரத்த அணுக்களை உருவாக்கும், பீட்ரூட்டில் !

nathan

உங்களுக்கு தெரியுமா தர்பூசணி சாறுடன் இத கலந்து குடிச்சா பக்கவாதம், புற்று நோய் வராது!

nathan

வயதாவதை தடுக்கும் 9 சிறந்த வழிகள்!படிங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த பழக்கங்களை விட்டொழித்தால் மார்பக புற்று நோய் வராது!! அப்ப இத படிங்க!!!

nathan

பல் சொத்தை வராமல் தடுக்க இதோ எளிய நிவாரணம்!

nathan

நமது உடலில் வயிறு செய்யும் வேலைகள்

nathan