3 15
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!

எப்போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அப்போது உடனே அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதே சமயம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருந்தாலும், பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

இப்படி இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால், அதை ‘ஹைப்பர் கிளைசீமியா’ என்றும், அதுவே குறைவாக இருந்தால், அதை ‘ஹைப்போ கிளைசீமியா’ என்றும் சொல்வார்கள். பொதுவாக உடலில் ஓடும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகரிக்க ஆரம்பித்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிப்படுத்தும்.‘

அந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், உடனே இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க முயலுங்கள். சரி, இப்போது ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போமா!!!

தாகம் அதிகம் எடுக்கும்

ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகளில் ஒன்று தான் தாகம். உங்களுக்கு வாயானது எப்போதும் வறட்சியுடன் இருப்பது போல், தாகம் அதிகம் எடுத்தால், உடனே கவனியுங்கள்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

தண்ணீர் அதிகம் குடிக்காமல், அடிக்கடி சிறுநீர் அவசரமாக வருவது போன்று உணர்ந்தால், அதுவும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

சோர்வு, தலைவலி போன்றவை

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் போது, சோர்வு, தலைவலி, மங்கலான பார்வை மற்றும் தலை பாரத்துடன் இருப்பது போன்று இருக்கும்.

பசி அதிகரிக்கும்

உடலில் சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும் நேரம், எப்போதுமே பசியுடன் இருப்பது போன்று உணரக்கூடும்.

உடல் வறட்சி

போதிய அளவில் தண்ணீர் பருகாமல் இருந்தால், உடலானது வறட்சியடைய ஆரம்பிக்கும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளின் உடலில் வறட்சி ஏற்பட ஆரம்பித்தால், அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

எடை குறைவு

திடீரென்று உடல் எடை குறைவது பல்வேறு பிரச்சனைகளுக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். அதில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதும் ஒன்று.

சிறுநீரில் குளுக்கோஸ்

இரத்தத்தில் சரியான அளவில் சர்க்கரை இருந்தால், சிறுநீரில் வெளியேறும் குளுக்கோஸை சிறுநீரகமானது உறிஞ்சிக் கொள்ளும். ஆனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகம் இருந்தால், குளுக்கோஸானது சிறுநீருடன் சேர்ந்து வெளியேறும். அப்படி டாய்லெட்டில் சிறுநீரை வெளியேற்றிய பின், டாய்லெட்டில் எறும்புகள் மொய்க்க ஆரம்பித்தால், சிறுநீரில் குளுக்கோஸ் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

Related posts

இதய நோயைத் தடுப்பதற்கான வழிகள் என்ன?

nathan

செல்போன் மூலம் ஆண்களிடம் பெண்கள் சொல்லக்கூடாத 10 விஷயங்கள்..!

nathan

நகம் சொல்லும் உங்கள் ஆரோக்கியத்தை

nathan

மலக்கழிவு சொல்லும் உடல் ஆரோக்கியம்!

nathan

உங்களுக்கு தெரியுமா அடிக்கடி கொட்டாவி வர இதெல்லாம் கூட காரணம்!

nathan

உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால் இந்த 4 உணவுகளை உடனே சாப்பிடுங்கள்

nathan

உங்க பற்களின் வடிவம் உங்கள் விதியை எப்படி நிர்ணயிக்கிறது தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இரத்த கொதிப்புப் பிரச்சனைக்கான காரணம்

nathan

பிறந்த குழந்தையை தூக்கும் முறை

nathan