27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
625.500.560.350.160.300.053.80 10
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…உயர் ரத்த அழுத்த ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன தெரியுமா?

உயர் ரத்த அழுத்தம் உடலிலுள்ள சில பாதிப்புகளை குறித்தும் இருக்கலாம். சில நேரங்களில் உயர் ரத்த அழுத்தம் அவசர சிகிச்சையில் கொண்டும் விடலாம்.

தொடர் உயர் ரத்த அழுத்தம் ரத்தக் குழாய்களில் அதிக அழுத்தத்தினை அளிப்பதால் இருதயத்திற்கு அதிக வேலை ஆகின்றது. இருதய ரத்தக் குழாய்களில் தேவையற்ற உள் திசு வளர்ச்சி ஏற்பட்டு ரத்த ஓட்டம் சுருங்குகின்றது.

இதனால் இருதய தசைகள் தடித்து பலவீனம் அடைகின்றன. இதுவே இருதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, ரத்த குழாய்கள் பாதிப்பு என ஏற்படுத்துகின்றன. முறையான சிகிச்சை, உயர் ரத்த அழுத்தத்திற்கு அளிக்காவிடில் ஆபத்திலேயே கொண்டு விடுகின்றது.

சிலருக்கு கர்ப்ப காலத்தில் குறைந்த ரத்த அழுத்தம், தலைச்சுற்றல், மயக்கம், அதிர்ச்சி நிலை போன்றவற்றினை ஏற்படுத்தக்கூடும். அதிக ரத்தப்போக்கு, நச்சு மருந்தினால் கூட இருக்கலாம்.

ஹார்மோன் சரியின்மை, மிகக் குறைவான உணவு இவற்றினாலும் மேலும் சில மருத்துவ காரணங்களினாலும் ஏற்படுகின்றது.

ரத்த அழுத்தத்தினை பரிசோதிக்கும் பொழுது அதற்கு முன் சுமார் 20 நிமிடங்களுக்கு முன்பு காபி அருந்தியோ, புகை பிடித்தோ இருக்கக்கூடாது. சிறுநீர் செல்லவேண்டிய அவசரம் இருக்கக்கூடாது.

பரிசோதனைக்கு 5 நிமிடம் முன்பு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து இரு கால்களும் தரையில் பட இருக்கவேண்டும்.

ரத்த அழுத்தம் அவ்வப்போது மாறுபடும் என்பதால் நம் ரத்த அழுத்த அளவினை உறுதி செய்ய காலை தூங்கி எழுந்தவுடன் (அதாவது எந்த வேலையும் ஆரம்பிக்கும் முன்) எடுக்க வேண்டும்.

வேலைகள் முடிந்த பிறகும் எடுக்கலாம். சிலருக்கு ரத்த அழுத்த பரிசோதனையே சற்று டென்ஷன் கொடுப்பதால் லேசான உயர் அழுத்தத்தினைக் காட்டலாம்.

இருதய வால்வு பிரச்சனை, இருதய துடிப்பு கம்மியாகுதல், இருதய பாதிப்பு, இருதய துடிப்பு குறைவு போன்றவைகளால் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படலாம்.

Related posts

எண் 6 (6,15,24) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் அதிகம் பகிருங்கள்

nathan

உங்களின் ‘ஈ.கியூ.’ எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

வெளியுலகம் அறியாமலேயே நடந்தப்படும் குழந்தை திருமணங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா எந்த வயது குழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

nathan

கர்ப்பப்பை புற்றுநோயின் தாக்கம்

nathan

100 ஹெல்த்தி ஹேபிட்ஸ்! ‘நாம் நல்ல பழக்கங்களை உருவாக்குவோம்; நல்ல பழக்கங்கள் நம்மை உருவாக்கும்’ !! ஹெ…

nathan

மாதவிலக்கு நெருங்கும் நாட்களில் மார்பகங்கள் வலிப்பதேன்?

nathan

இந்த காரணத்துனால கூட நீங்க கர்ப்பம் ஆகமா இருக்கலாமாம்…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

30 வயதுக்கு மேல் குழந்தைப்பேற்றை தள்ளிப்போடுவது ஆபத்து

nathan