24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
625.500.560.350.160.300.053.800.900 2
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் காலத்தில் மாத்திரம் முகத்திற்கு சோப்பு பயன்படுத்தக் கூடாதாம்! ஏன் தெரியுமா?

மாதவிடாய் என்பது மாதம் மாதம் பெண்களுக்கு ஏற்படும் ஒரு சுழற்சியாகும். ஆனால் ஒவ்வொரு மாதத்தின் போதும் பெண்கள் அதனைப் புதிதாக அனுபவிப்பது போலவே உணர்கிறார்கள்.

மாதவிடாயின் போது பெண்களுக்கு வயிற்று வலி, உடல் வலி, எரிச்சல் மற்றும் மனசோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு.

அதேபோல ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களினால் பெண்களின் சருமம் வறண்டு மற்றும் கடினமான ஒன்றாக மாறிவிடுகிறது. எனவே மாதவிடாயின் போது உங்கள் சருமத்தினை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்குக் கண்டிப்பாக அவர்களின் மாதவிடாய் சுழற்சியின் போது ஹார்மோன்களின் மாற்றத்தினால் முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

தினமும் உங்கள் முகத்தினை இரண்டு முறை சோப்பு பயன்படுத்தாமல் நல்ல பேஷ் வாஷ் பயன்படுத்திக் கழுவுங்கள்.

சோப்பில் ஒலீயிக் அமிலம் உள்ளது. எனவே பேஷ் வாஷ் பயன்படுத்துவதே சிறந்தது.
இதனை நீங்கள் உங்களின் மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இருந்து செய்யத் தொடங்குங்கள். நல்ல டிஸ்யூ கொண்டு முகத்தினை அவ்வப்போது துடைத்துக் கொள்ளுங்கள்.

வறண்ட சருமம் கொண்டவர்கள் அல்லது முகப்பரு உள்ளவர்கள் தேனைப் பயன்படுத்தலாம். தேனில் இயற்கையாக ஆன்டிசெப்டிக் இருப்பது மட்டுமல்லாமல் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கவும் பளபளக்கச் செய்யவும் உதவுகிறது.
மேலும் நீங்கள் வீட்டிலேயே வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை பயன்படுத்தி முகத்தில் மாஸ்க் போட்டுக் கொள்ளலாம். இவை உங்கள் முகத்தினை ஈரப்பதத்துடன் வைக்கும். இந்த மாஸ்கினை கழுவிய பின்பு ரோஸ் வாட்டரை முகத்தில் அப்ளை செய்யுங்கள்.

ஆரோக்கியமான உணவு
மாதவிடாயின் போது நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் தான் தேர்வு செய்ய வேண்டும்.

உங்களுடைய விருப்பமான ஜங்க் புட்க்கு பை பை சொல்லுங்கள். சோயா, வான்கோழி, மீன், பீன்ஸ் மற்றும் பயறு வகைகள் போன்ற சத்தான உணவுகளை உண்பதால் உங்களின் இரத்த சர்க்கரை அளவினை அதிகரிக்கும்.

ஆனால் நீங்கள் உண்ணும் ஜங்க் புட் உங்களின் வாய்க்கு ருசியாக இருந்தாலும் உங்களின் உடலுக்குத் தேவையான சத்துக்களை வழங்காது. கீரைகள், காய்கறிகள், பழங்கள், முட்டை, பால் போன்ற ஆரோக்கியமான உணவுகள் உங்கள் உடலுக்குத் தேவையான சக்தியைத் தரும்.

தூக்கம்
எவ்வளவு வேலைகள் இருந்தாலும் மாதவிடாயின் போது கண்டிப்பாக நீங்கள் 8 மணி நேரம் தூக்கத்தினை மேற்கொள்ள வேண்டும்.

உங்கள் மாதவிடாய் சுழற்சியின் போது உடல் மற்றும் மனதளவில் சில மாற்றங்கள் நிகழும் அவற்றை எல்லாம் கட்டுப்படுத்த கண்டிப்பாகத் தூக்கம் அவசியம்.

அப்படியில்லையெனில் மனதளவில் அல்லது உடலில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். எனவே கண்டிப்பாக 8 மணிநேர அமைதியான தூக்கத்தை கடைப்பிடிங்கள்.

Related posts

வறண்ட சருமத்தை போக்கும் மருத்துவம்

nathan

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கட்டாயம் செய்யக்கூடாத விஷயங்கள் ?

nathan

சூப்பர் டிப்ஸ்! முதுகு வலி அதிகமா இருக்கா? அப்ப இங்க ஒரு நிமிஷம் அழுத்தம் கொடுங்க…

nathan

மருத்துவ செய்தி ஆரோக்கியம் தரும் சோளம்

nathan

இன்றைய பெண்களுக்கு வரும் அபாயகரமான நோய்கள்

nathan

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை

nathan

வீட்டுக்கு அழகு சேர்க்கும் அலங்கார செடிகள்

nathan

Healthy tips.. தொண்டைப்புண், தொண்டை வலிக்கு முக்கிய தீர்வு.

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! தூக்கம் மிகவும் அவசியம் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

nathan