29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1 15579
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த காளான் சாப்பிட்டா பெண்களுக்கு குழந்தை சீக்கிரம் உண்டாகுமாம்…

சீனா, ஜப்பான் மற்றும் வட அமெரிக்க கண்ட பகுதிகளில் காணப்படும் காளான் வகை ‘மைடேக்’. ஆட்டுத் தலை, மரங்களின் பெண்கோழி, நடனமாடும் காளான் என்றெல்லாம் கூட இது அழைக்கப்படுகிறது.

இக்காளானின் மேற்புறம் பழுப்பு மற்றும் சாம்பல் நிற அலைபோன்ற தொப்பி வடிவிலும் கீழ்ப்பாகம் குழாய் வடிவிலும் காணப்படுகிறது. இது ஏறக்குறைய 23 கிலோ (50 பவுண்ட்) அளவுக்குப் பெரிதாக வளரக்கூடியது. ஓக், இலம் மற்றும் மேப்பிள் மரங்களின் அடியில் இது பெரும்பாலும் காணப்படும்.

ஆட்டுத்தலை காளாண்

மிருதுவான உடலமும் கண்களை உறுத்தாத மென்மையான வண்ணமும் அடர்ந்த மணமும் கொண்டது. உடல் மற்றும் மனநல பிரச்னைகளுக்கான சிகிச்சையிலும், உடலை சமநிலைப்படுத்துவதற்கும் மைடேக் காளான் பயன்படுத்தப்படுகிறது.

நீண்ட ஆயுளோடு, ஆரோக்கியமாக வாழ்வதற்கான சீன மற்றும் ஜப்பானிய பாரம்பரிய மருந்துகளின் இக்காளான் முதன்மையான பொருளாக இடம்பெறுகிறது. இந்த காலகட்டத்தில் மைடேக் காளான் பொடியாக்கப்பட்டு பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்காக ஆரோக்கிய உணவுக்கான கடைகளில் விற்பனையாகிறது.

ஆசிய கண்டத்தை சேர்ந்த உணவு வகைகளுக்கு இது முக்கியமான மூலப்பொருளாகும். இதிலுள்ள எல்-குளூடாமேட் அமிலத்தினால் இது இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு இல்லாத வேறொரு சுவையான, ஜப்பானிய பண்பாட்டின் ஐந்தாவது சுவையான உமாமி சுவையை கொண்டுள்ளது.

ஊட்டச்சத்துகள்

சமைக்கப்படாத மைடேக் காளானை ஒரு கப் எடுத்தால் அதில் 26 கலோரி, 4.8 கிராம் கார்போஹைடிரேட், 1.4 கிராம் புரதம் ஆகியவையும் நியாசின், வைட்டமின் டி, பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் மற்றும் தாதுகளும் அடங்கியுள்ளன.

நோய் தடுப்பாற்றல்

பல்வேறு நோய்க்கூறுகளை எதிர்த்து செயலாற்றக்கூடிய நோய்த்தடுப்பாற்றல் இக்காளானுக்கு உள்ளது. செப்டிக் ஷாக் என்னும் உறுப்புகள் செயலிழப்பு மற்றும் ஆபத்தான குறை இரத்த அழுத்த பாதிப்பு, ஆஸ்துமா, மூட்டு பாதிப்பு ஆகியவற்றுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.

கொலஸ்ட்ரால்

மைடேக் காளானிலிருந்து பெறப்படும் சாறு உடலில் கொழுப்பு அமிலங்கள் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு இதய இரத்தநாளங்களை சுத்தமாக பாதுகாக்கின்றன. மைடேக்கிலிருந்து எடுக்கப்பட்ட மருந்தை எலிகள் மீது பரிசோதித்ததில், இது உடலில் கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் குறைப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வகை 2 நீரிழிவு

இரண்டாம் வகையை சேர்ந்த நீரிழிவு, குளூக்கோஸ் உற்பத்தி, புரதம் மற்றும் லிப்பிடு என்னும் கொழுப்புக்கான வளர்சிதை மாற்றம் ஆகியவற்றை பாதிப்பதோடு நாள்பட்ட நோய்பாதிப்புக்கும் காரணமாகிறது. எலிகளில் செய்யப்பட்ட சோதனைகளின்படி நோய் பாதிப்பை தடுக்கக்கூடிய தன்மைகளை இது கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. உடலில் சர்க்கரையின் அளவை இது குறைக்கிறது.

கருப்பை நீர்க்கட்டி

பிசிஓஎஸ் என்னும் கருப்பை நீர்க்கட்டிகளால் பாதிக்கப்பட்டு குழந்தைபேறின்மையால் தவித்து வரும் பெண்களுக்கான சிகிச்சையில் மைடேக்கிலிருந்து செய்யப்பட்ட மருந்து பயன்படுத்தப்படுகிறது. இன்சுலின் தடுப்பாற்றலை தருவதோடு கருப்பை நீர்க்கட்டி பாதிப்புள்ள பெண்களுக்கு கருமுட்டை உருவாவதை இது துரிதப்படுத்துகிறது. கருப்பை நீர்க்கட்டிக்கான சிகிச்சையில் இது முக்கிய இடம் பெறுகிறது.

புற்றுநோய்க்கான சிகிச்சை

புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் இயல்பு மைடேக் காளானுக்கு உள்ளது. புற்றுநோய் செல்களுக்கு மாறான டி-செல்களை ஊக்குவிக்கக்கூடிய குளூகான் பாலிசாக்கரைடுகள், மைடேக்கிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றில் அதிகம் காணப்படுகிறது. உடலின் நோய் தடுப்பு செயல்பாடுகளை ஒருங்கிணைக்கக்கூடிய சைடோகைன் உற்பத்தியை இது தூண்டுகிறது. மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் தடுப்பு சிகிச்சையில் மைடேக்கிலிருந்து எடுக்கப்படும் மைடேக் டி பிராக்சன் என்னும் புரோடியோகிளைகான் பயன்படுத்தப்படுகிறது.

புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை தாமதப்படுத்துதல், கட்டிக்கு காரணமான மரபணுக்களை ஒழுங்குபடுத்துதல், புற்றுநோய் பாதிப்புள்ள செல்களின் செயல்பாட்டை தடுத்தல், ஹீமோதெரபி என்னும் புற்றுநோய்க்கான வேதியியல் சிகிச்சையின்போது உடலுக்கு பலமளித்தல், எலும்பு மஜ்ஜை பாதிப்புறாமல் பாதுகாத்தல் ஆகியவை மைடேக் காளானிலிருந்து தயாரிக்கப்படும் மருந்தின் வேலைகளாகும்.

எப்படி சாப்பிடவேண்டும்?

மைடேக் காளான், பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. இலையுதிர் காலத்தில் இது அதிகமாக கிடைக்கிறது. உலர்த்தப்பட்ட மைடேக் காளான்கள் முழுமையாக அதற்கான சிறப்பு அங்காடிகளில் கிடைக்கும். அதை வாங்கி சமைக்கலாம்; தேநீர் தயாரிக்கலாம்.

மைடேக் காளான் பொடி மற்றும் காப்ஸ்யூல் என்னும் குளிகையாக ஆரோக்கிய உணவு கடைகளில் கிடைக்கிறது.

எச்சரிக்கை அவசியம்

ஒரு சிலருக்கு மைடேக் உண்பதால் தலைசுற்றல், வாந்தி போன்ற சில பக்கவிளைவுகள் இருக்கலாம். தற்போது இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை கோளாறுகளுக்காக சிகிச்சை பெற்று வருவோர், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார் ஆகியோர் தங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே மைடேக் காளானை சாப்பிட வேண்டும்.

ஏதாவது அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டுமாயின் அதற்கு இரு வாரங்களுக்கு முன்பே மைடேக் உண்பதை நிறுத்தி விடவேண்டும். சிறிய பக்க விளைவுகளையும் தாண்டி ஏதேனும் பாதிப்பு தென்பட்டால், இதை சாப்பிடுவதை விட்டுவிட வேண்டும். மைடேக் தயாரிப்பு சத்துணவு மற்றும் மாத்திரைகளில் கொடுக்கப்பட்டுள்ள செறிவினை கவனித்து கருத்தில் கொள்ளவேண்டும்.

Related posts

ஈறு முதல் இதயம் வரை… நலம் பல தரும் அர்ஜூனா!

nathan

நீங்க ஒரு அப்பாவா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

தம்பதியரின் செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்திற்கு பின் பெண்கள் உடல் எடையை குறைக்க… என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

nathan

சோம்பு நீரின் மருத்துவ குணங்கள்

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! குறைப்பிரசவம் நடக்க காரணமென்ன?

nathan

பெண்களுக்கு எதனால் எல்லாம் கர்ப்பம் தரிக்காமல் போகலாம்?

nathan

சிசேரியன் தழும்பை இயற்கையா மறைய

nathan

உங்களுக்கு இரவு நேரத்தில் இருமல் வாட்டி எடுக்குதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan