29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
5 burn a bay leaf in you
மருத்துவ குறிப்பு

. ஆச்சரியப்படுவீங்க..வீட்டுல 2 பிரியாணி இலையை எரிங்க.. 10 நிமிடம் கழிச்சு என்ன நடக்குதுன்னு பாருங்க.

பிரியாணி இலை இல்லாமல் இந்திய மசாலாப் பொருட்கள் முழுமையடையாது. இத்தகைய பிரியாணி இலை உணவின் மணம் மற்றும் சுவையை மேம்படுத்த பயன்படுத்தக்கூடியது. இதில் உடலுக்கு நன்மை பயக்கும் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பிரியாணி இலை உணவில் மட்டுமின்றி, வீட்டினுள் சுற்றும் காற்றை சுத்தப்படுத்தவும், மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கவும் பயன்படும் என்பது தெரியுமா? ஆம், இது நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத விஷயமாக இருக்கலாம். ஆனால் இது முற்றிலும் உண்மை. இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.

பிரியாணி இலை

பிரியாணி இலையை எரித்த பிறகு, அதிலிருந்து வெளிவரும் புகை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் வீட்டில் 1-2 பிரியாணி இலையை எரித்தால், வீட்டில் சுற்றும் புகை சுத்தமாவதோடு, மனநிலையும் சிறப்பாக இருக்கும். பிரியாணி இலையில் உள்ள யூஜெனோல் மற்றும் மைர்சீன் என்ற இரண்டு சேர்மங்கள் உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே பிரியாணி இலைகளை எரித்த பிறகு, அதன் வாசனை மூளையின் நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, டென்சனை நீக்குகிறது. பிரியாணி இலைகளின் லேசான புகை ஒவ்வாமை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனல் இது மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள வீக்கத்தை நீக்குகிறது.

மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான எளிய வழி

பிரியாணி இலையை வீட்டில் எரிப்பதால், மன அழுத்தம் மற்றும் மன கவலையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பிரியாணி இலையில் லினாலூல் என்னும் தனித்துவமான பொருள் உள்ளது. இது மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடியது. ஆகவே நீங்கள் ஒருவித மன அழுத்தத்தால் இருப்பது போன்று உணர்ந்தால், உங்கள் படுக்கையறையில் 2 பிரியாணி இலையை எரித்து, அதன் புகையை 10 நிமிடம் சுவாசியுங்கள். இதனால் முன்பை விட ஒரு நல்ல மாற்றத்தை உணர்வீர்கள். இருப்பினும் பிரியாணி இலையை மூக்கின் அருகில் வைத்து எரித்து, அதன் புகையை நேரடியாக சுவாசிக்கக்கூடாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

சிறந்த ஏர் பிரஷ்னர்

உங்கள் வீட்டினுள் துர்நாற்றம் வீசினால், அதை நீக்க பிரியாணி இலை பெரிதும் உதவி புரியும். கடைகளில் விற்கப்படும் விலை உயர்ந்த ஏர் பிரஷ்னர்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக, பிரியாணி இலையை பயன்படுத்துவது சிறந்தது மட்டுமின்றி ஆரோக்கியமானதும் கூட. கடைகளில் உள்ள ஏர் பிரஷ்னர்களின் பல வகையான கெமிக்கல்கள் மற்றும் செயற்கை நறுமணமூட்டிகள் நிரம்பியிருக்கும். இவை ஆரோக்கியத்திற்கு தீங்கை விளைவிக்கக்கூடியவை. மேலும் இது குழந்தைகளின் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதுவே இயற்கையான பிரியாணி இலையை வீட்டில் எரித்தால், அதன் மணம் வீட்டில் ஒரு நல்ல நறுமணமூட்டியாக செயல்பட்டு, மனநிலையையும் சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும்.

காற்றை சுத்தப்படுத்தும் பிரியாணி இலை

தற்போது கொரோனா வைரஸ் பரவல் முக்கிய பிரச்சனையாக உள்ளது. பல பகுதிகளில் கொரோனாவால் ஏராளமான மக்கள் மரணமடைந்து வருகின்றனர். உங்கள் வீட்டினுள் உள்ள காற்றினை சுத்தப்படுத்த விரும்பினால், வீட்டில் 2-3 பிரியாணி இலையை எரியுங்கள். இதிலிருந்து வெளிவரும் புகை மற்றும் வாசனை வீட்டினுள் சுற்றும் காற்றினை சுத்தப்படுத்தும். அதோடு, பிரியாணி இலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், மனதிற்கு அமைதியை வழங்கும்.

வீட்டில் பிரியாணி இலையை எரிக்கும் சரியான வழி என்ன?

* முதலில் ஒரு பாத்திரத்தில் 2-3 நன்கு உலர்ந்த பிரியாணி இலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் வீட்டின் படுக்கை அறையில் நுழைந்து, அங்குள்ள ஜன்னல் மற்றும் நுழைவு வாயில் கதவுகளை மூடிவிட்டு, பிரியாணி இலையில் நெருப்பை மூட்டிவிட்டு, அறையை மூடிவிட்டு வெளியே வந்துவிட வேண்டும்.

* 10 நிமிடம் கழித்து, அந்த அறைக்குள் சென்று, ஆழமாக சுவாசியுங்கள். இப்படி ஒரு 5-7 முறை அந்த அறைக்குள் சென்று வாருங்கள். இதனால் உங்கள் உடலில் ஒருவித மாற்றம் ஏற்பட்டிருப்பதை நீங்களே உணர்வீர்கள்.

Related posts

அபார்ஷனுக்கு பிறகு நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்

nathan

எண் 1 (1,10, 19, 28)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

nathan

குட்டீஸ் சுட்டீஸ் – அதிகம் தாக்கும் 6 பிரச்னைகள் பேரன்டிங் கைடு!!

nathan

நாம் சாப்பிடும் மருந்துகள் விஷமாகும் அதிர்ச்சி!அப்ப இத படிங்க!

nathan

எந்த உணவு சாப்பிட்டாலும் புளிப்புத் தன்மையுடன் மேலே ஏப்பம் வருகிறது. இதை acid reflux என்கிறார்கள். இ…

nathan

கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியவை

nathan

இளம் பருவத்தினரைப் பாதிக்கும் மன அழுத்தம்

nathan

இரட்டைக் குழந்தைகள் பெத்துக்க ஆசைப்படுறீங்களா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்ப கால நீரிழிவிலிருந்து தப்புவது எப்படி?

nathan