27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
2pregnant 1
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருக்கும் போது சின்னம்மை வந்தால் ஏற்படும் ஆபத்துக்கள்!!!

கோடை காலத்தில் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் கோடையில் மிகவும் ஆபத்தான வைரஸால் கர்ப்பிணிகளுக்கு சின்னம்மை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒருவேளை அப்படி கர்ப்பிணிகளுக்கு சின்னம்மை வந்தால், அது கர்ப்பிணிகளுக்கு மட்டுமின்றி, வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே கோடையில் கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

மேலும் உடலில் போதிய நோயெதிர்ப்பு சக்தி இல்லாவிட்டால், இந்த வைரஸானது எளிதில் தாக்கும். எனவே நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, நோயெதிர்ப்பு சக்தியின் அளவை கர்ப்பிணிகள் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் கர்ப்பிணிகளுக்கு சின்னம்மை வந்தால், தாயும், வயிற்றில் வளரும் சிசுவும் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள். இதனால் நிமோனியா கூட வரும் வாய்ப்பு உள்ளது. எனவே கர்ப்ப்ணிகள் சின்னம்மை வராமல் இருப்பதல், சரியான உணவுகளை உட்கொள்வதுடன், உடல்நிலை சரியில்லாதவர்களிடம் இருந்து சற்று விலகியே இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் அதனால் சந்திக்கக்கூடிய ஆபத்துக்களே தனி தான். இங்கு கர்ப்பிணிகளுக்கு சின்னம்மை வந்தால் சந்திக்கக்கூடிய ஆபத்துக்களைப் பட்டியலிட்டுள்ளோம்.

குழந்தைக்கும் அம்மை வரும்

சின்னம்மையானது பிரசவத்திற்கு 5 நாட்கள் அல்லது அதற்கு குறைவான நாட்களில் வந்தாலோ அல்லது பிரசவத்திற்கு பின் 1-2 நாட்களில் வந்தாலோ, 20-25 சதவீதம் குழந்தைக்கும் அம்மை வரும் வாய்ப்பு உள்ளது.

பிறப்பு குறைபாடுகள்

கர்ப்ப காலத்தில் சின்னம்மை வந்தால், அது வயிற்றில் வளரும் குழந்தையின் பார்வை பிரச்சனை, சிறிய தலை மற்றும் மனநிலை மாற்றம் போன்றவை ஏற்படும்.

உள்ளுறுப்புக்களில் பாதிப்பு

தாய்க்கு கர்ப்ப காலத்தில் சின்னம்மை வந்தால், அது குழந்தையின் சருமம், கண்கள், கால், கை மற்றும் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

குழந்தையின் எடையில் மாற்றம்

கர்ப்பமாக இருக்கும் போது வைரஸால் தாக்கப்பட்டால், அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதில் ஒன்று தான் குழந்தை மிகவும் குறைவான எடையில் பிறப்பதுடன், பலவீனமாகவும் இருக்கும். இருப்பினும் இதனை உணவுகள் மூலம் தான் சரிசெய்ய முடியும்.

நிமோனியா

சின்னம்மை வந்தால் ஏற்படும் ஆபத்துக்களில் ஒன்று தான் நிமோனியா. ஆம் சின்னம்மை வரும் போது உடல் பலவீனமாக இருப்பதால், அது நிம்மோனியாவிற்கும் வழிவகுக்கும்.

கருச்சிதைவு

சின்னம்மை முற்றிய நிலையில் இருந்தால், சில சமயங்களில் அது வயிற்றில் வளரும் சிசுவை அழித்துவிடும்.

குறைப்பிரசவம்

ஆய்வுகள் ஒன்றில், கர்ப்பிணிகளுக்கு முதல் 20 வாரங்களில் சின்னம்மை வந்தால், அது குறைப்பிரசவம் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது என்று சொல்கிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Related posts

மனநல பாதிப்பை போக்கும் மருதாணிப்பூ!

nathan

உங்க தொடையில் உள்ள கொழுப்புக்களை வேகமாக கரைக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

தூக்கமின்மையால் ஏற்படும் நோய் பாதிப்புகள் : அவதானம்…!!

nathan

நரம்பு தளர்ச்சியை குணமாகும் வசம்பு

nathan

நீரிழிவு நோயினை கட்டுப்படுத்த முடியவில்லையா? இதோ எளிய நிவாரணம்

nathan

அவசியம் படிக்க..ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்!

nathan

உங்களுக்கு சர்க்கரை நோய்க்கான அபாயம் உள்ளதா என்பதை நொடியில் அறிய இங்க அழுத்துங்க…

nathan

கேஸ் டியூபை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?

nathan

கணவரின் இந்த செயல்கள் மனைவியின் மனநிலையை பாதிக்கும்

nathan