25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
தலைமுடி சிகிச்சை

தினமும் தலைக்கு ஷாம்பு போடுவதால் ஏற்படும் தீய விளைவுகள்

28 1430204131 3 hair wash1

ஷாம்பு வாங்கும் போது நாம் அந்த ஷாம்பு அழகான, கருப்பான மற்றும் பட்டுப்போன்ற முடியை பெற உதவுமா என்று யோசிப்போமே தவிர, அதனால் ஸ்கால்ப் மற்றும் முடிக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா என்று நினைத்து கூட பார்த்ததில்லை. ஆனால் கீழே கூறியவாறு பின்பற்றி வந்தால், நிச்சயம் ஷாம்புவினால் எவ்வித தீய விளைவுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.

பொதுவாக ஷாம்பு வாங்கும் முன், அதனை விலை, என்ன பிராண்ட் மற்றும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். ஆனால் ஷாம்புவில் ஸ்கால்ப் மற்றும் முடிக்கு தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் அதிகம் உள்ளதா என்று பார்க்கமாட்டோம். ஆனால் அப்படி கட்டாயம் பார்க்க வேண்டும்

ஏனெனில் ஷாம்புவானது என்னதான் தலையில் உள்ள அழுக்கை போக்க உதவினாலும், அதனை அளவுக்கு அதிகமாக, அதுவும் அன்றாடம் பயன்படுத்தினால், அதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும்.

இங்கு தினமும் தலைக்கு ஷாம்பு போடுவதால் ஏற்படும் தீய விளைவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

புற்றுநோய்

ஷாம்புவில் டைஎத்தனாலமைன் என்னும் ஈரப்பதமான பொருளும், நைட்ரைட் என்னும் பதப்படுத்தும் பொருளும் உள்ளது. இந்த இரண்டும் ஒன்று சேர்ந்து நுரை போன்ற புற்றுநோயை ஏற்படுத்தும் கெமிக்கலான நைட்ரோசமைன்ஸாக வினைபுரியும். மேலும் ஷாம்புவில் பதப்படுத்தும் பொருளான மார்பக புற்றுநோயை உண்டாக்கும் பாராபென்கள் உள்ளன.

சிறுநீரக மற்றும் கல்லீரல் பிரச்சனைகள்

டைஎத்தனாலமைன் மற்றும் ட்ரைஎத்தனாலமைன் போன்றவை கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களைப் பாதிக்கும் கெமிக்கல்களாகும். எனவே இந்த கெமிக்கல்கள் உள்ள ஷாம்புவை அன்றாடம் பயன்படுத்தினால், நிச்சயம் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். முக்கியமாக இந்த பொருட்கள் விலை மிகவும் குறைவாக விற்கப்படும் ஷாம்புவில் அதிக அளவில் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

முடி மற்றும் ஸ்கால்ப் பிரச்சனைகள்

சோடியம் லாரில் சல்பேட் என்னும் கெமிக்கல் என்ஜின் மற்றும் தரையை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் கெமிக்கல்களில் ஒன்றாகும். எனவே இத்தகைய கெமிக்கல் கலந்த ஷாம்புவைப் பயன்படுத்தினால், அதனால் மயிர் கால்கள் பாதிக்கப்பட்டு, முடி உதிர்தல் அதிகரித்து, பல்வேறு ஸ்கால்ப் பிரச்சனைகளும் அதிகம் ஏற்படும்.

கண் பிரச்சனைகள்

சோடியம் லாரில் சல்பேட், கண் புரைகள் ஏற்படவும் வழிவகுக்கும். எனவே ஷாம்புவை தினமும் பயன்படுத்தி வந்தால், அதில் உள்ள சோடியம் லாரில் சல்பேட் கண்களை பாதித்து, நாளடைவில் பார்வையையே பறித்துவிடும்.

ஆஸ்துமா

ஷாம்புவில் உள்ள ஃபார்மாடல்டிஹைடு என்னும் கெமிக்கல் மூலம், ஆஸ்துமா, நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே ஷாம்புவை தினமும் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

சரும பிரச்சனைகள்

தினமும் ஷாம்பு போட்டு குளித்து வந்தால், சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களின் உற்பத்தி குறைந்து, அதனால் சரும பிரச்சனைகள் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதிலும் அரிப்பு, சரும சிவப்பாதல், சருமத்தில் பருக்கள் போன்றவை அதிகம் வரும்.

நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும்

சோடியம் லாரில் சல்பேட் உள்ள ஷாம்புவை தினமும் பயன்படுத்தி வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, அதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

குறிப்பு

ஷாம்பு என்ன தான் தலையில் உள்ள அழுக்கை போக்க பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதனை அளவாகப் பயன்படுத்த வேண்டும். அதிலும் வாரம் 2 முறை பயன்படுத்துவது தான் நல்லது. முக்கியமாக ஷாம்பு வாங்கும் முன், அதில் SLS என்னும் சோடியம் லாரில் சல்பேட் இல்லாததை வாங்கிப் பயன்படுத்துங்கள்.

Related posts

நீளமாக கூந்தல் வளர உதவும் இயற்கை ஷாம்பு பூந்திக் கொட்டை !!சூப்பர் டிப்ஸ்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முடி செரம் பயன்படுத்துவதால் கிடைக்கும் பல்வேறு பயன்கள்

nathan

உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உரோமத்திற்கு வளர்ச்சி.!!

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்க வெங்காயத்தைப் பயன்படுத்துவது எப்படி?

nathan

கூந்தல் வளர்ச்சியை ஷாம்பு அதிகப்படுத்துமா?

nathan

உங்களுக்கு தெரியுமா எண்ணெய் தேய்க்கும்போது நாம் என்ன தவறு செய்கிறோம்? அப்ப இத படிங்க!

nathan

பெண்கள் கூந்தலுக்கு எண்ணெய் தேய்க்கும் போது சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

nathan

பொடுகை அகற்ற

nathan

பொடுகினை அழிக்க…

nathan