23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
10 cup 159
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் காலத்தில் சுகாதாரம் ஏன் மிகவும் முக்கியம் என்று தெரியுமா?

மாதவிடாய் என்பது இனப்பெருக்க சுழற்சியின் இயற்கையான ஒரு பகுதியாகும். ஆனால் பல வளரும் நாடுகளில் தகவல் பற்றாக்குறை காரணமாக மாதவிடாய் காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதாரத்தைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. மேலும் இது குறித்த தவறான புரிதல்களும் உண்டு. அதனால் பிறப்புறுப்பு தொற்று போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகின்றன.

மாதவிடாய் காலத்தில் சுகாதார மேலாண்மை குறித்த முக்கியத்துவத்தை இந்த பதிவின் மூலம் உங்களுக்கு வழங்கவிருக்கிறோம். அதனால் இது குறித்த விழிப்புணர்வை பெற முடியும் என்று நம்புகிறோம்.

1. மாதவிடாய் குறித்து கற்றுக்கொள்வதால் சிறுமிகள் பல புதிய வழிகளில் தங்களை பராமரித்துக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு ஏற்படகூடிடய மாதவிடாய் குறித்து சிறுமிகள் அறிந்து கொள்வதால் தங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய ஒரு பொறுப்பு பெண்களுக்கு உண்டாகிறது.

2. வழக்கமான முறையில் வாழ்வதற்கு பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் ஒருவித தன்னம்பிக்கை தோன்றுகிறது:

மாதவிடாய் இரத்தப்போக்கை சேகரிப்பதற்காக சரியான சுகாதார தேர்வுகளை பெண்கள் கண்டறியும் போது மாதவிடாய் அல்லாத காலத்தில் அவர்கள் செய்ய கூடிய எல்லா வேலைகளையும் மாதவிடாய் காலத்திலும் பெண்களாலும் சிறுமிகளாலும் செய்ய முடிகிறது.5 period 15906

3. மாதவிடாய் சுகாதாரத்தை பேணுவதால் பள்ளி கல்வியை தொடர முடிகிறது :

மாதவிடாய் தொடங்கியவுடன் 5ல் 1 பெண் பிள்ளை தன்னுடைய பள்ளி கல்வியை இழக்க நேரிடுகிறது. தொடர்ந்து பள்ளிக்கு செல்லும் பெண் பிள்ளைகள் மாதத்தில் குறைந்தது 5 நாட்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் போக நேரிடுகிறது. இதற்கு காரணாம் மாதவிடாய் காலத்தில் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பொருட்கள் இல்லாத நிலை மட்டுமே.

4. ஆண்களை போல் பெண்களும் செயல்பட மாதவிடாய் சுகாதார பொருட்கள் உதவுகின்றன:

நவீன சானிட்டரி பொருட்களை பயன்படுத்துவதால் பெண் பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் போகும் நிலை குறைகிறது. மேலும் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத நிலை, பள்ளி படிப்பை பாதியில் கைவிடும் நிலை போன்றவை குறைகிறது. பெண் பிள்ளைகள் பள்ளி படிப்பை தொடர முடியாமல் போகும் நிலை ஏற்படுவதால் பள்ளியிலும் வெளி இடங்களிலும் ஆண்களுடன் போட்டிபோடும் நிலை இல்லாமல் அவர்களுக்கு அடங்கிவிடும் நிலை உண்டாகிறது.

5. கலாச்சார மூட நம்பிக்கை மற்றும் கட்டுக்கதைகளை களைய உதவுகிறது:

பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் தங்கள் உடல் பற்றிய உயிரியல் மற்றும் சுகாதாரம் தொடர்பான உண்மைகள் விளக்கப்படுவதால் கலாச்சார மூடநம்பிக்கைகள் மற்றும் தேவையற்ற கட்டுக்கதைகள் களையப்படுகின்றன. சுகாதாரம் மற்றும் போதுமான சானிட்டரி பொருட்கள் குறித்த தகவல்கள் சரியான நேரத்தில் பெண்களுக்கு கிடைக்கப்படுவதால் பெண்கள் மேலும் தன்னம்பிக்கையுடன் இருக்க முடிகிறது. அவர்கள் உடல் குறித்த சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு அவர்களுக்கு சௌகரியமான சூழ்நிலை கிடைக்கிறது.

6. பெண்கள் தாங்கள் அசுத்தமானவர்கள் என்ற நினைப்பை களைந்துவிட உதவுகிறது:

பாரம்பரிய இந்துக்கள் இல்லத்தில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் எந்த ஒரு மத சார்பான சடங்குகள் செய்யவும், இறைவனின் சிலைகளைத் தொடவும் , இறைவனை துதிப்பதையும் , ஆலயங்களுக்கு செல்வதையும், சமைக்கவும், பரிமாறவும் , குடிநீரை தொடவும் அனுமதிப்பதில்லை. இதற்கு காரணம் அந்த நாட்களில் அவர்கள் அசுத்தமானவர்கள் என்று கருதப்படுகின்றனர்.

7. மாதவிடாய் சுகாதாரம் குறித்த சரியான தகவல்கள், மாதவிடாய் இரத்தபோக்கு குறித்த ஆண்களின் தவறான புரிதல் மற்றும் ஆண்களின் அறிவு இடைவெளி போன்றவற்றை போக்க உதவுகிறது:

ஆண்களுக்கு அறிமுகம் இல்லாத மாதவிடாய் குறித்த ஒரு திறந்த கலந்துரையாடல் அவர்களுக்கு ஒரு புரிதலை உண்டாக்க உதவுகிறது. பொதுவாக ஒரு வீட்டில் தந்தை நிதி நிலைமையை நன்கு அறிந்தவர் என்பதால் அவருக்கு மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவதால் மாதவிடாய் காலத்திற்கு தேவையான பாதுகாப்பு பொருட்கள் வாங்க அவர் நிதி நிலையை ஒதுக்கலாம்.

8. மாதவிடாய் சுகாதார மேலாண்மையைப் பற்றி கற்றுக் கொள்வதால் சுத்தமாக இருக்கும் நிலை உண்டாகிறது:

மாதவிடாய் காலத்தில் எந்த சானிட்டரி பொருட்களை வாங்குவது, அதனை எவ்வாறு பயன்படுத்துவது, எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை அதனை மாற்றுவது, அவற்றை சுத்தம் செய்ய ஏதுவான தண்ணீர் தேவை போன்ற சூழ்நிலையை அமைத்து கொடுப்பது போன்றவை பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்தை நிர்வகிக்க உதவியாக இருக்கும்.

9. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பை குறைக்க உதவுகிறது:

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உண்டாகும் இறப்பில் 27% இந்தியாவில் உண்டாகிறது என்று உலக சுகாதர நிறுவனம் குறிப்பிடுகிறது. இந்த நோய்க்கு மோசமான மாதவிடாய் சுகாதாரம் ஒரு முக்கிய காரணம் என்று இந்த நோய் குறித்து ஆய்வு செய்யும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மாதவிடாய் சுகாதாரம் சரியாக நிர்வகிக்கப்படாமல் இருப்பதால் பிறப்புறுப்பு தொற்று பாதிப்பு அபாயம் அதிகரித்து, இனப்பெருக்க பாதையின் இயற்கை தற்காப்பு குறைக்கப்படுகிறது. பாலியல் ரீதியாக கடத்தப்படும், ஹ்யுமன் பாப்பிலோமா என்னும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு காரணமான நுண்கிருமியை எதிர்த்து போராடும் தன்மை பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் காரணமாக குறைகிறது.10 cup 159

10. கழிவு பொருட்கள் எண்ணிக்கையை குறைக்கும் விதத்தில் மறுமுறை பயன்படுத்தும் சானிட்டரி பொருட்களை பயன்படுத்தலாம்:

10. கழிவு பொருட்கள் எண்ணிக்கையை குறைக்கும் விதத்தில் மறுமுறை பயன்படுத்தும் சானிட்டரி பொருட்களை பயன்படுத்தலாம்:
ஒரு முறை பயன்படுத்திய சானிட்டரி பொருட்களை ஒவ்வொரு பெண்ணும் தூக்கி எறிவதால் உலகின் கழிவுகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று ஒரு புறம் கூறப்படுகிறது. அதனால் கழிவுகள் எண்ணிக்கையை குறைக்கும் விதத்தில் சுத்தம் செய்து மறுமுறை பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்படும் சானிட்டரி பொருட்களை பயன்படுத்துவதால் கழிவுகள் எண்ணிக்கை குறையலாம்.

Related posts

வீட்டில் கள்ளிச் செடிகள் வைப்பதால் என்ன பயன்?

nathan

இரும்பு சத்து உள்ள உணவுகள்

nathan

புரோஸ்டேட் வீக்கம் வராம இருக்கணும்ன்னா… ஆண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த அறிகுறி உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்து மிக அதிகமாம்…

nathan

நம்பிக்கை தான் வாழ்க்கை

nathan

தெரிஞ்சிக்கங்க…பல் சொத்தை, பல் உடைதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரே தீர்வு!

nathan

ஈறு முதல் இதயம் வரை… நலம் பல தரும் அர்ஜூனா!

nathan

பெண்களுக்கு 10 முதல் 60 வயதிற்கு மேல் வரும் பிரச்சனைகளும் – தீர்வும்

nathan

இந்த பிரச்சனைகள் தான் மாதவிடாய் சரியாக வராததற்கு காரணம்

nathan