மிகவும் மென்மையான சிவந்த உதடுகள் வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், நாம் ஒன்று நினைத்தால் அது ஒன்றாக நடக்கிறது. நாம் நினைப்பது போன்று அழகிய உதடுகளை பெற லிப்ஸ்டிக், மேக்கப் போன்றவற்றை காட்டிலும் இயற்கை ரீதியில் சில குறிப்புகளை பயன்படுத்தினால்
நல்ல பலன் கிடைக்கும் என இயற்கை சார்ந்த அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரே இரவில் செக்க சிவந்த மென்மையான உதடுகளை பெற இந்த பாதியில் கூறும் அழகியல் குறிப்புகளை செய்து வாருங்கள்.
காதலில் குறியீடு..!
காதலின் ஊடலில் முத்தமும் அடங்கும். ஒருவரை ஒருவர் தனது அன்பை பரிமாறி கொள்ள இந்த உதடுகள் மிகவும் உதவுகிறது. உதடுகள் மென்மையாகவும் செக்க சிவந்தும் இருந்தால் அழகிய தோற்றத்தை தரும். உண்மையில் காதலில் ஒரு முக்கிய குறியீடாக இந்த உதடுகள் இருக்கின்றன.
எளிய முறை
உங்களின் உதடுகளை அழகாகவும் மிக மென்மையாகவும் வைத்து கொள்ள இந்த குறிப்பை பயன்படுத்துங்கள்.
தேவையானவை :-
தேன் 1 ஸ்பூன்
வெள்ளை (அ) பிரவுன் சுகர் 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்
செய்முறை :-
முதலில் சர்க்கரையை தேனுடன் நன்கு கலந்து கொள்ளவும். பிறகு இதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். 30 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் உதட்டை கழுவினால் உதடு மென்மை பெறும். இதே போன்று தினமும் செய்து வந்தால் உதடுகள் அழகாக இருக்கும்.
சிவந்த உதடு வேண்டுமா..?
உதடுகள் பார்ப்பதற்கு சிவப்பாக இருக்க ஒரு அருமையான குறிப்பு இதுவே. இதனை தயாரிக்க தேவையானவை…
1 கைப்பிடி மாதுளை
பால் கிரீம் (அ) பால்
செய்முறை :-
முதலில் மாதுளை மற்றும் பால் கிரீமை ஒன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இதனை உதட்டில் தடவி கொள்ளவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் உதட்டை கழுவினால் உதடு சிவப்பாக இருக்கும். இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வரலாம்.
பிங்க் உதடுகள்
மெல்லிய பிங்க் நிறத்தில் உதடுகள் வேண்டுமென்றால் அத்றகு வெள்ளரிக்காயை 1 துண்டு அரிந்து கொண்டு உதட்டில் தேய்க்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உதடுகள் பிங்க் நிறத்தில் மாறி விடும்.
ஈரப்பதமான உதடு வேண்டுமா..?
வறண்ட உதட்டை மென்மையாகவைத்து கொள்ள எளிமையான வழி உள்ளது.
தேவையானவை :-
ரோஜா இதழ்கள் 5
பால் அரை கப்
செய்முறை :-
ரோஜா இதழை 30 நிமிடம் பாலில் ஊற வைக்க வேண்டும். பிறகு இதனை எடுத்து அதன் சாற்றை மட்டும் பிழிந்து கொள்ளவும். இந்த சாற்றுடன் தேன் கலந்து உதட்டில் தடவவும். இவ்வாறு தடவி வந்தால் உதட்டின் வறட்சி தன்மை மாறி ஈரப்பதமாக இருக்கும்.
எலுமிச்சை வைத்தியம்
உதடு எப்போதும் மிருதுவாக இருக்க இந்த எலுமிச்சை வைத்தியம் உங்களுக்கு உதவும். எலுமிச்சையை ஒரு துண்டு அரிந்து அதன் மேல் சர்க்கரை தூவி உதட்டில் தடவவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் உதட்டை கழுவினால் உதடு மிக அழகாகவும், மிருதுவாகவும் மாறும்.