29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.053.800.90 9
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த 7 மூலிகை இருந்தால் மட்டும் போதும்! எவ்வளவு மோசமான மாதவிடாய் வலியும் சரியாகிவிட வேண்டுமா?

மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி என்பது பெண்களுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

பொதுவாக மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கால் மற்றவர்கள் மீது எரிச்சல் , முகப்பரு, சோர்வான நிலை போன்றவையும் ஏற்படக்கூடியது சகஜம்.

குறிப்பாக அடி வயிற்று வலி போன்றவை அவர்களை எந்தவித வேலையும் செய்ய முடியாத அளவிற்கு வாட்டும்.

இதற்காக சில வலி நிவாரணி மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

இதனை தவிர்க்க வேண்டுமாயின் சில இயற்கை முறை மூலிகைகளை எடுத்து கொண்டாலே போதும். வயிற்றுவலியில் இருந்து எளிய முறையில் விடுபடலாம்.

அந்தவகையில் தற்போது மாதவிடாய் வலியை சரி செய்யக்கூடிய சில எளிய இயற்கை வைத்தியங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • ஒரு கப் கொதிக்கும் நீரில் 1 முதல் 2 கிராம் ​பூட்டகேசி மூலிகை மூலிகை தூள் சேர்த்து, திரிபு, தேன் சேர்த்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வர வேண்டும். இதன் மூலம் உங்க மாதவிடாய் பிடிப்பை குறைக்கலாம்.
  • கச்சூர் மாதவிடாய் பிடிப்பு மற்றும் கால் பிடிப்பை தணிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 1-3 கிராம் மூலிகை பவுடரை வெதுவெதுப்பான நீரில் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது 300-450 மி. கி மாத்திரையாக பெறலாம். அல்லது 50 மில்லி தண்ணீரில் கால் அங்குல அளவு வேரை போட்டு தண்ணீர் பாதியாக குறையும் வரை வேக வைக்க வேண்டும்.
  • 2 கப் தண்ணீரில் 2 சிட்டிகை ஓம விதைகளை சேர்த்து தண்ணீர் பாதியாக வற்றும் படி செய்யுங்கள். பிறகு வடிகட்டி தேன் கலந்து ஒரு நாளைக்கு 2-3 தடவை என குடியுங்கள்.
  • ஒரு டம்ளர் தண்ணீரில் 1 டீ ஸ்பூன் வெந்தய விதைகளை இரவில் ஊற வைத்து விடுங்கள். அடுத்த நாள் காலையில் விதைகளுடன் அப்படியே தண்ணீரை குடியுங்கள். இல்லையென்றால் விதைகளை வடிகட்டி விட்டு தண்ணீரில் கருப்பு உப்பு போட்டு குடியுங்கள். இது உங்க மாதவிடாய் வலியை குறைக்க பயன்படுகிறது.
  • பெண்கள் தங்கள் மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு 3-5 நாட்களுக்கு முன்பு வெல்லத்தை சாப்பிட்டு வாருங்கள். முடிந்தால் வெந்தயம், ஓமம் மற்றும் வெல்லம் சேர்த்து ஒரு உருண்டை மாதிரி கூட நீங்கள் செய்து சாப்பிடலாம். இதை நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் 2-3 உருண்டை என வெதுவெதுப்பான நீருடன் சாப்பிட்டு வாருங்கள்.
  • வெறும் வயிற்றில் 1 டம்ளர் கற்றாழை ஜூலை குடித்து வரலாம். மாதவிடாய் பிடிப்பு ஆரம்பிப்பதற்கு 3-5 நாட்களுக்கு முன்பாக இதை செய்து வாருங்கள். மாதவிடாய் காலம் முழுவதும் செய்யுங்கள்.
  • மாதவிடாய் பிடிப்பை போக்க உங்க அடிவயிற்று பகுதியில் நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்து விடலாம். மசாஜ் செய்யும் போது கீழ்நோக்கி மசாஜ் செய்யுங்கள். நல்லெண்ணெய்யை வெதுவெதுப்பாக சூடாக்கி அப்ளே செய்யுங்கள். வெதுவெதுப்பான நீர் பேக் ஒத்தடமும் இதனுடன் செய்து வாருங்கள்.

Related posts

முதலுதவிகள்… முத்தான அறிவுரைகள்! ஒரு டஜன் யோசனைகள்!

nathan

மாதவிடாய் நிறுத்தத்தின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்!

nathan

பெண்களே உங்களுக்கு ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க ஆசையா?

nathan

தெரிந்துகொள்வோமா? உலகையே அச்சுறுத்தும் நீரிழிவு நோயை எப்படி விரட்டுவது?

nathan

மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பு

nathan

உங்க பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வதனால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

nathan

வயிற்று புழு, சொறி, சிரங்கை குணப்படுத்தும் குப்பைமேனி

nathan

இன்சுலின் அளவை சீராக வைப்பதற்கான இயற்கை வழிகள் !

nathan