28.1 C
Chennai
Saturday, Aug 9, 2025
skinpores
முகப் பராமரிப்பு

இதோ எளிய நிவாரணம்! உங்க சருமத்துல எப்பவும் எண்ணெய் வழியுதா? தக்காளி ஒன்னு போதும் அத நிறுத்த…!

சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயின் காரணமாகச் சருமம் மந்தமாகவும், பருக்களுடனும் காட்சியளிக்கிறது. எனவே உங்கள் எண்ணெய் சருமத்திற்கு சிகிச்சையளிக்க தக்காளி ஒரு சிறந்த தீர்வாக அமையும். தக்காளியில் உள்ள அஸ்ட்ரிஜென்ட் பண்பு சருமத்தை மென்மையாக்கவும், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவும்.

 

இது சருமத்திலிருந்து அசுத்தங்கள் மற்றும் நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மேலும் தக்காளி சருமத்தில் உள்ள pH அளவை சமநிலைப் படுத்துகிறது. எனவே தக்காளியைப் பயன்படுத்தி எவ்வாறு வீட்டிலேயே உங்கள் எண்ணெய் சருமத்திற்குத் தீர்வு காணலாம் என்று பார்க்கலாம்.

சர்க்கரை

சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்குச் சர்க்கரை மற்றும் தக்காளி கலந்த ஸ்க்ரப் உங்களுக்கு உதவும். ஒரு தக்காளியை எடுத்து அரைத்து பேஸ்ட்டாக மாற்றி அதனுடன் ஒரு தேக்கரண்டியளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். பின்னர் முகத்தினை நன்றாகக் கழுவி கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள்.

தேன்

தக்காளி மற்றும் தேன் கலந்த கலவை முகத்தில் தோன்றும் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும். தேனில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் பண்புகள் முகப்பருக்களை அகற்ற உதவும். ஒரு தக்காளியை எடுத்து அரைத்து அதனுடன் ஒரு தேக்கரண்டியளவு தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் விட்டு பின்னர் கழுவுங்கள். இந்த முறையை வாரத்தில் 3 முதல் 4 முறை செய்யலாம்.

எலுமிச்சைச் சாறு

எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. இது சருமத்தில் உள்ள துளைகளைச் சரி செய்யவும், இறந்த சரும செல்களை அகற்றவும் உதவுகிறது. ஒரு தக்காளியை எடுத்து அரைத்து பேஸ்ட்டாக மாற்றி அதனுடன் ஒரு தேக்கரண்டியளவு எலுமிச்சை சாறினை சேர்த்து முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள். இதனை வாரத்தில் ஒரு முறை செய்தால் போதுமானது.

வினிகர்

வினிகர் சருமத்தில் உள்ள பி.எச் அளவை சமநிலைப்படுத்துவதோடு, அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இரண்டு தேக்கரண்டியளவு தக்காளி சாறு மற்றும் இரண்டு தேக்கரண்டியளவு வினிகர் சேர்த்துக் கலக்கி பஞ்சு எடுத்து அதில் நனைத்து முகத்தில் அப்ளை செய்து காய்ந்த பிறகு கழுவுங்கள். இந்த முறையை வாரத்தில் 2 முதல் 3 முறை செய்யலாம்.

ஓட்ஸ்

சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை அகற்ற ஓட்ஸ் உதவும். 2 தக்காளியின் சாற்றை எடுத்து அதனுடன் 2 தேக்கரண்டியளவு ஓட்ஸ் சேர்த்துக் கலந்து முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் ஸ்க்ரப் செய்து கழுவுங்கள்.

Related posts

சூப்பர் டிப்ஸ்.. முக அழகிற்கு…

nathan

முகத்தில் மங்குவா? இனி வெளியே செல்ல கூச்சம் வேண்டாம். இதை ட்ரை பண்ணுங்க

nathan

முகத்திற்கு இளமையும், பளபளப்பும்

nathan

Super tips.. சாருமத்தை அழகு படுத்த ஒரு சிறந்த இயற்கையான முறை!

nathan

அம்மை வடு அகல

nathan

நீண்ட நாட்கள் இளமையாக இருக்கணுமா..?அப்ப இத படிங்க!

nathan

முகம் பளபளக்க புரூட் மசாஜ்

nathan

அழகாகவும் இளமையாகவும் ஜொலிக்க இத ட்ரை பண்ணுங்க..!

nathan

அழகு, சரும பிரச்சனைகளுக்கு வரமளிக்கும் வேப்பிலை

nathan