28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
அசைவ வகைகள்

வஞ்சரம் மீன் குழம்பு

09 1433837346 fishcurry

மீன்களில் பல வெரைட்டிகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு மீனையும் சரியான பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டால் தான் அதன் உண்மையான சுவையை ருசிக்க முடியும். அதில் இப்போது பார்க்கப்போவது, வஞ்சரம் மீன் குழம்பைப் பற்றி தான்.

வஞ்சரம் மீனை குழம்பு, ப்ரை என்று எப்படி செய்து சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும். இப்போது அவற்றில் வஞ்சரம் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

வஞ்சரம் மீன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம் (நறுக்கியது)
பூண்டு – 100 கிராம் (நறுக்கியது)
தக்காளி – 1/4 கிலோ (நறுக்கியது)
புளி – 1 நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

முதலில் மீனை சுத்தம் செய்து, நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் புளியை 2 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.

அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, பின் புளிச்சாறு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மீன் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் தீயை குறைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

மீன் நன்கு வெந்ததும், அதனை இறக்கி, அதில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைத் தூவினால் வஞ்சரம் மீன் குழம்பு ரெடி!!!

Related posts

பிரியாணி மசாலா மீன் வறுவல்

nathan

ரமலான் ஸ்பெஷல்: பெப்பர் சிக்கன் வறுவல்

nathan

மட்டன் கடாய்

nathan

ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை

nathan

தஹி கபாப்: ரமலான் ஸ்பெஷல்

nathan

மட்டன் சில்லி ஃப்ரை

nathan

மட்டர் பன்னீர்

nathan

தக்காளி ஆம்லெட்

nathan

புதினா இறால் குழம்பு

nathan