அனைத்து இந்திய சமையலறைகளிலும் கண்டிப்பாக இருக்கும் ஒரு பொருள் என்றால் அது இஞ்சிதான். இஞ்சி பெரும்பாலான உணவுகளில் சேர்க்கப்பட காரணம் அதன் சுவை மட்டுமல்ல, அதிலிருக்கும் மருத்துவ குணங்களும்தான். உண்மையில் இது ஒரு அற்புதமான தாவரமாகும், இது ஆரோக்கியமாக இருக்க உதவுவதுடன் பல்வேறு நோய்த்தொற்றுகளில் இது பாதுகாக்கிறது.
இஞ்சியின் சுவை மிதமானதாக இல்லை என்றாலும் அதனை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்கள் உடலில் பல அதிசயங்கள் ஏற்படலாம். ஆரம்பத்தில் தினமும் இதனை உணவில் சேர்த்துக் கொள்வது கடினமாக இருக்கலாம் ஆனால் அதன் சுவை பழகிவிட்ட பிறகு அந்த சுவை நமக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தக்கூடும். இந்த பதிவில் இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் அதிசயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
புற்றுநோயைத் தடுக்கிறது
விஞ்ஞான ஆராய்ச்சியின்படி2, இஞ்சி புற்றுநோய் மற்றும் பெருங்குடல் அழற்சியின் வெளிப்பாட்டைக் குறைக்க முடியும். இந்த திசையில் இன்னும் விரிவான ஆய்வுகள் தேவை என்றாலும், இஞ்சியின் நன்மைகள் நீண்ட காலத்திற்கு முன்பே தெளிவாக விளக்கப்பட்ட ஒன்றாகும்.
எடைகுறைப்பில் உதவி
உலகம் முழுவதும் மக்களுக்கு பொதுவாக இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று எடை அதிகரிப்பு ஆகும். அதனை குறைக்க பல பலனற்ற மற்றும் ஆபத்தான வழிகளை மக்கள் நாடுகிறார்கள். உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டும் உணவுக்கு இஞ்சி மிகவும் பயனுள்ள இயற்கை துணை என்று கண்டறியப்பட்டது. நீங்கள் இஞ்சியைச் சேர்க்கும்போது அதிகமாக சாப்பிட வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை, ஆனால் குறைவாக சாப்பிடுவதற்கான உங்கள் முயற்சிகளுடன் இணைந்து நன்றாக வேலை செய்து உங்கள் உடல் எடையை குறைக்கஉதவும்.
இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சிலரின் உணவில் தினமும் இரண்டு கிராம் இஞ்சி சேர்க்கப்பட்டது. சோதனைக் காலத்தின் முடிவில், அவர்களின் இரத்த சர்க்கரை 12 சதவிகிதம் குறைந்தது, இது இஞ்சியின் அதிக அளவில் ஆற்றலைக் காட்டும் ஒரு குறிப்பிடத்தக்க விளைவாகும்.
செரிமானம் மற்றும் குமட்டலுக்கு மருந்து
அஜீரண பிரச்சினைகளுக்கு இயற்கையாக நிவாரணமளிக்கும் பொருட்களில் ஒன்று இஞ்சியாகும். கூடுதலாக, குமட்டலுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும், ஏனெனில் இது நம் உடலில் இயற்கையான ஆண்டிபயாடிக் ஆக செயல்படுகிறது. இஞ்சி சாப்பிட்டபிறகு நீங்கள் திருப்தியான உணர்வை உணர்ந்தால் நீங்கள் இஞ்சிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
மாதவிடாய் வலிக்கு நிவாரணம்
பெண்கள் மட்டுமே அனுபவிக்கும் துயரங்களில் இதுவும் ஒன்றாகும். இது டிஸ்மெனோரியா அல்லது மாதவிடாய் கோலிக் என்று அழைக்கப்படுகிறது.சில நேரங்களில் இது மிகவும் தீவிரமாக இருக்கும், மேலும் பல பெண்கள் அதை சமாளிக்க பல நிவாரணங்களை நாடுகிறார்கள். தினமும் 1 கிராம் இஞ்சியை உணவில் சேர்த்து கொள்வது பெண்களின் வலியை குறைக்கும் சிறந்த தீர்வாகும். சமீபத்தில் பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் இது உறுதிப்படுத்தப்பட்டது.
அல்சைமர் நோய்
புற்றுநோய் போல மிகவும் பரவலாக காணப்படும் நோயாக அல்சைமர் நோய் மாறிவிட்டது. துரதிர்ஷ்டவசமாக, விஞ்ஞான மக்கள் இந்த மனநல கோளாறுக்கு எதிராக ஒரு சிறந்த சிகிச்சையை எதிர்பார்க்கிறார்கள். அவர்களில் சிலர் அல்சைமர் ஆக்ஸிஜனேற்ற மன அழுத்தம் மற்றும் குணப்படுத்த முடியாத அழற்சியால் தூண்டப்படலாம் என்று நினைக்கிறார்கள், ஆனால் மற்றவர்கள் இஞ்சியை உட்கொள்ளும் மக்கள் அல்சைமர் உருவாவதற்கு அவ்வளவு வாய்ப்பில்லை என்று நம்புகிறார்கள். தினமும் உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்வது அல்சைமரில் இருக்கின்று உங்களை பாதுகாக்கும்.
வலி நிவாரணம்
பல்வேறு காரணங்களால் ஏற்படும் மந்தமான வலிக்கு இஞ்சி சிறந்த நிவாரணமாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. முழங்கை பிரச்சினையால் ஏற்படும் வலி உள்ளவர்கள் 11 நாட்களுக்கு இரண்டு கிராம் இஞ்சியை உட்கொண்ட பிறகு அதை மிகக் குறைவாக உணர்ந்ததாக ஒரு சோதனை முறை காட்டியது.
சரும பொலிவு
சிறிய அளவிலான இஞ்சியை தவறாமல் உட்கொள்வது உங்கள் சரும முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும். உங்கள் சருமத்திற்கு உள்ளிருந்து நன்மைகளை வழங்கும் உணவுகளில் இஞ்சியும் ஒன்றாகும். உங்கள் செரிமானத்தை விரைவுபடுத்துவதன் மூலம் இஞ்சி உங்கள் இரைப்பைக் குழாயிலிருந்து எதிர்மறை விளைவுளை ஏற்படுத்தும் நச்சுப்பொருட்களை விரைவாக வெளியேற்றுகிறது.
தொற்றுநோய்களில் இருக்கின்று பாதுகாக்கிறது
தினமும் இஞ்சி உணவில் சேர்த்துக் கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக பல தொற்றுநோய்களில் இருக்கின்று பாதுகாக்கும். இதிலிருக்கும் ஜிஞ்சரால் பல பாக்டீரியாக்களை தடுக்கக்கூடும். பல ஆய்வுகள்,ஜிஞ்சரால் பெரிடோன்டிடிஸ் மற்றும் ஈறு அழற்சி உள்ளிட்ட அழற்சி ஈறு நிலைமைகளை திறம்பட எதிர்த்துப் போராடுகிறது என்பதை நிரூபித்தது.
நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்தும்
நெஞ்செரிச்சல் என்று அழைக்கப்படும் மார்பில் எரியும் வலி என்பது ஒரு மோசமான நிலை, இது சிலருக்கு பெரும் தொல்லைகளை உருவாக்கி, மருந்து சிகிச்சையைத் தேட வைக்கிறது. நெஞ்செரிச்சல் நோயால் நீங்கள் தாக்கப்பட்டால், சிறிது இஞ்சியை கையில் வைத்திருப்பது மருந்தகத்திற்கான பயணத்தை மிச்சப்படுத்தும். குமட்டல் எதிர்ப்பு மற்றும் இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இந்த விரும்பத்தகாத பிரச்சினைக்கு சரியான இயற்கை தீர்வாக அமைகின்றன. இஞ்சி நெஞ்செரிச்சல் பிரச்சினையிலிருந்து விடுபட உதவுவது மட்டுமல்லாமல், அவற்றைத் தடுக்கவும் முடியும். அதற்கு நீங்கள் தினமும் சிறிதளவு இஞ்சியை உட்கொள்ள வேண்டும்.