25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
soakedwalnuts 1
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…தினமும் ஒரு கையளவு நீரில் ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

நம்மில் பலருக்கும் வால்நட்ஸ் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவும் மட்டும் தான் உதவும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வால்நட்ஸ் மூளை ஆரோக்கியத்திற்கு மட்டும் நல்லதல்ல. அதை சரியான வழியில் உட்கொண்டால், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

வால்நட்ஸின் முழு நன்மைகளையும் பெற விரும்பினால், அதற்கான சிறப்பான வழி ஊற வைத்து சாப்பிடுவது தான். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் இரவு தூங்குவதற்கு முன் ஒரு கையளவு வால்நட்ஸை ஒரு பௌலில் போட்டு நீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும்.

வால்நட்ஸின் தோலை ஏன் நீக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். வால்நட்ஸின் தோலில் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதால், அதை நீக்கி விட்டு உண்பதே சிறந்தது. வால்நட்ஸை ஊற வைத்து சாப்பிடுவதனால் பெறும் மற்றொரு நன்மை, எளிதில் செரிமானமாகும்.

வால்நட்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பொதுவாக நட்ஸ்களில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கும் மற்றும் அதில் சிறப்பான ஒன்று தான் வால்நட்ஸ். இதில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், நல்ல கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்களான வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. இப்போது வால்நட்ஸை ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று காண்போம்.

இதய நோய் தடுக்கப்படும்

வால்நட்ஸை ஊற வைத்து சாப்பிடும் போது, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைய ஆரம்பிக்கும் மற்றும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு சீராக பராமரிக்கப்படும். இதன் விளைவாக இதயம் தொடர்பான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

சர்க்கரை நோய் கட்டுப்படும்

பல்வேறு ஆய்வுகளில் ஊற வைத்த வால்நட்ஸை தினமும் சாப்பிடுவதனால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக டைப்-2 சர்க்கரை நோய்க்கு இது மிகவும் நல்லது என தெரிய வந்துள்ளது.

புற்றுநோயை எதிர்த்துப் போராடும்

வால்நட்ஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் மட்டுமின்றி, இதர உட்பொருட்கள் உடலில் இருக்கும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே புற்றுநோய் வராமல் இருக்க நினைத்தால், தினமும் ஒரு கையளவு ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

மன அழுத்தம் மற்றும் மன கவலையை எதிர்க்கும்

வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. ஆகவே இது மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம், கவலை போன்றவற்றை எதிர்த்துப் போராட உதவும் சிறப்பான பொருளாக விளங்குகிறது. ஒருவர் தினமும் ஒரு வால்நட்ஸை ஊற வைத்து சாப்பிட்டால், மன அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, மனநிலை எப்போதும் சிறப்பாக இருக்கும்.

மெட்டபாலிசம் மேம்படும்

வால்நட்ஸில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், காப்பர், ஜிங்க் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், இதை தினமும் ஒருவர் உட்கொள்ளும் போது, உடலின் மெட்டபாலிசம் மேம்படும்.

எடை இழப்பு

வால்நட்ஸில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புக்கள் அடங்கியுள்ளது. இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். ஆகவே இதனை ஒருவர் தினமும் உட்கொள்ளும் போது, அது உடல் எடை இழப்புக்கு உதவுவதோடு, உடல் பருமனடைவதையும் தடுக்கும்.

நல்ல தூக்கம்

வால்நட்ஸில் மெலடோனின் என்னும் உட்பொருள் உள்ளது. இது நல்ல நிம்மதியான தூக்கத்தைத் தூண்ட உதவும். எனவே நீங்கள் தினமும் நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெற நினைத்தால், காலையில் மட்டுமின்றி, இரவு தூங்கும் முன் சில துண்டுகள் நீரில் ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிடுங்கள்.

வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள்

வால்நட்ஸில் எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்குத் தேவையான ஆல்பா லினோலினிக் அமிலம் என்னும் மிகவும் முக்கியமான உட்பொருள் உள்ளது. உங்களுக்கு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால் தினமும் ஒரு கையளவு நீரில் ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிடுங்கள்.10 brain 15882

மூளை ஆரோக்கியம்

வால்நட்ஸ் மூளை ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும் என்பது பலரும் அறிந்த ஒன்று. ஏனெனில் வால்நட்ஸில் மூளையின் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.

Related posts

தெரிஞ்சிக்கங்க…வேப்ப எண்ணெயில் இவ்வளவு பலன் இருக்கா?

nathan

உங்களுக்கு சைனஸ் பிரச்னையை விரட்ட வேண்டுமா? இதை மட்டும் இனி செய்யுங்க

nathan

தலைவலி எதனால் ஏற்படுகிறது? அதனை தடுக்க என்ன செய்யலாம்….

nathan

நாவூறும் யாழ்ப்பாணத் தோசை செய்முறை விளக்கம்!!!

nathan

வாந்தியை கட்டுப்படுத்தும் இலந்தை பழம்

nathan

மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகள் தேவையா ?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! தாமதமாக குழந்தைப் பெற்றுக்கொள்ள நினைக்கும் தம்பதியா நீங்க???

nathan

கை கால் எரிவுக்கான -சித்த மருந்துகள்

nathan

குங்குமப்பூவை கர்ப்பிணிகள் உண்பது எதற்காக தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan