25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
மருத்துவ குறிப்பு

தொப்புள் கொடியைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள்!!!

07 1436263200 9umbilical stump
உங்கள் கருவில் இருக்கும் குழந்தை எவ்வாறு பாதுகாப்பாக இருக்கிறது என்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்துள்ளீர்களா? சரியாக உணவருந்துதல், சரியான உடற்பயிற்சி மற்றும் சுவாசப்பயிற்சி மட்டுமே அதற்கு காரணமல்ல. அதற்கும் மேலே ஒன்று உள்ளது.

ஆம், கருவில் வளரும் குழந்தைக்கு அருகிலேயே அது உள்ளது. அது தான் உங்கள் குழந்தையை உயிருடன் வைத்திருக்கிறது. அது வேறு எதுவுமில்லை – உங்கள் தொப்புள் கொடியே! கண்டிப்பாக உங்களில் பலருக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்காது தானே.

சரி, தொப்புள் கொடியைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்களைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

குழந்தை உருவானதை போலவே கருமுட்டையில் இருந்து தான் உருவாகும்

விந்தணுவும் கருமுட்டையும் இணையும் போது, அவை குழந்தையை மட்டும் உருவாக்குவதில்லை. அதனுடன் சேர்ந்து தொப்புள் கொடியையும் உருவாக்குகின்றன. கருமுட்டை தானாகவே கருப்பை சுவற்றில் பதித்துக் கொள்ளும். உட்புற அணுக்கள் வளர்ச்சி அடைந்து சிசுவாக மாறுகிறது. அதேப்போல் வெளிப்புற அணுக்கள் சுவர்களுக்குள் ஆழமாக புதைந்து தொப்புள் கொடியாக உருவாகும்.

பராமரிப்பும் கவனிப்பும் தேவைப்படும்

உங்கள் குழந்தையை போலவே உங்கள் தொப்புள் கொடியும் கூட ஊட்டச்சத்துக்களை எதிர்ப்பார்க்கும். அதனால் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், சீரான உடற்பயிற்சிகள் மற்றும் மதுபானம், நிக்கோடின் அல்லது ஜங்க் உணவுகளை விட்டு தள்ளி இருப்பது மிகவும் அவசியமாகும். இல்லையென்றால் அது தொப்புள் கொடியை பாதித்துவிடும். அப்படி நடக்கையில் பாதிக்கப்பட போவது உங்கள் குழந்தை தான்.

குழந்தையைப் போன்று அதே மரபணுக்களைத் தான் கொண்டுள்ளது

ஆம், இது நூற்றுக்கு நூறு உண்மை. சொல்லப்போனால், பிரசவத்திற்கு முன்னான சோதனைகளில் தொப்புள் கொடியில் இருந்து சேகரிக்கப்பட்ட அணுக்கள், பிறப்பு நிலைக் கோளாறுகளை சீக்கிரமாகவே கண்டுபிடிக்க உதவும். இருப்பினும், இவ்வகையான சோதனைகள் ஆபத்தானது என்பதால் அவைகளை தவிர்க்க வேண்டும்.

குழந்தையை உயிருடன் வைத்திருக்கும்

உங்கள் உடல் உங்கள் சிசுவை வெளிப்புற பொருளாக கருதி, அதனை நிராகரிக்காமல் இருப்பதற்கு காரணமே உங்கள் தொப்புள் கொடி தான். அதற்கு பிறபொருளெதிரிகள் சத்துக்களை அளித்து சிசுவை பாதுகாக்கிறது. தொற்றுக்களை எதிராக சிசு போராடுவதற்கும் கூட இந்த பிறபொருளெதிரிகள் உதவுகிறது.

கர்ப்பத்தின் முன்னேற்றத்திற்கு ஒற்றை ஆளாக உதவிடும்

தொப்புள் கொடி எச்.சி.ஜி. என்ற ஹார்மோனை சுரக்கும். கருப்பைகள் முட்டைகளை வெளியேற்றாமல் தடுக்கவும், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த ஹார்மோன் உதவிடும். இதனால் கருவில் இருக்கும் உங்கள் குழந்தையின் வளர்ச்சி அமைதியாக நடைபெறும்.

தாய்ப்பால் கொடுப்பதற்கு இது தயார்படுத்தும்

ஹ்யூமன் ப்ளசெண்டல் லாக்டோஜென் (எச்.பி.எல்) என்பதை இது சுரக்கும். தாய்ப்பால் கொடுப்பதற்கு இது உங்களை தயார் படுத்தும்.

தனித்துவமானது; ஒவ்வொரு கருவிற்கும் இது வேறுபடும்

எப்படி ஒவ்வொரு குழந்தையும் வேறுபட்டு இருக்கிறதோ, தொப்புள் கொடியும் கூட அதேப்போல தான். ஒவ்வொரு கர்ப்பத்திற்கும் அதன் அளவு, வடிவம் போன்றவைகள் மாறுபடும். அதேப்போல் ஒரு பெண்ணுக்கும் மற்ற பெண்ணுக்கும் இடையே கூட அது மாறுபட்டே இருக்கும். இருப்பினும் அதன் வேலையை அது திறம்படவே செய்யும். உங்கள் தொப்புள் கொடியின் தோரணை சிசுவின் நலத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதே மாதிரி பிரசவத்தின் போது, பிரச்சனை ஏற்படுவதற்கு காரணமாக இருப்பதும் அதன் தோரணையே. முன்புற தொப்புள் கொடி என்றால் சிசேரியன் செய்ய வேண்டி வரும். அதுவே பின்புற தொப்புள் கொடி என்றால் சுகப்பிரசவம் ஆகலாம். குழந்தைக்கு உணவு மற்றும் ஆக்சிஜென் கொடுக்கும் வகையில் இரண்டுமே அதன் பணிகளை திறம்பட புரியும்.

உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையேயான உயிர்பாதை

கர்ப்ப காலத்தின் போது, ஒவ்வொரு நிமிடமும், கருப்பை வழியாக இரத்தம் அனுப்பப்படுகிறது. அப்போது ஊட்டச்சத்துக்களும் பரிமாறப்படுகிறது. மேலும் சிசுவின் கழிவை இரத்த ஓட்டத்தின் வாயிலாக வெளியேற்றவும் இது உதவும்.

பிரித்து எடுத்துவிடக்கூடிய உறுப்பு இது

குறிப்பிட்ட காரணத்திற்காக உங்கள் உடலுக்குள் வளரும் உறுப்பே தொப்புள் கொடி. அதன் நோக்கம் நிறைவேறியவுடன் அது தூக்கி எறியப்படும். மற்ற பயனற்ற உடலுறுப்புகளை போல வேலை முடிந்தாலும் கூட அது உள்ளேயே தங்காது.

உண்ணத்தக்க கூடியது

இதில் அளவில்லா உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. குழந்தை பேறுக்கு பிற்பட்ட காலத்தில் ஏற்படும் அழுத்தத்தை போக்க சிலர் இதனை உண்ண விரும்புவர். உங்கள் சொந்த இடர்பாட்டில் வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள்.

குழந்தைக்கு பிறகே அது பிறக்கிறது

தொப்புள் கொடி பிறக்காமல் உங்கள் பிரசவம் முழுமை அடையாது. குழந்தை பிறந்து விட்ட போதிலும், தொப்புள் கொடியை வெளியே எடுக்கும் வரை நீங்கள் இறுக்கங்களை உணரலாம். தொப்புள் கொடி பிரசவத்தை பிறப்பிற்கு பின் என கூறுவார்.

கருவை விட்டு வெளியேறிய பின்பும் உயிருடன் இருக்கும்

பிரசவமான பின்பும் கூட, கருவை விட்டு வெளியேறிய தொப்புள் கொடி, உயிருடன் தான் இருக்கும்; ஆனால் சில நிமிடங்களுக்கு மட்டும். அதுவும் உங்கள் குழந்தைக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்க தொப்புள் கொடி வெட்டி எடுக்கப்பட்ட பின்பு, அது செயலாற்றுவது நின்று விடும். அதன் பின் அது ஒரு மருத்துவ குப்பையே.

Related posts

சூப்பர் டிப்ஸ்! வறட்டு இருமல், சளியை போக்கும் கற்பூரவள்ளியின் பயன்கள்

nathan

மதுவை ஒழிப்போம் வீட்டை காப்போம்

nathan

ஸ்மார்ட்போன் அதிகம் சூடாவதைத் தடுக்கும் வழிகள்!

nathan

தாம்பத்தியம் சிறக்க உடல்ரீதியாக தயாராவதோடு மனரீதியாகவும் தயாராக வேண்டும்

nathan

ஆண்கள் பெண்களை கட்டிப்பிடிக்கும் விதங்களும் அதன் அர்த்தங்களும் -தெரிஞ்சிக்கங்க…

nathan

வெண் புள்ளியிலிருந்து விடுதலை பெற சூப்பரான இயற்கை வைத்தியம் – தெரிந்துகொள்வோமா?

nathan

தூக்கத்தை கெடுக்கும் மூக்கடைப்பு பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்

nathan

ஹைப்போ தைராய்டு உள்ளவர்களால் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாது.

nathan

பிறவி குணாதிசயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் வினோதமான செயல்பாடுகள்!!!

nathan