29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
acne 159
முகப் பராமரிப்பு

தெரிஞ்சிக்கங்க…உங்க முகம் இப்படி இருக்கா? அதுக்கு உடம்புல இருக்குற இந்த பிரச்சனை தான் காரணம் தெரியுமா?

வைட்டமின் ஏ என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். இது சரியான பார்வை, வலுவான நோயெதிர்ப்பு மண்டலம், இனப்பெருக்கம் மற்றும் ஆரோக்கியமான சருமம் உள்ளிட்ட பல உடலின் முக்கிய செயல்பாடுகளுக்கு முக்கியமானது. உணவுகளில் இரண்டு வகையான வைட்டமின் ஏ காணப்படுகிறது. அவை முன்னரே தயாரிக்கப்பட்ட வைட்டமின் ஏ மற்றும் புரோவைட்டமின் ஏ.

முன்னரே தயாரிக்கப்பட்ட வைட்டமின் ஏ ஆனது ரெட்டினோல் என்றும் அழைக்கப்படுகிறது. இது பொதுவாக இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் பொருட்களில் காணப்படுகிறது. மறுபுறம், உடலானது தாவர வகை உணவுகளான சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள கரோட்டினாய்டுகளை வைட்டமின் ஏ ஆக மாற்றுகிறது.

பெரும்பாலும் இந்த வைட்டமின் குறைபாட்டினால் கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் மற்றும் நாள்பட்ட வயிற்றுப் போக்கும் இந்த குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

 

வறண்ட சருமம்

சரும செல்களின் உருவாக்கத்திற்கும், சரிசெய்வதற்கும் வைட்டமின் ஏ முக்கியமானது. அழற்சியால் ஏற்படும் குறிப்பிட்ட சில சரும பிரச்சனைகளை எதிர்த்துப் போராடவும் வைட்டமின் ஏ உதவுகிறது. ஒருவரது உடலில் வைட்டமின் ஏ போதுமான அளவில் இல்லாவிட்டால் தான், எக்ஸிமா மற்றும் சில சரும பிரச்சனைகள் வருகின்றன. வறண்ட, அரிப்புமிக்க மற்றும் அழற்சியுடைய சருமம் தான் எக்ஸிமா என்னும் நிலை. எனவே உங்கள் சருமம் மிகுந்த வறட்சியுடன், அரிப்பையும் உண்டாக்கினால், உடலில் வைட்டமின் ஏ குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

பார்வை இழப்பு, வறண்ட கண்கள்

கண் பிரச்சனைகள் வருவதற்கு வைட்டமின் ஏ குறைபாடு தான் காரணம். இந்த குறைபாடு தீவிரமாகும் போது, பார்வை இழப்பு அல்லது கார்னியா இறப்பதற்கு வழிவகுக்கும். வைட்டமின் ஏ குறைபாட்டின் முதன்மையான அறிகுறிகளுள் ஒன்று வறண்ட கண்கள் அல்லது போதுமான அளவு கண்ணீர் உற்பத்தி செய்யப்படாமல் இருப்பது. ஆகவே உங்கள் கண்கள் வறண்டு இருப்பது போல் உணர்ந்தாலோ அல்லது கண்ணீரே வராமல் இருந்தாலோ, உங்கள் உடலில் வைட்டமின் ஏ குறைபாடு உள்ளது என்று அர்த்தம். ஆரம்பத்திலேயே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், பின் பார்வை இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.

மாலைக்கண் நோய்

கண்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஏ மிகவும் இன்றியமையாத சத்தாகும். இந்த வைட்டமின் ஏ குறைபாட்டின் தீவிர நிலையில் உண்டாவது தான் மாலைக்கண் நோய். கண்களில் ஏற்படும் பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சித்து, வைட்டமின் ஏ சத்துள்ள உணவுகளை உண்டு வந்தால், மாலைக்கண் நோயில் இருந்து விடுபடலாம்.

மலட்டுத்தன்மை மற்றும் கருத்தரிப்பதில் சிக்கல்

ஆண் மற்றும் பெண்களின் இனப்பெருக்கத்திற்கு வைட்டமின் ஏ அத்தியாவசியமானது. அதோடு குழந்தையின் சரியான வளர்ச்சிக்கும் வைட்டமின் ஏ இன்றியமையாதது. நீங்கள் கருத்தரிக்க நினைத்து முடியாமல் போனால், அதற்கு உங்கள் உடலில் வைட்டமின் ஏ குறைவாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் வைட்டமின் ஏ குறைபாடு, கருச்சிதைவையும் உண்டாக்கும்.

தாமதமான வளர்ச்சி

வளரும் குழந்தைகளின் உடலில் போதுமான வைட்டமின் ஏ சத்து இல்லாவிட்டால், அவர்களின் வளர்ச்சி தடைபடுவதைக் காணலாம். மனித உடலின் சரியான வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ சத்தானது மிகவும் அவசியம். எனவே உங்கள் குழந்தை வயதிற்கு ஏற்ற வளர்ச்சி அடையாமல் இருந்தால், அவர்களின் உடலில் போதுமான வைட்டமின் ஏ சத்து இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தொண்டை மற்றும் மார்பு தொற்றுகள்

அடிக்கடி தொண்டை அல்லது மார்பு பகுதியில் தொற்றுகள் ஏற்படுகிறதா? அப்படியானால் அது வைட்டமின் ஏ குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். வைட்டமின் ஏ சுவாச பாதையில் உள்ள தொற்றுக்களைத் தடுக்கவல்லது. இந்த சத்து குறைவாக இருக்கும் பட்சத்தில், ஒருவர் அடிக்கடி தொண்டை மற்றும் மார்பு பகுதியில் பிரச்சனைகளை சந்திப்பார்.

காயம் குணமாவதில் தாமதம்

விபத்து அல்லது அறுவை சிகிச்சைக்கு பின் காயங்கள் குணமாகாமல் இருந்தால், அதற்கு உடலில் வைட்டமின் ஏ மிகவும் குறைவாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில் வைட்டமின் ஏ தான் கொலாஜனை உற்பத்தி செய்கிறது. இச்சத்து குறைவாக இருக்கும் போது, காயங்களானது அவ்வளவு எளிதில் குணமாகாது மிகுந்த வேதனையை அளிக்கும்.

முகப்பரு

முகப்பரு உங்களுக்கு அதிகமாக வருகிறதா? அப்படியானால் உடலில் வைட்டமின் ஏ சத்து குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுபட வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.

Related posts

அழகு குறிப்புகள்

nathan

இதை முகத்தில் ‘மாஸ்க்’ போல போட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால் முகம் இளமையாக மாறும்…..

sangika

மாசில்லாத கண்ணாடி போன்ற சருமம் பெற வேண்டுமா?

nathan

அடர்த்தியான புருவத்திற்கு இயற்கை வழிமுறைகள்

nathan

இதை நீங்களே பாருங்க.! உதட்டை விட்டு கண்ணுக்கு தாவிய பெண்கள்

nathan

முக அழகை முத்தாக பராமரிக்க சூப்பர் டிப்ஸ்….

nathan

பலவகை பேஷியல்கள் இருந்தாலும் ஒயின் மற்றும் வோட்கா பேஷியல்கள் முகத்திற்கு கூடுதல் அழகு தருகின்றன

nathan

ஹீரோயின் மாதிரி அழகாக ஜொலிக்கணுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

நீங்கள் முகம் பொலிவுடன் இருக்க வேண்டுமா?அப்ப இத படியுங்கள்…

nathan