இயற்கையாக வெள்ளையாக வேண்டுமானால், தினமும் இரவில் படுக்கும் முன் பாலை பஞ்சில் நனைத்து, முகத்தை நன்கு துடைக்க வேண்டும். இப்படி
தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் வெளியேறி, சருமத்துளைகள் இரவில் தங்குதடையின்றி சுவாசித்து, நல்ல ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தைப் பெற உதவுகிறது.
* முகத்தை பால் கொண்டு நன்கு துடைத்து எடுத்த பின்னர், இரவில் முதுமையை தடுக்கும் படியான மென்மையான மாய்ஸ்சுரைசரை தடவினால், பாதிப்படைந்த சரும செல்களானது புதுப்பிக்கப்படும்.
* முக்கியமாக இரவில் படுக்கும் முன் கண்களுக்கு மேலேயும், கண் இமைகளிலும் பெட்ரோலியம் ஜெல்லியை தடவி மசாஜ் செய்து, தூங்கினால், காலையில் எழும் போது கண்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
* இரவில் உதடுகளுக்கு ஈரப்பசையூட்ட மறக்காதீர்கள். அதற்கு நல்ல தரமான லிப் பாம்களை இரவில் படுக்கும் முன் உதடுகளுக்கு தடவுங்கள். இதனால் உதடுகள் மென்மையாகவும், வறட்சியடையாமலும் அழகாக இருக்கும்.