30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
cover 156
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முதன் முதலில் குழந்தை பெற்ற பெண்களிடம் சொல்ல கூடாத விஷயங்கள் என்ன தெரியுமா?

பெண்கள் குழந்தை பெற்றுவிட்டால் அவர்கள் பெண்மைக்குரிய தன்மையைப் பெற்று முழுமை அடைந்துவிட்டார் என்று கூறுவார்கள். குழந்தைகளைப் பெறுவது சாதாரண விஷயமில்லை. அத்தனை வலிகளையும் வேதனைகளையும் தாண்டி குழந்தைகளைப் பெற்று எடுக்கிறார்கள். இப்படி அத்தனை வேதனைகளையும் வலிகளையும் பொறுத்துக் கொண்டு குழந்தைகளைப் பெற்று எடுத்தபின்பு சிலர் அவர்களைப் பார்த்துச் சொல்லும் விஷயங்கள் அவர்களுக்கு இன்னும் வேதனையை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும். அப்படி அவர்களிடம் என்ன விஷயங்களை எல்லாம் சொல்லக் கூடாது என்று பார்க்கலாம்.

முதன் முதலில் குழந்தை பெற்று வீடு திரும்பியவர்கள் மிகவும் சோர்வாக இருப்பார்கள். அவர்களுக்கு அறிவுரை கூறுவதாக நினைந்து நீங்கள் கூறும் விஷயங்கள் அவர்களின் மனநிலை மற்றும் கோபத்தைத் தூண்டுவதாக அமையும். எனவே சில விஷயங்களைச் சொல்லாமல் இருப்பதே சிறந்தது.

தூக்கம்

புதிதாகக் குழந்தை பெற்றவர்களை பார்க்கச் செல்லும் போது குழந்தை தூங்கும் போது தூங்குங்கள் என்று சிலர் கூறுவார்கள். இது உண்மையில் சாத்தியமற்றது என்பது தெரியும். குழந்தைகள் பகல் முழுவதும் தூங்கி இரவில் அழுவார்கள். அல்லது இரவில் தூங்கி பகலில் அழுது கொண்டிருப்பார்கள். குழந்தைகளின் பழக்கத்தைப் பொறுத்து அவர்களின் தூக்கம் மாறுபடும். எனவே குழந்தை தூங்கிய பின்பு தூங்கு என்று கூறுவது அவர்களுக்குக் கோபத்தைத் தான் ஏற்படுத்தும். உங்களால் முடிந்தால் வந்து குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்களேன் என்று தான் மனதில் நினைப்பார்களாம்.

சோர்வு

ஆஹா, நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்! என்று சிலர் கூறுகிறார்கள். குழந்தைகள் பிறந்த பின்பே தூக்கமில்லாத இரவுகள் தொடங்கிவிடும். அவர்களைப் பார்த்துக் கொள்ளுவதற்கே நேரம் இல்லாத போது எப்படித் தூங்குவதற்கு நேரம் இருக்கும். இதனால் அவர்களின் கண்களுக்குக் கீழே சுருக்கம் ஏற்பட்டுச் சோர்வாகத் தான் இருப்பார்கள். நீங்கள் நன்றாக தூங்குகிறீர்களா என்று நீங்கள் அவர்களிடம் கேட்கும் போது அவர்கள் கூறும் இல்லை என்ற பதில் கூட அவர்களுக்குச் சோகத்தை ஏற்படுத்தும். எனவே இப்படிப்பட்ட கேள்விகளை அவர்களிடம் கேட்காதீர்கள்.

அழுகுதல்

குழந்தைகள் அழும் போது உன் குழந்தை ரொம்ப அழுகிறான் என்று கூறுவதை முதலில் தவிருங்கள். எல்லா குழந்தைகளும் அழுவது சாதாரண விஷயம் தான். சில குழந்தைகள் பசியால் அழுவார்கள். சில குழந்தைகள் தூக்கத்திற்காக அழுவார்கள் இவற்றை நீங்கள் பெரியதாகக் கூற வேண்டாம். இது தாய்க்கு மன அழுத்தத்தை அதிகரித்து அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாகும்.

பையன்/ பெண்

குழந்தை பெற்றவர்களிடம் சென்று நீங்கள் என்ன குழந்தையை எதிர்பார்த்தீர்கள் என்று கேட்பது மிகவும் தவறான விஷயம். அவர்கள் ஏற்கனவே எந்த குழந்தையை எதிர்பார்த்தார்கள் இப்போது அதனால் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பது பற்றித் தெரியாமல் நீங்கள் அவர்களிடம் அந்த கேள்வியைக் கேட்கக் கூடாது. எந்த குழந்தையாக இருந்தாலும் மகிழ்ச்சி தான். எனவே அவர்களிடம் எந்த குழந்தையை எதிர் பார்த்தீர்கள் என்று கேட்க வேண்டாம்.

வேலை

நீங்கள் எப்போது வேலைக்குச் செல்லப் போகிறீர்கள். அவர்கள் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் மன அழுத்தத்தில் இருக்கும் போது எப்போது வேலைக்குச் செல்ல போகிறீர்கள் என்று கேட்பது கூடாது. குடும்பத்தை விடத் தொழில் அவ்வளவு முக்கியமானது அல்ல. குழந்தைகளின் வளர்ச்சியைப் பார்ப்பதற்கு ஈடு வேறு ஏதுமில்லை. மற்றும் சிலர் குழந்தைகளைக் குழந்தை பராமரிப்பு விடுதிகளில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்துவார்கள். மேலும், சில அம்மாக்கள் வேலையை நிறுத்திவிட்டு குழந்தையைப் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இருப்பார்கள் அவர்களிடம் நீங்கள் இந்த கேள்வியைக் கேட்கும் போது வீட்டில் இருப்பது நல்லது இல்லை என்றும் மீண்டும் வேலைக்குச் செல்லலாமா என்ற மனநிலையைத் தூண்டக் கூடும். இது மிகவும் தவறான செயல். எனவே இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்க வேண்டாம்.

மற்றொரு குழந்தை

அடுத்த குழந்தை எப்போது என்று கேட்கும் சிலர். இப்போது இந்த கேள்வி தேவையற்றது. அவர்கள் இப்போதுதான் முதல் குழந்தையைப் பெற்று எடுத்து இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று மற்றொரு குழந்தை எப்போது பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என்று ஒருபோதும் கேட்காதீர்கள்.

உன்னைப் போல்

குழந்தை உன்னைப் போல் இல்லையே என்று கூறுவது. குழந்தைகளைப் பெற்று எடுப்பது அம்மாவாக இருந்தாலும் அவர்களின் தோற்றம் அப்பாக்களை ஒத்து இருந்தால் அதற்கு அவர்கள் என்ன செய்வார்கள். குழந்தை அப்பாவை போல் இருக்கிறது என்று கூறினால் பரவவில்லை உன்னைப் போல் இல்லை என்று கூறாதீர்கள். இது தாய்க்குச் சற்று மனகஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே அடுத்தமுறை குழந்தை பெற்றவர்களைப் பார்க்கச் செல்லும் போது சற்று கவனமாக இருங்கள்.

Related posts

உங்களுக்கு தெரியுமா மென்ஸ்சுரல் கப் ஒருமுறை வாங்கினா எத்தனை முறை பயன்படுத்தலாம்?

nathan

ஒயரிங்’ பணிகளில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்

nathan

உங்க கிட்னியில் கற்கள் உருவாக இருக்கணுமா?

nathan

பெண்களுக்கான சுகாதார குறிப்புகள்

nathan

தெரிந்துகொள்வோமா? நீங்க தலைவலியால அதிகம் அவஸ்தைப்படுறவங்களா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடாதீங்க…

nathan

உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன?தெரிந்துகொள்வோமா?

nathan

தெரிந்துகொள்வோமா? பற்களை வெண்மையாக்க சில வழிமுறைகள்

nathan

பெண்கள் தாமதமாக பூப்பெய்துவது நல்லதா?

nathan

மாதவிடாயின் போது வயிறுவலியால் அவதிப்படுகிறீர்களா? சூப்பரா பலன் தரும்!!

nathan