29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
மருத்துவ குறிப்பு

இரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்

f129aad8 63ea 44b9 afdd ed449f9ee9de S secvpf 300x225 615x461
1) எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருட்களை அளவிற்கு அதிகமாக உண்பது.

2) பட்டினி கிடப்பது.

3) குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் நேரம் தவறி சாப்பிடுவது.

4) மிகச் சூடான பானங்களை அருந்துவது

5) சூடான உணவுப் பொருட்களை உண்பது.

6) காரமான மசாலா கலந்த உணவுகளை உண்பது

7) சத்தான உணவுவகைகளை அதிகமாக உணவில் சேர்க்காதது. குடலில் கிருமி உடையவர்கள்

8) மது அருந்துதல், புகை பிடித்தல், புகையிலை முதலியவைகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துதல்

9) கல், மண், தூசி மற்றும் கலப்படங்கள் கலந்த அசுத்தமான உணவுகளை உண்பது.

10) சில வகை மருந்துகளை வெகுகாலமாக மருத்துவரின் ஆலோசனையின்றி உண்பது மேலும் அதிக கவலை, மன அழுத்தம், கோபம் கொள்வது போன்றவைகளிலும் அல்சர் ஏற்படுகிறது.

`நொறுங்கத் திண்ணவனுக்கு நூறு வயது’ என்பார்கள். ஆனால் இன்றைய வாழ்க்கையில் யார் அமைதியாக உட்கார்ந்து மென்று தின்கிறார்கள். யாரும் சரியான நேரத்தில் உணவு உண்பதில்லை. இரவுக்கு கடைகளில் இரண்டு மணிக்கு கூட உண்பவர்களைப் பார்க்கிறோம். அதனால் நாம் ஓய்வு கொடுக்காத வயிறு நமக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. குடல்புண் உள்ளவர்களுக்கு மேல்வயிற்றில் வலி, குமட்டல், வாந்தி, வாயில் புளிப்பு நீர் ஊறல், நெஞ்சு எரிச்சல் ஆகியவை ஏற்படும்.

உணவு முறை : –

1. காபி, டீ, போன்றவைகளை அருந்தக் கூடாது.

2. மது அருந்துதல், புகை பிடித்தலை அரவே விட வேண்டும்.

3. நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் உண்ண வேண்டும்.

4. உணவில் அதிகம் காரம் சேர்க்கக்கூடாது.

5. குறுகிய இடைவெளியில் அடிக்கடி மோர், இளநீர் ஏதாவது அருந்தலாம்.

6. உணவில் மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை ஆகியவைகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

7. காய்கறிகளில் எளிதில் செரிக்கும் கத்தரிப்பிஞ்சு வெண்டைப்பிஞ்சு, வாழைப்பூ, வாழைத்தண்டு, புடலம் பிஞ்சு ஆகியவைகளை கூட்டு செய்து சாப்பிடலாம்.

8. எளிதில் செரிக்கும் வாழைப்பழம், ஆப்பிள் சாறு போன்றவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Related posts

தசை சுளுக்கா? இதோ எளிய நிவாரணம்!

nathan

காது குடைந்து கொண்டே இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! அல்சர் வருவதற்கான காரணங்கள் மற்றும் குணமடையும் வழிகள்.!

nathan

உங்கள் குழந்தையின் கண்கள் சிவந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

nathan

பெண்களின் பிறப்புறுப்பு தூய்மை பற்றிய விஷயங்கள்.! அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

அன்று தங்கப் பல்…இன்று கோல்டு ஃபில்லிங்!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…இத உணவில் அதிகமா சேர்த்துக்கிட்டா மாரடைப்பு வர வாய்ப்பிருக்காம்!

nathan

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்

nathan

இரட்டைக் குழந்தைகள் பெத்துக்க ஆசைப்படுறீங்களா?

nathan