29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.053 8
மருத்துவ குறிப்பு

உஷாரா இருங்க! சிறுநீர் ரத்தச் சிவப்பாக இருந்தால் எதன் அறிகுறி தெரியுமா?

சிறுநீர் என்பது கிட்னியில் உருவாகும். நம் இரத்தத்தில் இருந்து கழிவு பொருட்கள் சிறுநீராக சேரும்.

சிறுநீரில் இரத்தம் கலக்கும் போது சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேற்றும் . இதனை ஹீமெச்சூரியா என கூறுகிறார்கள். சிவப்பு என்றாலே பொதுவாக எச்சரிக்கைக்கான நிறமாகும்.

சிறுநீரக பாதையில் தொற்றுக்கள், கிட்னி மற்றும் சிறுநீர்ப்பைகளில் கற்கள், கிட்னி, புரோஸ்டேட் அலது சிறுநீர்ப்பையில் புற்று நோய் போன்ற காரணங்களால் இரத்த கசிவும் சிவப்பு சிறுநீரும் வெளியேறும் என்று கூறப்படுகின்றது.

இந்த நிலை ஏற்படும் போது சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படும். அப்படிப்பட்ட நேரத்தில் சிறுநீர் கழிப்பதே சிரமமாகி விடும்.

இதுபோன்ற பிரச்சினையை சந்திக்கமால் இருக்க இதன் அறிகுறிகளை என்ன என்பதை தெரிந்து வைத்தாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

  • சிறுநீர் ரத்தச் சிவப்பாக இருந்தால் ஹிமடூரியா என்ற பிரச்சனை இருக்கும். இதனை சாதரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் ஏதேனும் ஒரு பாகத்தில் ரத்தப் போக்கு உண்டாகியிருந்தால் இந்த பிரச்சனை உண்டாகும்.
  • அளவுக்கு அதிகமாக புகைப்பிடிப்பவர்களுக்கு சிரு நீரக் புற்று நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் அவர்களுக்கு ரத்தக் கட்டிகளாக சிறு நீரில் வெளிப்படும்.
  • சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் அதன் பாதிப்பாக சிறு நீரில் ரத்தம் வெளிப்படும். அந்த சமயங்களில் காபி, தே நீர் குடிப்பதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் பாதிப்பு இன்னும் அதிகமாகும்.
  • சிறுநீரகக் குழாயில் உண்டாகும் கோளாறுகளான ப்ரோஸ்டேட் வீக்கம், ப்ரோஸ்டேட் புற்று நோய், சிறுநீரக செயலிழப்பு, அதிகப்படியான மாத்திரைகள், பயாப்ஸி ஆகியவைகளாலும் சிறு நீரில் ரத்தம் வெளிப்படும்.
  • சில வகை ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களான சிக்கில் செல் அனிமியா, ரத்தத் தட்டு நோய்கள் ஆகியவற்றாலும் சிறுநீரில் ரத்தம் வெளியேறும்.
  • சிறுநீரில் ரத்தத்தோடு எரிச்சல், அடிவயிறு வலி, காய்ச்சல், வாந்தி, மயக்கம் ஆகியவைகளும் காணப்பட்டால் உடனையாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… எப்போது சிசேரியன் அவசியம்?

nathan

ஆமணக்கு எண்ணெய்யில் உள்ள அற்புத பயன்கள்….!

nathan

உங்கள் பாதங்களில் இந்த அறிகுறிகள் இருந்தால், உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

nathan

தோல் நோய் குணமாக…

nathan

பெண்களின் மெனோபாஸ் காலத்தில் வரும் நோய்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இவையெல்லாம் பெண்களின் கருவளத்தைப் பாதிக்கும் காரணிகள் என்பது தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா டால்கம் பவுடரில் இருக்கும் நச்சு மூலம் ஏற்படும் அபாயங்கள்!

nathan

ஆண்மையை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான உண்மையான தகவல்கள்!!!

nathan

தற்போதுள்ள பெண்கள் திருமணம் செய்துக் கொள்ள பயப்படுவது ஏன் தெரியுமா…?

nathan